Battle: Los Angeles - வேற்றுகிரகவாசிகளுடன் போர்


வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருவது அவர்களை எதிர்த்து போராடுவது என பல ஆங்கில படங்கள் வந்துள்ளன. வசூலை அள்ளிய Independence Day படத்தை அனைவருக்கும் நினைவிருக்கும். வேற்றுகிரகவாசிகளின் ஒரு பெரிய பறக்கும் தட்டு நியூயார்க் சிட்டியின் மேல் சூரியனை மறைத்து நிற்கும்.இதே போல் பல உலகின் பல நாடுகளின் மேலும் நின்று உலகத்தை அழிக்கும். இதை ஒட்டிய கதை தான் இந்த படமும்.ஆனால் இதில் நியூயார்க் பதில் லாஸ் ஏஞ்சல்ஸ்.

உலகின் பல நாடுகளின் நகரங்களை வேற்றுகிரகவாசிகள் ஆக்கிரமிக்கிறார்கள். அவற்றில் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ்.Independence Day படத்தில் இறுதியில் வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளை வெற்றிகொண்டு உலகை காப்பாற்றுவார்கள். இப்படம் வேற்றுகிரகவாசிகளை விரட்டி, உலகை காப்பாற்றி சுபம் போடும் படம் இல்லை. லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறு படைகுழு வேற்றுகிரகவாசிகளுடன் போரிடுவதை சொல்லியிருக்கிறார்கள்.

மற்ற ஏலியன் படங்கள் போல் இல்லாமல் இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் போல் படம் எடுக்கப்பட்டுள்ளது. எதிரி நாட்டுக்கு வீரர்களுக்கு பதில் வேற்றுகிரகவாசிகள். கதை இது தான். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை ஆக்கிரமிக்கிறார்கள். அவர்கள் அதிகம் ஆக்கிரமித்த ஒரு பகுதியை அணுகுண்டு போட்டு அழிக்க முடிவெடுக்கபடுகிறது. அதற்க்கு முன் அப்பகுதியில் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள தப்பித்த மக்களை காப்பாற்றி அழைத்து வர சிறு படைகுழு செல்கிறது.

அங்கே வேற்றுகிரகவாசிகள் அவர்களை சூழ்கின்றன. அவைகளிடம் போரிட்டு கொண்டே போலீஸ் ஸ்டேஷனில் தப்பித்து மறைந்திருக்கும் மூன்று குழந்தைகள் மற்றும் இருவருடன் திரும்புகிறார்கள்.இடையே அவைகளின் தகவல் பரிமாற உதவும் கலனை கண்டுபிடித்து அதை அழித்தால் அதனை சார்ந்த அனைத்து வேற்றுகிரகவாசிகளின் கலன்களும் அழிவதை கண்டுபிடிகிறார்கள்.இறுதியில் ஒரு படைத்தளத்தை அடைந்து மீண்டும் போருக்கு கிளம்புகிறார்கள்.

போர் பற்றிய படங்கள் விரும்பி பார்ப்பவர்கள் இப்படத்திற்கு செல்லலாம். Independence Day படம் போல் நினைத்து செல்ல வேண்டாம். படம் முழுக்க வேற்றுகிரகவாசிகளை நோக்கி சுட்டு கொண்டே இருக்கிறார்கள்,அவைகளும் சுடுகின்றன,கைக்குண்டு எறிகிறார்கள், குழுவில் சிலர் இறக்கிறார்கள்,ஒருவர் உயிர் தியாகம் செய்கிறார் என அனைத்து போர் படங்களிலும் உள்ள காட்சிகள் உள்ளன. கண்டிப்பாக இது ஒரு போர் அடிக்கும் படம் பார்த்த திருப்தியை கொடுக்கும்.போர் படம் பிடிக்காதவர்களுக்கு அங்கே அவர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் போராட நீங்கள் தியேட்டரில் தூக்கத்தோடு போராட வேண்டியதிருக்கும்.

படத்தின் ட்ரைலர்


லக்கி லிமட்

Share:

6 comments:

  1. போர் படம் என்று சென்று பார்த்தேன், ஒரே போர் (Bore)படமாக இருந்து விட்டது. கதை மாந்தர்களை நம் முன்னே நிறுத்தி அவர்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்துகொள்ள வைக்கும் ஒரு முயற்சியே பலிக்கும்.

    மூழ்கும் கப்பலில் ஒரு காதல் ஜோடிக்காக மட்டும் நம்முடைய நினைவுகளில் ஒரு சோக இழை ஓடியது ஜேம்ஸ் கேமரூனின் இயக்கம் திறனுக்கு ஒரு சான்று. ஆனால் இந்த கதையில் அது போல ஒரே ஒரு நபர் கூட நம் மனதில் ஒரு வினாடி கூட நிற்க மறுக்கிறார். அதனாலேயே இந்த படம் மொக்கையாகி விடுகிறது.

    கேரக்டரைசேஷன் என்பது ஒரு கலை. அது இந்த படத்தில் இல்லை.

    ReplyDelete
  2. அதைப்போலவே ஆங்கில படங்களை தமிழில் டப்பிங் செய்யப்பட்டு பார்க்க விழைவோர் இந்த படத்திற்கு செல்ல வேண்டாம், டப்பிங் மற்றும் சவுண்ட் குவாலிடி மோசம்.

    ReplyDelete
  3. விஸ்வா வருகைக்கு நன்றி. நீங்கள் கூறியது முழுக்க உண்மை. அனைத்து காட்சிகளும்,கேரக்டர்களும் புகுத்த வேண்டும் என்று புகுத்தியதாகவே உள்ளது

    ReplyDelete
  4. நண்பரே,

    ஹாலிவூட்டில் இருந்து தொடர்ந்தும் இவ்வகையான வேற்றுலகவாசிகளின் உலக ஆக்கிரமிப்பு படங்கள் வந்து கொண்டே இருக்கும். வளரும் தொழில் நுட்பம் அசாத்தியமான காட்சி வரைதல்களை திரையில் நிகழ்த்தி விடக்கூடியதாக இருப்பதும் ஒரு காரணம். அடுத்த வாரம் முதல் இங்கு வெளியாகிறது... பெரும்பாலும் பார்ப்பதை தவிர்த்து விடுவேன்.

    ReplyDelete
  5. வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_18.html

    ReplyDelete
  6. ""போர் படம் பிடிக்காதவர்களுக்கு அங்கே அவர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் போராட நீங்கள் தியேட்டரில் தூக்கத்தோடு போராட வேண்டியதிருக்கும்."""

    எனக்கு போர் படங்கள் பிடிக்கும் நண்பரே.ஆனால் போரடிக்கிற படங்களை பிடிக்காது.இந்த படம் வெளிவந்த போதே பார்ப்போமா என்று நினைத்தேன்.விமர்சனம், ரேட்டிங்க் என்று படித்துவிட்டு அப்படியே விலகிவிட்டேன்..இந்த படத்த பற்றி ஏதாவது தமிழுல விமர்சனம் படிப்பேனான்னு நெனைச்சேன்.படிச்சிட்டேன்.நல்ல விமர்சனம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete