இந்த சீரீசை உருவாக்கியவர் Lost சீரீஸ் உருவாக்கியவர்களில் ஒருவரான , மேலும் MI-3 , Star Trek , Super 8 போன்ற படங்களின் டைரக்டர் J.J Abrams. Lost சீரீஸ் ஒன்றே போதும் இவரது திறமைக்கு. மேலும் வரப்போகும் Star Trek இரண்டாம் பாகம் மற்றும் Star Warsஇன் அடுத்த பாக டைரக்டரும் இவரே.
இதற்கு உதவ மற்றும் ஆராய விஞ்ஞானி Walter ஐ அணுகுகிறாள். ஆனால் Walter இருப்பதோ மனநல மருத்துவமனையில், மேலும் பழைய நினைவுகள் பலவற்றை மறந்த நிலையிலும், நிலையான மனநிலை இல்லாதவராக இருக்கிறார். எனவே அவரை கட்டுக்குள் வைக்கவும், செயல் பட வைக்கவும் அவரது மகன் Peter ஐயும் உடன் சேர்த்து கொள்கிறாள். இந்த மூவர் குழு Fringe நிகழ்வுகளை ஆராய ஆரம்பிக்கிறது. Peter தான் சிறுவயதிலேயே இறந்து விட்டானே எப்படி வந்தான் என கேட்பவர்களுக்கு விடை , இரண்டாவது சீசனில் .
இப்படி Fringe நிகழ்வுகளை ஆராய்ந்து , நடக்க போகும் விபரீதங்களை தடுத்து கேஸை முடிப்பதாக The X Files சீரீஸ் போலவே செல்லும் முதல் சீசன் ஏழு ,எட்டு எபிசொடுகளுக்கு பிறகு புது தடத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது. மதில்களை வழியே ஊடுருவி சென்று பல பேங்க் safe deposit boxகளை கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல். அந்த safe deposit boxகளிருந்து எடுக்கப்பட்ட பாகங்களை இணைத்து உருவாக்கப்படும் teleportation device மூலமாக யாரும் தப்பவே முடியாத ஜெர்மன் சிறையில் இருந்து teleportation மூலமாக தப்புகிறான் Jones என்பவன்.
இதிலிருந்து விறுவிறுவென சூடு பிடித்து ஓடும இந்த சீரீஸ் முதல் சீசன் முடிவிலிருந்து ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. காரில் சென்று கொண்டிருக்கும் Olivia திடீரென காணாமல் போக... Peter 1978-1985 என பொறிக்க பட்டிருக்கும் தன் மகன் Peter கல்லறைக்கு Walter சென்று அஞ்சலி செலுத்த... காணாமல் போன Olivia 9/11/2001 இல் தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட World Trade Center இல் இருக்க...ஆனால் வருடம் 2008 ... என பல திருப்பங்களோடு முடியும் முதல் சீசன் இரண்டாவது சீசனை உடனே பார்க்க வைத்து விடும். முதல் சீசனின் ட்ரைலர் கீழே
முதல் சீசனின் முடிவு தான் இப்படி என்றால் இரண்டாவது சீசனின் ஆரம்பம் அடுத்து வரும் 20 வினாடிகள் டைட்டிலை கூட பார்க்க பொறுக்காமல் ஓட்ட வைத்தது. திடீரென காரிலிருந்து காணாமல் போன Oliviaவை தேடி Walter மற்றும் Peter கார் இருக்கும் இடத்திருக்கு வர, Walter காரின் உள்ளே சென்று ஆராய அடுத்து நடப்பதை கீழே உள்ள லிங்கில் பாருங்கள்...
முதல் சீசன் முடிவு போலவே இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன் முடிவுகளும் உங்களை அடுத்த சீசனுக்காக காத்திருக்க முடியாமல் இருக்க வைக்கும். அதிலும் மூன்றாவது சீசனின் முடிவு இந்த சீரீஸின் பெஸ்ட் Finale. நாலாவது சீசன் பாதி வரை நன்றாக செல்லும் சீரீஸ் அதற்கடுத்து எல்லா சீரீஸ் போல கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை தான். நாலாவது சீசனோடு முடித்திருக்கலாம். ஐந்தாவதாக 13 எபிசோடு கொண்ட சீசன் என இழுத்து போன வாரம் தான் முடித்திருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை Sci-Fi ரசிகர்களுக்கான சரியான தீனி இந்த சீரீஸ் . அனைத்து சீசன்களும் முடிந்து விட்டதால் மொத்தமாக டவுன்லோட் செய்து பார்த்து விடலாம்.
- லக்கி லிமட்










