The Walking Dead - நடக்கும் மரணம்



ஹாலிவுட்டில் Zombie படங்கள் மிக பிரபலம். இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளன. பிரபல ஹாலிவுட் நடிகர் வில்ஸ் ஸ்மித் கூட I am Legend என்ற Zombie படத்தில் நடித்து உள்ளார். 28 Days later,28 weeks later மிக பிரபலமான Zombie பட வரிசையில் ஒன்று.அதே போல் தமிழில் மொழிமாற்றம் செய்து நான்கு பாகங்கள் வெளிவந்து ஓடிய Resident Evil படமும் Zombie படமே.

The Walking Dead என்ற பிரபல காமிக்ஸ் கதை தற்போது AMC சேனலில் சீரியலாக தயாரிக்கப்பட்டு பலத்த வரவேற்புடன் ஓடி கொண்டு இருக்கிறது. சீரியல் என்றவுடன் படத்திற்கு
இணையாக இருக்காது என என்ன வேண்டாம்.வந்த ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு படம் போல் வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இதன் ஆறு எபிசோட் கொண்ட முதல் சீசன் முடிவடைந்து உள்ளது.zombie பட ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.

கதை இது தான், போலீஸாக இருக்கும் ரிக் குண்டடி பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான் . மீண்டும் அவன் விழித்தேழும் போது நகரமே Zombie மயமாக இருக்கிறது.ஒருவாறு உண்மை புரிந்து தன் மணைவியையும் , மகனையும் தேடி புறப்படுகிறான். செல்லும் வழியில் உள்ள நகரத்தில் Zombieகளிடம் மாட்டி கொள்ளும் ரிக் அங்கே Zombieகளிடம் இருந்து தப்பித்து டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் இருக்கும் சிலரை காண்கிறான்.

பிறிதொரு இடத்தில் நகருக்கு வெளியே காட்டுக்குள்ளே அவனது மணைவியும் , மகனும் வேறொரு சில தப்பித்தவர்களுடன் ,ரிக்கின் நண்பனுடன் இருக்கின்றனர்.ரிக் மற்றும் சிலர் இருக்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் Zombieகள் உள்ளே http://www.blogger.com/img/blank.gifபுக முயற்சிக்கவே அங்கிருந்து வெளியேற முடிவெடுக்கின்றனர்.ஆனால் வெளியே முழுவதும் Zombieகள். ரிக் வெளியேறினானா... தன் மணைவியையும் , மகனையும் கண்டு பிடித்ததானா...தப்பித்த கூட்டம் எங்கே செல்கிறது என விறுவிறுப்பாக போகிறது ஆறு எபிசோடுகளும்.

நூற்றுக்கணக்கான Zombieகள் நடுவே ஒரு டாங்க் உள்ளே ரிக் மாட்டி கொள்ளும் முதல் எபிசோடிலிருந்து ஆரம்பிக்கிறது பர பர காட்சிகள்.அங்கங்கே மெதுவாக சென்றாலும் அவையெல்லாம் தேவையான காட்சிகளே.இதன் சீரியலின் வரவேற்ப்பை பார்த்து விட்டு AMC சேனல் அடுத்த சீசனில் 13 எபிசோடுகள் வரபோவதாக அறிவித்துள்ளது.இந்த சீரியலின் அனைத்து ஆறு எபிசோடுகளும் இணையத்தில் டவுன்லோட் செய்ய கிடைக்கின்றன.டவுன்லோட் செய்ய சுட்டி இங்கே

அன்புடன்,
லக்கி லிமட்
Share:

No comments:

Post a Comment