Mission Impossible ஸ்பை(Spy) பட வரிசையில் நாலாவது பாகம். Mission Impossible படங்களின் பிரதான நோக்கம் Action ஆக்ஸன். Action பட பிரியர்களுக்கு அனைத்துமே விருந்தளிக்க கூடியவை. நாலாவது பாகமும் இவ்வகையில் நம்மை ஏமாற்ற வில்லை. படத்தின் கதை என்னமோ ஏவுகணையை தடுப்பது தான். ஆனால் பரபரப்பான ஆச்ஸனில் இறுதிவரை படத்தை ஆர்வமாக பார்க்க வைத்து விடுகிறார்கள்.
ரஷ்ய சிறையில் இருக்கும் படத்தின் கதாநாயகனான Ethan Huntஐ (டாம் க்ரூஸ்) சிறையிலிருந்து Carter(மேலே படத்தில் இருக்கும் அழகி) மற்றும் Dunn(மூன்றாம் நபர்) இருவரும் மீட்பதில் இருந்து Mission ஆரம்பிக்கிறது. பின் மூவரும் சேர்ந்து Cobalt என்னும் அடையாள பெயருடைய வில்லனை யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அதன் ஒரு கட்டமாக ரஷ்யாவில் உள்ள Kremlin என்னும் இடத்தில் உள்ள Cobalt பற்றிய கோப்புகளை திருட செல்கிறார்கள் . கோப்புகளை திருடும் போது அங்கே இடையே Cobalt புகுந்து அவர்களை ரஷ்யர்களுக்கு காட்டி கொடுத்து விடுகிறான். மேலும் அந்த இடத்தை குண்டு வைத்து தகர்த்து அதற்கு காரணம் டாம் க்ரூஸ் கூட்டணியே என நம்ப வைத்து விடுகிறான்.