ஏற்கனவே கருந்தேளார் Avengers பற்றி ஆதி முதல் இறுதி வரை ஆராய்ச்சி கட்டுரையே வெளியிட்டுவிட்டார். அவரின் Avengers பதிவுகள் ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றி விட்டன. முதல் நாள் பார்க்க முடியாததால் இன்று காலை பகல் காட்சியே பார்த்து விட்டேன். பல நாள் கழித்து அருமையான சூப்பர் ஹீரோ படம் பார்த்த நிறைவு கிடைத்தது.சூப்பர் ஹீரோக்களில் எனக்கு பிடித்த ஆசாமி Spiderman தான். அடுத்தபடியாக Batman அதுவும் Batman Begins படத்துக்கு பிறகு தான்.
Iron Man , Hulk , Thor , Captain America என அனைவருக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்க( இவர்களை பற்றி அறியாதவர்கள் உடனே கருந்தேளாரின் பதிவுகளை பார்க்க ) அனைவரும் ஒன்றாக நடிக்கும் படம் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும். அதை ஏமாற்றாமல் அசத்தியிருக்கிறார்கள். படத்தின் கதை எப்போதுமே சூப்பர் ஹீரோ படங்களில் ஒன்று தான் உலகத்தை காப்பாற்றுவது. அது தான் இங்கேயும். கதையை மேலும் சற்று விரிவாக கருந்தேளாரின் இந்த பதிவில் பார்க்க. இங்கே படத்தில் கலக்குபவர்களை பற்றி பார்ப்போம்
அடுத்து நம்ம அயன் மேன் இவர் மற்ற ஹீரோக்களை கிண்டல் அடிப்பதில் ரசிகர்களை கவருகிறார். முக்கியமாக அயன் மேனும் , தோரும் முதலில் மோதும் காட்சிகள். ஆக்சன் காட்சிகளில் hulkகுக்கு அடுத்து அயன் மேன் தான். மாடியிலிருந்து கீழே விழும் போதே பறந்து வரும் அவரது அயன் மேன் உடையை மாற்றிக்கொண்டு பார்க்கும் காட்சியில் பயங்கர கரவோஷம். hulk மற்றும் ironman இருவரே அதிகமாக ரசிகர்களை கவருகிறார்கள். ஒரு கட்டத்தில் வில்லன் லோகி என்னிடம் ஒரு படையே இருக்கு என அயன்மேனிடம் சொல்ல அதுக்கு அயன்மேன் என்கிட்டே ஹல்க் இருக்குடா என கூறும் பதிலடி அருமை.
படத்தில் அடுத்த கவரும் அம்சம் சூப்பர் ஹீரோக்கள் அவர்களுக்கிடையே போடும் சண்டைகள். வில்லன்களிடையே மோதுவதை காட்டிலும் இரு ஹீரோக்கள் மோதுவது படு சுவராசியமாக இருக்கிறது. நான்கு சூப்பர் ஹீரோக்களில் கேப்டன் அமெரிக்கா பழமையானவர் என்பதாலோ என்னவோ ரசிக்கும் விடயங்கள் இவரிடம் குறைவு. சாதாரண ஹீரோ பீலிங்கே ஏற்படுத்துகிறார். தோர் ஆங்காங்கே அசத்துகிறார். தோரின் சுத்தியலை hulk தூக்க முடியாமல் இருக்க தோர் அதை தூக்கி ஹல்க்கை அடிக்கும் காட்சி என ரசிக்கும் காட்சிகள் படத்தில் ஏராளம்.
பார்த்தாச்சா .... இன்னும் நெகடிவ் விமர்சனம் ஒன்னு கூட படிக்கல. எல்லாரும் சூப்பர்னு சொல்றாங்க. எப்படியும் தியேட்டர்ல பார்க்கலாம்னு நினைக்கிறேன்.
ReplyDeleteவிமர்சனத்திற்கு நன்றி.
ஹாலிவுட்ரசிகன்,
ReplyDeleteகண்டிப்பா தியேட்டர்ல போய் பாருங்க
Nanba super indru than paarkka porean.iron man dress maaruvathu trailer pakkavaa irunthathu...
ReplyDeleteஉங்க விமர்சணத்தை பார்த்துடோம்ல போய் பார்துரவேண்டியது தான்
ReplyDeleteஒரு பதிவு போட்டுக்கேன் வந்து பாருங்க
6 சமூக வலைத்தளங்களை ஒரே தளத்தில் காணலாம்
படம் படு அட்டகாசம் போல.. கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன்!!
ReplyDeleteசெம படம் என்று உங்கள் விமர்சனம் அடித்து சொல்கிறது......இந்த வாரத்துக்கு இங்க டிக்கெட் எல்லாமே புல்... அடுத்த வாரம் வீக் எண்டு போலாம் என்று இருக்கிறேன்...
ReplyDeleteகண்டிப்பா IMDB Top10ல இந்த படம் வரும் என்று நினைக்குறேன்...
சூப்பர். இதை எப்படியும் இன்னொரு வாட்டி பார்க்காம உடமாட்டேன் :-)
ReplyDelete