Chicken Run (2000)– கோழிகளின் எஸ்கேப்


ஏற்கனவே Aardman Animations தயாரித்த Wallace & Gromit in The Curse of the Were-Rabbit என்ற Stop Motion Animation படத்தை பற்றி பதிவிட்டுள்ளேன். இதுவும் Aardman Animations தயாரித்த Stop Motion Animation படம் தான். ஒரு கோழிபண்ணையில் உள்ள கோழிகளையும், கொடுமைக்கார எஜமானியையும் மையமாக கொண்ட கதை.

Mr ,Mrs Tweedy என்ற கணவன்,மனைவி இருவர் கோழிபண்ணையை நடத்தி வருகிறார்கள். இதில் Mrs Tweedy மிகவும் கொடுமைகாரியாக இருக்கிறாள். முட்டை சரியாக இடாத அல்லது இடும் முட்டை எண்ணிக்கை குறையும் கோழியை கொடுமையான முறையில் கொல்கிறாள்.இதனால் பண்ணையில் உள்ள கோழிகள் மரணபயத்திலேயே இருக்கின்றன.Ginger என்ற புத்திசாலி கோழி மட்டும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறது. ஆனால் Mr Tweedy மற்றும் நாய்களால் ஒவ்வொரு முறையும் பிடிக்கப்பட்டு தண்டனையாக சில நாட்கள் தனியாக அடைக்கப்படுகிறது.

ஆனால் முயற்சியை கைவிடாமல் தப்பிக்க திட்டம் போட்டு கொண்டே இருக்கிறது. Nick ,Fetcher என்ற இரு எலிகள் Ginger கேட்கும் தப்பிக்க உதவும் பொருள்களை தருகின்றன. கோழிபண்ணையை சுற்றி இருக்கும் வேலியை கடக்க பல திட்டங்கள் போடும் Ginger அவை எல்லாம் தோல்வி அடையவே வேலியை வேறு முறையில் அதாவது பறந்து தாண்டி சென்று கடக்கும் திட்டத்தை போடுகிறது. பறக்க இயலாத காரணத்தால் கவண் வில் போல் ஒன்றை தயாரித்து அதன் மூலம் தங்களை ஏறிய செய்து வேலியை தாண்டி தப்பிக்கலாம் என திட்டம் போடுகிறது. அதற்காக Nick ,Fetcher உதவியை கேட்கிறது. எலிகள் அதற்க்கு பதிலாக முட்டைகளை கேட்கின்றன.

இதற்கிடையே கோழி முட்டை வியாபாரத்தால் சரியாக லாபம் கிடைக்காததால் Mrs Tweedy கோழிகளின் இறைச்சியை வைத்து தயாரிக்கபடும் கேக் வியாபாரத்தில் ஈடுபட முடிவெடுக்கிறாள். அதற்காக கேக் செய்யும் எந்திரத்தை வரவழைக்கிறாள். கோழிகள் அதிக இறைச்சியை கொடுக்க அதிக தீனி கொடுக்கிறாள். ஏதோ விபரீதம் வரபோவதை உணர்ந்த Ginger என்ன செய்ய என தெரியாமல் கவலைபடுகிறது. அப்போது வானத்தில் இருந்து பறந்து வந்து பண்ணையில் விழும் Rocky சேவலுக்கு உதவி புரிகிறது. Rocky சேவலால் பறக்க முடியும் என நம்பும் Ginger அதனை மற்ற கோழிகளுக்கு பறக்க கற்று தர சொல்லுகிறது.

ஆனால் உண்மையில் சர்க்கஸில் பிரங்கி மூலம் சுடப்பட்டு அதனால் பறந்து வந்த சேவலே Rocky. Rocky சேவலும் பறக்க கற்று தருவது போல் நடிக்கிறது. கோழிகளின் இறைச்சியை வைத்து தயாரிக்கபடும் எந்திரத்தை சோதனை செய்ய நினைக்கும் Mr , Mrs Tweedy Gingerரை பிடித்து எந்திரத்தில் போடுகிறார்கள். ஆனால் Rocky சேவல் Gingerரை காப்பாற்றுகிறது. இதற்கிடையே Rocky பற்றிய உண்மை தெரியவர Rocky பண்ணையை விட்டு வெளியேறுகிறது.

விரைவில் தாங்கள் அனைவரும் கொல்லபடுவோம் என்பதை உணர்ந்த Ginger அங்கே கோழிபண்ணையில் இருக்கும் மற்றொரு வயதான சேவலை கொண்டு பறக்கும் எந்திரத்தை தயாரித்து தப்ப முடிவெடுத்து பறக்கும் எந்திரம் தயாரிக்கும் வேலையில் ஈடுபடுகின்றன. அனைத்தும் பண்ணையில் இருந்து தப்பித்தனவா என்பதே மீதி படம்.

Stop motion படமாக இருந்தாலும் மிகவும் ரசிக்க வைக்கிறது . படத்தின் ஆரம்ப காட்சிகளான Ginger தப்பிக்க போடும் திட்டங்களும் , தப்பிக்கும் போது ஒவ்வொரு முறையும் மாட்டி கொண்டு தனியாக அடைக்கப்படும் காட்சிகளும் நம்மை மிகவும் சிரித்து ரசிக்க வைக்கின்றன. முடிவு நாம் அறிந்ததே என்றாலும் அதுவரை நம்மை ரசித்து படத்தை பார்க்க வைக்கிறார்கள் . Animation பட ரசிகர்கள் தவற விட கூடாத படம். படம் டோர்ரெண்டில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது . அவசியம் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

படத்தின் ட்ரைலர்

அன்புடன், லக்கி லிமட்
Share:

3 comments:

  1. இந்த படத்தை ஸ்டார் மூவீஸ் சேனலில் பார்த்து ரசித்துள்ளேன். உணர்ச்சிபூர்வமான அனிமேஷன் படம் இது.

    ReplyDelete
  2. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி விஸ்வா

    ReplyDelete