விபரீத கோரிக்கை (Black Mirror - TV series -The National Anthem)


 Black Mirror என்ற மூன்று பாகங்களை கொண்ட மினி டிவி சீரீஸ் Channel 4  என்ற பிரிட்டிஷ் சேனலில் ஒளிபரப்பானது. மூன்று பாகங்களும் வெவ்வேறு கதைகளை கொண்ட இந்த மினி டிவி சீரீஸின் முதல் கதையைபற்றி தான் இந்த பதிவு.

The National Anthem என்ற முதல் கதை சற்றே மாறுபட்ட கடத்தல் கதை. நாட்டின் பிரதமருக்கு அதிகாலை ஒரு போன் கால் வருகிறது. நாட்டின் இளவரசி கடத்தப்பட்டதாகவும் , கடத்தியவன் அனுப்பிய கோரிக்கை வீடியோவை பார்க்க அழைப்பு வருகிறது. கடத்தியவன் அனுப்பிய கோரிக்கை வீடியோவை சக அதிகாரிகளுடன் பார்க்கிறார்.
அதில் இளவரசியை கடத்தியவன் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் அவனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தவறினால் இளவரசி கொல்லபடுவாள் என கூறுகிறான். அவனது கோரிக்கையை கேட்கும் அனைவரும் திடுகிடுகின்றனர் முக்கியமாக.பிரதமர்.

கோரிக்கை இது தான் மாலை 4 மணிக்கு பிரதமர் நாட்டின் தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பாக ஒரு பன்றியுடன் உறவு கொள்ள வேண்டும். இதை கேட்ட பிரதமர் கொதிப்படைகிறார். 4 மணிக்குள் கடத்தல்காரனை பிடிக்க உத்தரவிடுகிறார். மேலும் இந்த விஷயம் மீடியா மற்றும் மக்கள் யாருக்கும் தெரியக்கூடாது என கூறுகிறார்.

ஆனால் அந்த வீடியோ youtubeல் தான் ஏற்றப்பட்டது என்றும் , அதை 9 நிமிடங்களில் நீக்கி விட்டாலும் பலர் டவுன்லோட் செய்து பகிர்ந்து விட்டதாலும் பலருக்கு தெரிந்து விட்டது என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மீடியாவை மட்டும் இந்த செய்தியை ஒளிபரப்பாமல் தடுத்து விட்டதாக கூறுகின்றனர்.

ஆனால் விஷயம் வெளிநாட்டு மீடியாகளால் ஒளிபரப்பட்டு விடுவதால் உள்ளூர் மீடியா அனைத்தும் செய்தியை ஒளிபரப்பி விடுகின்றன. இதனால் நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. அனைவரும் பிரதமர் என்ன செய்ய போகிறார் என எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர். அனைத்து மீடியா சேனல்களிலும் இந்த செய்தியே பேச படுகிறது.

இதற்கிடையே பிரதமரின் ஆணைப்படி கடத்தல்காரனை 4 மணிக்குள் பிடிக்க முயற்சி நடக்கிறது. அவன் youtubeல் ஏற்றிய வீடியோவை வைத்து பிடிக்க முயலுகின்றனர். ஆனால் தோல்வியில் முடிகின்றது.
மேலும் வேறொரு பலான பட  நடிகனை வைத்து பன்றியோடு உறவு கொள்ள வைத்து அதை கிராபிக்ஸ் மூலம் பிரதமரின் முகமாக மாற்றி ஒளிபரப்ப ஏற்பாடு நடக்கிறது. இதை தெரிந்து கொண்ட கடத்தல்காரன் இளவரசியின் விரலை வெட்டி அனுப்பி அதனுடன் வெட்டிய வீடியோவையும் அனுப்பி என்னை ஏமாற்ற முடியாது , பிரதமர் நேரடியாக பன்றியோடு உறவு வைத்தே ஆக வேண்டும் என்கிறான்.

நேரம் செல்ல செல்ல பிரதமரின் டென்ஷன் அதிகரிக்கிறது. தான் தற்கொலை செய்து கொண்டாலும் , பன்றியோடு உறவு கொள்ள முடியாது என எதை செய்தாலும் இளவரசி கொல்லபடுவாள். மக்களும் இளவரசியை காப்பாற்ற பிரதமர் இதை செய்தே ஆக வேண்டும் என மீடியாக்களின் வாக்கெடுப்பில் கூறுகின்றனர். கடைசிவரை கடத்தல்காரனை பிடிக்கவும் முடியவில்லை. இதனால் பன்றியோடு உறவு கொள்ள பிரதமர் தயாராகிறார்.

இதை நேரடியாக ஒளிபரப்ப மீடியாவும் ரெடி ஆகின்றன. இந்த ஒளிபரப்பை யாரும் பதிவு(Record) செய்ய கூடாது மீறினால் அது அரச குற்றம் என்ற அறிவிப்புடன் ஒளிபரப்பு தொடங்குகிறது. ஆனால் அனைவரும் record செய்ய ஆரம்பிக்கின்றனர். பிரதமர் பன்றி முன் 4 மணிக்கு கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார். ஆனால் இளவரசி 3.30 மணிக்கே கடத்தல்காரனால் விடுவிக்கபடுகிறாள். நடுரோட்டில் விழுந்து கிடக்கிறாள்.ஆனால் அதை கவனிக்க ரோட்டில் யாருமில்லை. அனைவரும் இந்த ஒளிபரப்பையே பார்ப்பதால் யாரும் கவனிக்க வில்லை.

இதற்கு பின் நடந்தது? . பிரதமரின் நிலை என்ன? ஏன் கடத்தல்காரன் இளவரசியை கடத்தினான்? ஏன் 3.30 மணிக்கே விடுவித்தான் என்பதை சொன்னால் சுவாரசியம் போய்விடும். நீங்களே பார்த்து கொள்ளுங்கள். இந்த டிவி சீரீஸ் டோரன்டில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.
மேலும் விபரங்களுக்கு http://www.imdb.com/title/tt2085059/
Share:

9 comments:

  1. உண்மையில் படத்தின் கதைதான் இவ்வளவு சுவாரஸ்யமா அல்லது தங்கள் எழுத்துக்களா என்று சந்தேகம் வருகிறது.அவ்வளவு எளிதான பார்க்க ஆவலை தூண்டும் ஒரு பதிவு..கண்டிப்பாக இந்த தொடரை பார்க்க வேண்டும்..நன்றி.தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. யப்பா ... வாசிக்கவே செம த்ரில்லிங்கா இருக்கு ... கட்டாயம் பார்க்கணும். பார்ப்பேன்.

    இன்னும் இப்படி நிறைய அறிமுகப்படுத்துங்கள்.

    ReplyDelete
  3. எங்க இருந்துதான் இந்த சீரீஸை கண்டுபிடிச்சீங்களோ?
    கோரிக்கையை பார்த்தா காமெடியா இருக்குது.. கதையை பார்த்தா பரபரப்பா இருக்குது! சரி.. க்ளைமேக்ஸை நாமளே போய் பார்ப்போம்!!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இப்படி ஒரு டிவி சீரிஸ் இருக்கிறதே இங்கே வந்துதான் தெரிந்துகொண்டேன்.. நன்றி லிமட்.


    சாவி
    யின் தமிழ் சினிமா உலகம்


    மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

    ReplyDelete
  6. ஹாய் லக்கி லிமட் நண்பா.. எனக்கு சமீபத்துல லீப்ஸ்டர் ப்ளாக் அவார்டன்னு ஒரு விருது கிடைத்தது. இந்த விருதின் விதிமுறைப்படி எனக்கு பிடித்த 5 இளம்பதிவர்களுக்கு விருது அளிக்கனுமாம்..

    அந்த வரிசையில உங்களுக்கும் இந்த விருதை அளிக்கின்றேன். மேலதிக விவரங்களுக்கு -http://www.cinemajz.blogspot.com/2012/02/blog-post.html

    ReplyDelete
  7. இங்கு பார்க்கலாம்...
    http://www.channel4.com/programmes/black-mirror/4od#3281505

    ReplyDelete
  8. பாஸ்,
    மிக நல்ல சீரீஸ்-ஐ அறிமுக படுத்தி உள்ளீர்கள். செம கதை போல் தெரிகிறது. இந்த மாதிரி விறுவிறுப்பான கதை தான் எனக்கு பார்க்க பிடிக்கும். கிளைமாக்ஸ் பார்த்து விட்டு என் கருத்தை சொல்கிறேன்.
    கண்டிப்பா டவுன்லோட் செஞ்சு பார்துற வேண்டியது தான்.

    ReplyDelete
  9. நண்பரே,
    இன்னைக்கு தான் இந்த சீரீஸ் பார்த்தேன்..ரொம்ப நல்லா இருந்திச்சு.. ஆனா கிளைமாக்ஸ் தான் சப்புன்னு முடிஞ்சு போச்சு.. நான் ரொம்ப பெரிய ட்விஸ்ட் எதிர் பார்த்தேன்..கொஞ்சம் ஏமாற்றம் தான்..

    ReplyDelete