The Amazing Spider-Man aka Spider-Man Reboot



இதற்கு முந்தைய பதிவை படிக்காதவர்கள் இங்கே The Amazing Spider-Man சென்று படித்து விட்டு வரவும்.

இந்த வருடத்தில் ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது என கேட்டால் அனைவரும் கூறும் பதில் கண்டிப்பாக The Amazing Spider-Man என இருக்காது,The Dark Knight Rises என்று தான் இருக்கும். இதே போல் பல சூப்பர் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து கலக்கிய, வசூல் வேட்டை நடத்திய Avengers படத்தை The Amazing Spider-Man மிஞ்சுமா என்று கேட்டால் பதில் கண்டிப்பாக முடியாது என்று தான் இருக்கும். ஆனால் காமிக்ஸிலும்,டிவியில் கார்டூனாகவும் ஸ்பைடர்மேனை ரசித்தவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் படம் The Amazing Spider-Man. பேட்மேனுக்கு Batman Begins போல இந்தபடம் ஸ்பைடர்மேனுக்கு சிறந்த Reboot படமாக அமையுமா என பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

The Amazing Spider-Man

பல சூப்பர் ஹீரோக்களில் முக்கியமானவர்கள் என மூவரை கூறலாம். அவர்கள் சூப்பர்மேன் , ஸ்பைடர்மேன் மற்றும் பேட்மேன். இவர்களில் பேட்மேன் ஒரு சூப்பர் ஹீரோ இல்லை எனலாம். அவரிடம் சிறப்பான அபரித சக்தி கிடையாது. பெரிய செல்வந்தரான பேட்மேன்  தனது போராடும் திறனை கொண்டும் ,பணத்தின் துணை கொண்டும் எதிரிகளோடு போராடி மக்களை காப்பாற்றுகிறான். சூப்பர்மேனோ மனிதனே அல்ல. பலவித சக்திகளை இயற்கையாகவே கொண்ட வேற்று கிரகத்தில் இருந்து வந்தவன்.

Share: