தி கிரே - The Grey [2012]ஆக்சன் பட பிரியர்கள் அனைவரும் Taken படத்தை அறிவார்கள். படத்தை பார்த்தவர்கள் படத்தின் கதாநாயகர் Liam Neeson ரசிகர்களாக மாறியிருப்பார்கள். மேலே படத்தில் உள்ளாரே அவரே தான். Takenல் அப்பாவி தந்தை போல் அறிமுகமாகி அடுத்து தன் மகளை கடத்தியவர்களிடமிருந்து மகளை அட்டகாச தந்தையாக காப்பாற்றுவார். ஆமை போல ஆரம்பிக்கும் கதை அடுத்து ஜெட் வேகத்தில் பயணிக்கும். இதில் Liam Neeson தன்னை விட்டு பிரிந்த மனைவி, மகள் எண்ணி கலங்குமிடதிலும், அடுத்து அதிரடியில் கலக்குவதிலும் அருமையாக நடித்திருப்பார். இதன் பின் இவர் நடித்து பல எதிபார்ப்புகளோடு Unknown படம் வெளியானது. Taken படத்தை போல் படம் ரசிகர்களை கவர வில்லை. Taken படத்தை விருதகிரியில் விஜயகாந்த் காப்பி அடித்து எடுத்திருப்பார். தற்போது இவர் நடித்து வந்திருக்கும் படம் The Grey.
Share:

அண்டர்வேர்ல்ட் - Underworld Movie Series - 3

இரண்டாம் பாகத்தில் முழித்த மார்கஸ், விக்டரால் அடைக்கப்பட்ட அவனது சகோதரன் Werewolf  வில்லியமை சிறையிலிருந்து விடுவிக்க செல்கிறான். சிறையிலிருந்து வில்லியமை விடுவிக்க அவனுக்கு இரண்டு சாவிகளும் தேவை. ஒன்று விக்டரின் நெஞ்சில் இருந்தது அதை விக்டர் இறந்த பின் அதை எடுக்கும் Kraven என்பவனிடமிருந்து அவனை கொன்று பெறுகிறான். மற்றொன்று விக்டரின் மகள் Sonja கழுத்தில் உள்ளது. Sonja விக்டரால் லுசியன் கண் முன் கொல்லப்பட்ட பின் லுசியன் அதனை எடுத்து கொள்கிறான். அதன் பின் லுசியன் இறந்த பின் அது செலின் மற்றும் மைக்கேல் எடுத்து கொள்கின்றனர். இதனால் மார்கஸ் செலினையும் , மைக்கேலையும் விரட்டுகிறான். அவனிடமிருந்து தப்பித்து அவனையும் ,வில்லியமையும் கொல்வதே இரண்டாம் பாகம்.

Share:

அண்டர்வேர்ல்ட் - Underworld Movie Series - 2

முதல் பாகத்தில் கதை 21 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கிறது. லைகன்களின் தலைவன் லுசியன்(Lucian)  15ஆம் நூற்றாண்டில் லைகன்களுக்கும், வாம்பயர்களுக்கும் நடந்த போரில் கொல்லபட்டதாலும், போரில் வென்ற வாம்பயர்கள் எஞ்சியிருக்கும் லைகன்களையும் அழிக்க ஆரம்பிக்கின்றனர்.படத்தின் நாயகி செலின்(Selene) ஒரு வாம்பயர். லைகன்களை(Lycans) எதிராக அவர்களை அழிக்க உருவான Death Dealers  குருப்பில் இருப்பவள். லைகன்களை தேடி பிடித்து அழிப்பவள்.தனது குடும்பத்தை லைகன்கள்(Lycans) கொன்றதால் அவர்கள் மேல் பழிவாங்கும் கோவத்தோடு இருக்கிறாள். கண்ணில் படும் லைகன்களை அழிக்கிறாள்.

லைகன்கள் சிலர் மைக்கேல் என்ற ஒருவனை பின் தொடர்ந்து செல்வதை பார்க்கிறாள். ஒரு சாதாரண மனிதனை ஏன் லைகன்கள் பின் தொடர்கின்றனர் என சந்தேகம் கொள்கிறாள். லைகன்கள் மைக்கேலிடமிருந்து சோதனைக்கு ரத்தத்தை எடுக்க முயல்வதை அறிந்து அவர்களை தடுத்து அவனை காப்பாற்றுகிறாள். ஆனால் 15ஆம் நூற்றாண்டில் இறந்ததாக சொல்லப்பட்ட லுசியன்(Lucian) உயிரோடு இருப்பதை அறிகிறாள். லுசியன்(Lucian) மைக்கேலை கடித்து விடுவதால் மைக்கேல் லைகனாக மாற ஆரம்பிக்கிறான். மைக்கேலும் , செலினும் காதல் கொள்கின்றனர்.

Share:

அண்டர்வேர்ல்ட் - Underworld Movie Series - 1


Priest என்ற மொக்கை வாம்பயர் படத்தை பார்த்து விட்டு அந்த வெறுப்பில் எனக்கு பிடித்த அண்டர்வேர்ல்ட் படத்தின் மூன்று பாகங்களை பற்றிய இந்த பதிவை எழுத ஆரம்பித்தேன். பின் ஆர்வம் இல்லாமல் Draft இல் போட்டு விட்டேன். தற்போது தான் அண்டர்வேர்ல்ட் படத்தின் நான்காம் பாகம் பார்க்க நேர்ந்தது. மேலும் தற்போது வரும் புதிய ஹாலிவுட் படங்களை பற்றி பல பதிவர்களும் எழுதி விடுவதால்  இந்த பதிவை தூசு தட்டி விட்ட இடத்தில் இருந்து முதல் மூன்று பாகங்களை பற்றி மூன்று பதிவுகளாக ஒரே மூச்சில்  எழுதி விட்டேன்.

மூன்று பாகங்களை பற்றி பார்க்க போகும் முன் படத்தின் முக்கியமான நான்கு கதாபாத்திரங்களை பற்றி பார்த்து விடுவோம். சாதாரண மனிதன்,வாம்பயர்(Vampire - இரத்தகாடேரிகள்),Werewolf(மனித ஓநாய்) மற்றும் லைகன்(Lycans – ஓநாய் மனிதன்).சாதாரண மனிதனை பற்றி சொல்ல தேவையில்லை.

இதில் வாம்பயர்கள் என்பவர்கள் இரத்தத்தை உறிஞ்சுபவை.பார்க்க மனித வடிவில் இருப்பவை. இரத்தத்தை உறிஞ்ச இரண்டு கொடூர பற்கள் இருக்கும். இயற்கை மரணம் கிடையாது. இரவில் மட்டுமே வெளியில் உலவுபவர்கள்.சூரியஒளி பட்டால் இறந்து விடுவார்கள். இந்த வாம்பயர்கள் சாதாரண மனிதனை  கடித்தால் வைரஸ் பரவி அவர்களும் வாம்பயர்களாக மாறி விடுவார்கள்.

அடுத்து Werewolf(மனித ஓநாய்) , சாதாரண மனிதனிலிருந்து Werewolf ஆக மாறியவர்கள். பார்க்க ஓநாய் போல இருப்பவர்கள்.இவர்களால் மீண்டும் மனித உருவுக்கு வர முடியாது. இவர்களுக்கும் இயற்கை மரணம் கிடையாது. வெள்ளியால் செய்த குண்டு மற்றும் வாள் போன்றவற்றால் இவர்களை கொல்ல முடியும். இந்த Werewolf சாதாரண மனிதனை  கடித்தால் வைரஸ் பரவி அவர்களும் Werewolf ஆக மாறி விடுவார்கள்.

அடுத்து லைகன்(Lycans – ஓநாய் மனிதர்கள்), இவர்கள் Werewolfலிருந்து உருவானவர்கள். Werewolf இன் அனைத்து குணங்களும் இவர்களுக்கும் பொருந்தும். ஆனால் இவர்களால் நினைத்த நேரம் மனித உருவும், ஓநாய் உருவும் எடுக்க முடியும்.

டிராகுலா மற்றும்  ஆக்சன் பட பிரியர்களுக்கு விருந்தளிக்க கூடியவை Underworld பட வரிசைகள்.  Underworld Awakening இது Underworld பட வரிசையில் தற்போது வந்துள்ள  நான்காம் பாகம். முதல் மூன்று பாகங்களும் ஆக்சன் பட ரசிகர்களுக்கு தீனி போட்டவை. நீங்கள் Vanhelsing போன்ற படங்களை ரசிப்பவர்களாக இருந்தால் இந்த பட வரிசைகள் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை. முதல் மூன்று பாகங்களும் ஒன்றுகொன்று சார்ந்த  கதையமைப்பை கொண்டவை. மேலும் மற்ற வாம்பயர், Werewolf புராதன கதைகளை போல் சிலுவையை வைத்து கொல்லுவது,மாந்திரீகம் இல்லாமல் zombie கதையை போல் வைரஸ் ,சயின்ஸ் மூலமே சொல்ல பட்டிருக்கும். நான்காம் பாகம் முதல் மூன்று பாகங்களின் வசூல் வெற்றிக்கு பின் மீண்டும் வசூலை பார்க்க எடுக்கப்பட்ட படம். முதல் மூன்று படங்கள் சுவராசியமாகவும் ஆக்சன் கலந்து எடுக்கப்பட்டிருக்கும்.  இதுவரை வந்துள்ள பாகங்கள்

Underworld
Underworld: Evolution
Underworld: Rise Of The Lycans
Underworld: Awakening

Share: