The Next Three Days - மனைவிக்காக....


கிளாடியேட்டர் , ராபின் ஹூட் படங்களில் நடித்த ரஸ்ஸல் குரோவை ஹாலிவுட் படம் பார்ப்பவர்கள் அனைவரும் அறிவர்.ரஸ்ஸல் குரோவ் நடித்து 2010ல் வெளியான படம் The Next Three Days. ஒரு சாதாரண காலேஜ் புரபசரான கொலை குற்றம் சுமத்தப்பட்ட தனது மனைவியை காப்பாற்ற எவ்வளவு தூரம் துணிகர செயல்களில் இறங்குகிறார் என்பதே கதை.

தனது செல்ல குழந்தை , அன்பு மனைவி மற்றும் அமைதி என வாழ்ந்து வரும் ரஸ்ஸல் குரோ வாழ்க்கையில் புயல் வீசுகிறது. ரஸ்ஸல் குரோவின் மனைவி அவரது அலுவலக பாஸை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார். கொலை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகைகளும், அவர் ஆடையில் உள்ள ரத்த கரைகளும் அவரை வஞ்சிகிறது. சில வருடங்கள் ரஸ்ஸல் குரோ தனது மனைவியை காப்பாற்ற வக்கீலுடன் போராடுகிறார். இறுதியில் அனைத்தும் கைவிடவே ஜெயிலிருந்து மனைவியை தப்பிக்க வைக்கும் துணிகர முயற்சியில் இறங்குகிறார்.

முதற்க்கட்டமாக ஏழு முறை ஜெயிலில் இருந்து தப்பித்த Damon Pennington(நம்ம Taken கதாநாயகர்) என்பவனை சந்திக்கிறார். அவன் ஜெயிலில் இருந்து தப்பிப்பது எளிது ஆனால் தப்பித்த பின் மீண்டும் பிடிபடாமல் வாழ்வது கடினம் என்கிறான். மேலும் அவனிடமிருந்து சில முக்கியமான தகவல்களை பெறுகிறார்.அவை

ஜெயிலில் இருந்து யாரவது தப்பினால் 15 நிமிடங்களில் சிட்டியில் அருகாமையில் உள்ள அனைத்து சாலைகளும் எச்சரிக்கப்பட்டு விடும்.

35 நிமிடங்களில் அனைத்து ரயில்,பஸ் மற்றும் விமான நிலையங்களும் போட்டோகளோடு எச்சரிக்கப்பட்டு விடும்.

மேலும் தப்பி செல்ல போலி பாஸ்போர்ட் மற்றும் நிறைய பணம்.

இவைகளை கேட்ட ரஸ்ஸல் குரோ மனைவிக்கே சொல்லாமல் செயலில் இறங்குகிறார். முதலில் படாதபாடு பட்டு மூவருக்கும் பாஸ்போர்ட் பெறுகிறார். பின் பணத்துக்காக வீட்டையும், பொருள்களையும் விற்கிறார்.போக போக பணம் கரையவே போதை பொருள் தயாரிக்கும் கும்பலிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்கிறார். அடுத்த விடயம் ஜெயிலில் இருந்து மனைவியை கடத்துவது.

பல கோணங்களில் ஆராயும் ரஸ்ஸல் குரோ இறுதியில் ஜெயிலில் இருந்து தப்பிக்க வழியை கண்டுபிடிக்கிறார்.பொறுமையாக செயல்படுத்த நினைக்கும் ரஸ்ஸல் குரோவுக்கு அவரது மனைவியை மூன்று நாட்களில் ஜெயிலில் இருந்து வேறு ஜெயிலுக்கு மாற்ற போகிறார்கள் என்னும் செய்தி இடியை இறக்குகிறது.

மூன்றே நாட்களில் திட்டத்தை செயல் படுத்த வேண்டிய நிலை.அவசரமாக செயலில் குதிக்கிறார். இறுதியில் மனைவியை ஜெயிலில் இருந்து வெளியேற்றும் நாள் வருகிறது, ஆனால் தப்பிக்கும் நேரத்தில் போலிஸ் அறிந்து கொள்கிறது.அப்போது போலீசிடமிருந்து தப்பிக்கிறார்கள். ஆனால் அடுத்து இருக்கும் சோதனை 15 நிமிடங்களில் அருகாமையில் உள்ள சாலைகளையும் , 35 நிமிடங்களில் விமான நிலையம் சென்று தப்பிக்க வேண்டும்.

முதல் 15 நிமிட சோதனையை வெற்றிகரமாக கடக்க , அடுத்த 35 நிமிடங்களில் அவர்களுக்கு சோதனை வருகிறது. இதற்கிடையே போலீஸ் முழு வீச்சாக இவர்களை தேடுகிறது . வெற்றிகரமாக தப்பித்து சென்றார்களா என்பதை படத்தில் பாருங்கள்.அமைதியாக ஆரம்பிக்கும் படம் பின் விறுவிறுப்பாக செல்கிறது. ரஸ்ஸல் குரோ போலி பாஸ்போர்ட் மற்றும் பணம் ஆகியற்றை பெற செய்யும் முயற்சிகள் ரசிக்கும் படி இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக செல்கின்றன. கண்டிப்பாக ரசித்து பார்க்கலாம்.

டவுன்லோட் செய்ய
http://extratorrent.com/search/?search=the+next+three+days&new=1&x=0&y=0

அன்புடன்,
லக்கி லிமட்
இன்ட்லி மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

Share:

4 comments:

  1. இந்த படத்தை சமீபத்தில் தான் பார்த்தேன். நானொரு ரஸ்ஸல் க்ரோ ரசிகன் என்பதால் அவரது அனைத்து படங்களையும் பார்த்துவிடுவேன்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி விஸ்வா

    ReplyDelete
  3. படம் பத்தி நண்பர் ஒருத்தர் முன்னயே சொன்னார்.ஆனா நம்ம சுறுசுறுப்பு தான் ஊருக்கே தெரியுமே. :)
    சீக்கிரமே பார்க்கிறேன் தல.

    ReplyDelete
  4. just watched the movie mate... its one among the movies i liked... thanks for a detailed post on it...

    ReplyDelete