ஆக்சன் பட பிரியர்கள் அனைவரும் Taken படத்தை அறிவார்கள். படத்தை பார்த்தவர்கள் படத்தின் கதாநாயகர் Liam Neeson ரசிகர்களாக மாறியிருப்பார்கள். மேலே படத்தில் உள்ளாரே அவரே தான். Takenல் அப்பாவி தந்தை போல் அறிமுகமாகி அடுத்து தன் மகளை கடத்தியவர்களிடமிருந்து மகளை அட்டகாச தந்தையாக காப்பாற்றுவார். ஆமை போல ஆரம்பிக்கும் கதை அடுத்து ஜெட் வேகத்தில் பயணிக்கும். இதில் Liam Neeson தன்னை விட்டு பிரிந்த மனைவி, மகள் எண்ணி கலங்குமிடதிலும், அடுத்து அதிரடியில் கலக்குவதிலும் அருமையாக நடித்திருப்பார். இதன் பின் இவர் நடித்து பல எதிபார்ப்புகளோடு Unknown படம் வெளியானது. Taken படத்தை போல் படம் ரசிகர்களை கவர வில்லை. Taken படத்தை விருதகிரியில் விஜயகாந்த் காப்பி அடித்து எடுத்திருப்பார். தற்போது இவர் நடித்து வந்திருக்கும் படம் The Grey.
அலாஸ்காவில் எண்ணெய் கம்பெனியில் வேலை பார்ப்பவர்களை அங்கே பனிப்பகுதியில் வாழும் ஓநாய்களிடம் காப்பாற்ற ஓநாய்களை வேட்டையாடும் வேலையில் இருப்பவர் நமது கதாநாயகர். ஒரு நாள் வேலை முடிந்து பணியில் இருப்பவர்கள் அனைவரும் விமானத்தில் திரும்பி கொண்டிருக்கும் போது விமானம் பழுதடைந்து விபத்துகுள்ளாகிறது. நிறைய பேர் இறந்து விட Liam Neeson மற்றும் ஆறு ஏழு பேர் மட்டும் உயிர் தப்பிக்கிறார்கள். ஆனால் கடும்பனி கொட்டும் பகுதியில் விபத்துக்குள்ளாவதால் பனியால் உறைந்து சாகாமல் இருக்க அங்கே இருப்பவற்றை எரித்து கிடைப்பவற்றை சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களை வேறொரு பிரச்சனை எதிர்கொள்கிறது. அங்கே வாழும் ஓநாய் கூட்டம் அவர்களை தாக்க ஆரம்பிக்கின்றன.
ஏழு பேரில் ஒருவனை இரவில் காவல் காக்கும் போது கொன்றுவிடுகின்றன. இதனால் Liam இங்கே திறந்த பகுதியில் இருந்தால் எளிதில் நாம் வேட்டையாட படுவோம் அதனால் அருகே இருக்கும் மரங்கள் இருக்கும் பகுதிக்கு சென்று விட்டால் நம்மை பாதுகாத்துகொள்ளலாம் என்கிறார். அங்கே செல்லும் வழியில் பனிபுயலில் நடக்க முடியாமல் ஒருவன் கீழே விழ இவர்களை தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஓநாய்கள் கொன்று தின்று விடுகின்றன. இவர்களை ஒரு ஓநாய் படையே விரட்டுகிறது. மீதிபேர் எப்படியோ மரங்கள் இருக்கும் பகுதியை அடைந்து விடுகிறார்கள். அவர்களை அங்கேயும் ஓநாய் கூட்டம் சுற்றி வளைக்கிறது.
ஏழு பேரில் ஒவ்வொருவராக அடுத்தடுத்து பலியாகிறார்கள்.இறுதியில் Liam மட்டுமே மிஞ்சுகிறார்.அடுத்து என்ன ஆனது என்பதை படத்தில் பாருங்கள். கொஞ்ச கொஞ்சமாக முதலில் விறுவிறுப்பாக செல்லும் கதை பின் மிக மெதுவாக நகருகிறது. சில இடங்களில் நமக்கு டிஸ்கவரி சேனலில் வரும் Suvivorman நிகழ்ச்சியை பார்ப்பது போல் இருக்கிறது.படம் எப்ப மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கும் போது படம் முடிவடைந்துவிடுகிறது. பரபரக்கும் திரில்லர் படமாக இருக்கும் என நினைத்தால் டிராமாவாக முடிவடைகிறது. ஆக்சன் பட பிரியர்கள் படத்தை டவுன்லோட் செய்து வேறு படம் எதுவும் பார்க்க இல்லையென்றால் ஒரு தடவை பார்க்கலாம். மற்றபடி டிராமா படங்களை ரசிப்பவர்களுக்கு படம் பிடிக்கும் என நினைக்கிறன்.படத்தின் ட்ரைலர் கீழே
மீ தி ஃபர்ஸ்ட்!
ReplyDeleteஇந்த படம் என்ன, கடந்த மூன்று மாதங்களாகவே எந்த படத்தையும் நான் பார்க்க வில்லை. ஆனால் லியாம் நீசன் என்னுடைய விருப்ப நடிகர் (That is, Favourite actor). ஆகையாலே பார்க்க விருப்பம் உண்டாகிறது.
நானும் படத்தின் ஹீரோவையும் ரேடிங்கையும் பார்த்துவிட்டு டவுன்லோட் பண்ண ரெடியாகிவிட்டேன். நல்லவேளை காப்பாத்திட்டீங்க.ப்ளுரே காப்பி வந்திருக்கு. ஆனால் ஆஸ்கார் நாமினேஷன் படங்கள் பார்க்கவேண்டி இருப்பதால், பிறகு பார்க்கலாம்.நன்றி.
ReplyDeleteஇன்னா தலிவா... பதிவு மயையா பொயிஞ்சி தள்றீரு :) .. மீ தி தேர்ட்... நாளை வருவேன்... விரிவாய்த் தருவேன் :-)
ReplyDeleteவிமர்சனம் நன்று..அழகாக எழுதியிருக்கீங்க..நன்றி.
ReplyDeleteவிருதகிரி பாத்ததால Taken பாக்கவே இல்ல... முதல்ல அத்த பாகுரேன் அப்பால இத பாக்குரேன்..
ReplyDeleteபாஸ்,
ReplyDeleteடவுன்லோட் போட்டாச்சு. ஜஸ்ட அவுட் லைன் மட்டும் படிச்சிட்டு போறேன். படம் பார்த்துட்டு வந்து என்னோட கருத்தை சொல்றேன்.