பல சூப்பர் ஹீரோக்களில் முக்கியமானவர்கள் என மூவரை கூறலாம். அவர்கள் சூப்பர்மேன் , ஸ்பைடர்மேன் மற்றும் பேட்மேன். இவர்களில் பேட்மேன் ஒரு சூப்பர் ஹீரோ இல்லை எனலாம். அவரிடம் சிறப்பான அபரித சக்தி கிடையாது. பெரிய செல்வந்தரான பேட்மேன் தனது போராடும் திறனை கொண்டும் ,பணத்தின் துணை கொண்டும் எதிரிகளோடு போராடி மக்களை காப்பாற்றுகிறான். சூப்பர்மேனோ மனிதனே அல்ல. பலவித சக்திகளை இயற்கையாகவே கொண்ட வேற்று கிரகத்தில் இருந்து வந்தவன்.
சூப்பர்மேன் மற்றும் பேட்மேன் இருவரும் DC காமிக்ஸ் ஹீரோக்கள். சூப்பர்மேன் கார்டூனிலும் , காமிக்ஸிலும் வெற்றி பெற்றது போல் இன்னும் படங்களில் வெற்றி பெறவில்லை. இனி வரவிருக்கும் சூப்பர்மேன் படமான Man Of Steel படமாவது வெற்றிபெறுமா என பார்ப்போம்.அடுத்து பேட்மேன் , கிரிஸ்டோபர் நோலன் பேட்மேன் படம் எடுக்கும் வரை பேட்மேனும் படங்களில் வெற்றியை ருசிக்கவில்லை. ஆனால் தற்போது திரையில் வெற்றிகரமாக வலம் வரும் ஹீரோ பேட்மேனே. இவர்களுக்கு இணையான மற்றொரு சூப்பர் ஹீரோ நம்ம ஸ்பைடர்மேன். எனது பேவரிட் ஹீரோ. காமிக்ஸில் வெற்றிகரமாக வலம்வந்த ஸ்பைடர்மேன் திரைக்கு வந்த முதல் படமே வெற்றி தான்.
ஸ்பைடர் மேன் மற்ற ஹீரோக்களை விட சற்று வித்தியாசமானவன். சூப்பர்மேன் போல அதிக பலம் கொண்ட ஏலியனும் அல்ல. பேட்மேன் போல் எதிரிகளை எதிர்த்து போராட பயிற்சி பெற்றவனும் ,பணபலமும் உள்ளவன் அல்ல. பக்கத்துக்கு வீட்டு பையன் போல் இருப்பான். பணமில்லாமல் அன்றாட செலவுகளுக்கு கஷ்டப்படுபவன்.இதயம் முரளியை விட தாழ்வு மனப்பான்மை கொண்டவன். மேலும் தனக்கு தானே மதிப்பீடு செய்து கொண்டு , பேசி கொண்டு முடிவு எடுத்து கொள்பவன். தனது தாய்,தந்தையரை இழந்து தனது பெரியப்பா Ben மற்றும் மனைவி Aunt May ஆல் வளர்க்கப்படுபவன்.
சூப்பர் ஹீரோவாக இருப்பது மற்ற சூப்பர் ஹீரோக்களை விட ஸ்பைடர்மேன் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. காதல்,பள்ளி,நட்பு எல்லாமே ஸ்பைடர்மேனாக இருப்பதால் பாதிக்கப்படுகிறது. இவனது ஒரே நண்பன் Harry Osborn அவனும் அடுத்து அவனுக்கு எதிரியாகி விடுவது வேறு கதை. பல நேரங்களில் நல்லது செய்து விட்டு கேட்ட பெயரே வாங்குபவன். சொல்லபோனால் சூப்பர் ஹீரோ மற்றும் ஜீரோ. ஸ்பைடர்மேன் Avengers புகழ் Marvel காமிக்ஸின் படைப்பு. ஸ்பைடர் மேனை கதாபாத்திரத்தை உருவாக்கியவர் Avengers உருவாக்கிய அதே Stan Lee தான். ஸ்பைடர்மேன் காமிக்ஸில் அறிமுகமானது 1962 ஆம் வருடம். அறிமுகமான முதல் காமிக்ஸ் அட்டைபடத்தை மேலே காணலாம்.
Peter Parker என்ற ஸ்பைடர் மேனுக்கு இயற்கையாகவே சக்தி கிடையாது. நியோ ஜெனிக் என்ற ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட சிலந்தி ஒன்று கடிப்பதால் அவன் உடல் மாற்றமடைந்து சிலந்தி போல் சில சக்திகளை பெறுகிறான். அவை சூப்பர் Speed– படு வேகமாக செயலாற்றுவது, சூப்பர் Strength – சற்று அபரித உடல் வலிமை , சிலந்தி போல் மதில்களில் ஏறுவது கடைசி மற்றும் முக்கியமான ஒன்று வரும் ஆபத்தை முதலிலேயே உணர்ந்து கொள்ளும் உணர்வு Spider Sense.
என்னடா கைகளில் இருந்து வலை விடுவதை விட்டு விட்டதாக எண்ணலாம். இந்த சக்தி ஸ்பைடர்மேனுக்கு கிடையாது. இது அவனாக உருவாக்கிய web shooter என்ற கருவியே. அதை கையில் மாட்டிக்கொண்டு அது வெளியிடும் வலையை கட்டிடங்களில் மேல் பிடித்து கொண்டு செல்வான். மேலும் எதிரியை தாக்க மற்றும் கட்டிப்போட பயன்படுத்துவான். ஆனால் இதுவரை வந்த ஸ்பைடர் மேன் மூன்று படங்களில் அவன் பெற்ற ஒரு சக்தியாக அவனது கைகளில் இருந்தே வருவது போல் காட்டப்பட்டிருக்கும். ஆனால் காமிக்ஸில் அப்படி கிடையாது. தற்போது வரப்போகும் The Amazing Spiderman படத்தில் காமிக்ஸில் உள்ளது போல் அவன் உருவாக்கிய Web Shooter என்ற கருவி மூலமே வலை வெளிவரும். ட்ரைலரில் கூட இக்கருவியை Peter Parker உருவாக்குவதை காணலாம்.
The Amazing Spiderman படம் Spiderman Reboot என அழைக்கப்படுகிறது. அதாவது முதல் மூன்று பாகங்களை தொடராமல் ஆரம்பத்தில் இருந்து எடுக்கப்படுகிறது.மேலும் இதற்கு முன் வெளிவந்த மூன்று படங்களுக்கும் , காமிக்ஸ்க்கும் பல வேறுபாடுகள் இருக்கும். ஒன்று கையில் இருந்து வரும் வலை. மற்றொன்று ஸ்பைடர் மேன் காதலி. இதுவரை வந்த மூன்று படங்களில் Marry Jane காதலியாக காட்டப்பட்டிருக்கும். ஆனால் காமிக்ஸில் ஸ்பைடர் மேனின் முதல் காதலி Gwen Stacy. இவள் Green Goblin (முதல் பாக வில்லன்) என்ற வில்லனால் கொல்லபடுகிறாள். அதன் பிறகே Marry Jane வருகிறாள். வரப்போகும் The Amazing Spiderman படத்தில் காமிக்ஸில் உள்ளது போல் Gwen Stacy கதாபாத்திரம் வருகிறது. Marry Jane கிடையாது. Amazing Spiderman முழுக்க காமிக்சை ஒட்டியே எடுக்கப்பட்டுள்ளது.
Marvel Avengers படத்தின் அடுத்த பாகத்தில் Spiderman இடம் பெறலாம் என பலரின் கணிப்பாக இருக்கிறது. கருந்தேளார் கூட இதை பற்றி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அது Marvel நிறுவனத்தின் கையில் மட்டும் இல்லை. Sony நிறுவனத்தின் கையிலும் உள்ளது. Spiderman படங்களை எடுக்கும் உரிமை Sony நிறுவனத்திடமே உள்ளது. Marvel மூடும் தருவாயில் இருந்த ஒரு காலத்தில் Spiderman படங்களை எடுக்கும் உரிமையை சோனியிடம் விற்று விட்டது. இதே போல் Xmen 20th Century Fox நிறுவனத்திடம் போனது ஒரு கதை. ஆக Spiderman Avengers 2 இல் வருவது Sony நிறுவனத்திடமே உள்ளது.
வரப்போகும் The Amazing Spider Man பற்றி அடுத்த பதிவான The Amazing Spider-Man aka Spider-Man Reboot இல் பார்ப்போம்…..
அமேஸிங் ஸ்பைடர்மேனை ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்துட்டு இருக்கேன்.
ReplyDeleteவிரிவான அறிமுகத்துக்கு நன்றி.
பாஸ்,
ReplyDeleteரொம்ப ரொம்ப சிம்பிளா என்ன மாதிரி சாமான்ய ரசிகனுக்கு புரியிற மாதிரி ஸ்பைடர்மேன் பத்தி எழுதி இருக்கேங்க !!! படிக்க சுவாரிசியமா இருந்தது !!!
"web shooter என்ற கருவி எனக்கு புது தகவல்..
அமேசிங் ஸ்பைடர்மேன்" மேல எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை... தீய சக்தி கிட்ட இருந்து உலகத்தை காப்பாதுற தெரிஞ்ச கதை தான்.... பேட்மேன். வேணா சொல்லுங்க, ரொம்ப ரொம்ப எதிர்பார்கிறேன்...நோலன் படம் வேற.. ஸ்பைடர்மேன் ரிலீஸ் ஆகி கரெக்ட்டா மூனாவது வாரம் பேட்மேன் ரிலீஸ்.. அது வரைக்கும் இது டாப்ல இருக்கும்...அப்புறம் பாருங்க காணாம போயிறும்...
ராஜ் நண்பரே,
ReplyDeleteபேட்மேன் மூன்றாம் படத்தின் எதிர்பார்ப்புக்கு முன் இந்தப்படத்தின் எதிர்பார்ப்பு ஒன்றுமே இல்லை. ஆனால் படம் நன்றாக வந்துள்ளதாக Premier show பார்த்தவர்கள் விமர்சனம் கூறுவதால் ஸ்பைடர்மேன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடி உள்ளது.
பதிவு நன்றாக உள்ளது...அபாரமான சக்திபெற்ற ஸ்பைடெர் மானை பார்த்த ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?? என்ற சந்தேகம் உள்ளது..நீங்கள் என்ன நினைனக்கின்றீர்கள்
ReplyDeleteபடிக்கவே ரொம்ப ஆவலாய் உள்ளது...கார்ட்டூன் நீங்க சொன்ன spider shotter spidy sense காட்டுவாங்க ஆனா ஏன் படத்தில் காட்டவில்லை என பல முறை நினைத்து உள்ளேன்....
ReplyDeletechinna malai,Kiruththikan Yogaraja,செ.சரவணக்குமார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே
ஹி ஹி நானும் ஆஜர்தான் நண்பனே!
ReplyDelete