Timecrimes - Los Chronocrímenes காலகுற்றம்


மற்றுமொரு விறுவிறுப்பான ஸ்பானிஷ் மொழி Time Travel படம் இது.ஹெக்டர் என்பவன் தனது தனது மணைவியோடு புதியதாக மாறிய வீட்டில் பொருள்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கிறான்.அப்போது ஒரு போன் அழைப்பை எடுக்கிறான்.மறுமுனையில் யாரும் பேசாமல் போகவே அந்த எண்ணுக்கு அவனே மீண்டும் போன் செய்கிறான்.அப்போது பதில் இல்லை வித்தியாசமான சப்தம் மட்டும் வருகிறது.பின் தன் வீட்டின் வெளியில் சேரில் அமர்ந்து எதிரே உள்ள மலைபகுதியை பைனாகுலரில் ஆராய்கிறான்.


அப்போது ஒரு பெண் தன் மேலாடையை கழட்டும் காட்சியை பைனாகுலரில் பார்க்கிறான். அப்போது அவனது மணைவி சில பொருள்கள் வாங்க வெளியில் செல்வதாக சொல்லி செல்கிறாள்.மணைவி சென்ற பின் பைனாகுலரில் அந்த பெண்ணை தேடுகிறான்.அவள் அங்கு இல்லாது போகவே ஒரு ஆர்வத்தில் அந்த பெண்ணை பார்க்க மலைபகுதிக்கு செல்கிறான்.அங்கே அந்த பெண் நிர்வாணமாக மயக்கமுற்று கிடப்பதை பார்க்கிறான்.அந்த பெண்ணை எழுப்ப நினைக்கும் போது யாரோ அவனை பின்னால் இருந்து கத்திரிகோலால் குத்துகிறார்கள்.

இதனால் பயந்த ஹெக்டர் தப்பிக்க மலைபகுதிக்குள் ஓடுகிறான்.தன்னை மூஞ்சியில் பேன்டேஜ் சுற்றிய ஒருவன் விரட்டுவதை கண்டு மேலும் ஓடுகிறான்.அங்கே யாருமில்லா ஒரு வீட்டை அடையும் ஹெக்டர் அங்கே ஒரு வாக்கி-டாக்கி இருப்பதை பார்க்கிறான்.அப்போது வாக்கி-டாக்கியில் பேசும் ஒருவனிடம் தன்னை அந்த பேன்டேஜ் சுற்றியவனிடமிருந்து காப்பற்ற சொல்கிறான்.வாக்கி-டாக்கியில் பேசுபவன் பேன்டேஜ் சுற்றியவன் ஹெக்டரை தேடுவதாகவும் அதை கண்காணிப்பு கேமராவில் பார்ப்பதாகவும், ஹெக்டரை அவனது ஆராய்ச்சிகூடத்திற்கு வரசொல்கிறான்.

அவனது ஆராய்ச்சிகூடத்திற்கு செல்லும் ஹெக்டர் அங்கே அவனை சந்திக்கிறான். அப்போது பேன்டேஜ் சுற்றியவனும் அங்கே வருகிறான். அப்போது ஆராய்ச்சிகூடத்தில் இருப்பவன் பேன்டேஜ் சுற்றியவனிடமிருந்து தப்பிக்க அங்கே இருக்கும் ஏதோ திரவம் பெரிய கலனில் நாம் இறங்கி அதை மூடி கொண்டால் தப்பி விடலாம் என்கிறான்.ஹெக்டரும் அதனுள் இறங்குகிறான்.ஆனால் ஆராய்ச்சிகூடத்தில் இருப்பவன் ஹெக்டரை மட்டும் உள்ளே விட்டு கலனை மூடி விடுகிறான்.

உள்ளே இருக்கும் திரவத்தில் மூழ்கி மயக்கமுறும் ஹெக்டர் மீண்டும் கலனை திறந்து வெளியே வருகிறான்.அப்போது அங்கே இருக்கும் ஆராய்ச்சிகூடத்தில் இருப்பவன் அவனை யார் என கேட்கிறான்.இதனால் ஆச்சிரியப்படும் ஹெக்டர் ,பின்னர் தான் ஒரு மணி நேரம் பின்னோக்கி காலபயணம் செய்ததை அறிகிறான்.மேலும் அங்கே இருந்து தன் வீட்டை பைனாகுலரில் பார்க்கும் ஹெக்டர் அங்கே இன்னொரு ஹெக்டர் தன் மணைவியோடு இருப்பதை பார்க்கிறான்.

ஆராய்ச்சிகூடத்தில் இருப்பவன் இவனை காலபிரயாணம் செய்த ஹெக்டர் 2 எனவும்,அங்கே வீட்டில் இருப்பவன் ஒரு மணி நேரத்திற்கு முன்னால் இருந்த ஹெக்டர் 1 என கூறுகிறான். மேலும் ஹெக்டர் 2 மீண்டும் மணைவியோடு சகஜவாழ்க்கையை வாழ வேண்டுமானால் ஹெக்டர் 2க்கு நடந்த மாதிரி ஹெக்டர் 1ம் காலபிரயாணம் செய்ய வேண்டும் என கூறுகிறான்.அப்போது தான் நீ உன் மணைவியோடு சேர முடியும் என்கிறான்.

அங்கே இருக்கும் காரை எடுத்து செல்லும் ஹெக்டர் 2 எதிரே தான் அப்போது நிர்வாணமாக பார்த்த பெண் சைக்கிளில் வருவதை பார்க்கிறான்.அப்போது அவனது காரை ஒரு கார் இடித்து பள்ளத்தில் தள்ளி விட்டு செல்கிறது.இதனால் தலையில் அடிபடும் ஹெக்டர் 2 கட்டு போட பேன்டேஜ் எடுத்து கண்ணாடியில் பார்க்கிறான்.பேன்டேஜ் சுற்றி கொண்டு தன்னை விரட்டியவன் தானே தான் என்பதை அப்போது உணருகிறான்.

அப்போது அங்கே வரும் அவன் நிர்வாணமாக பார்த்த பெண் அவனை விசாரித்து அவன் தலையில் சுற்றிய பேன்டேஜ் மீதியை தன் கத்திரிகோலால் வெட்டுகிறாள்.முன் தன்னை தானே குத்திய கத்திரிகோல் தான் அது என உணரும் ஹெக்டர் 2 அந்த கத்திரிகோலை எடுத்து அந்த பெண்ணை மிரட்டி அவளை ஹெக்டர் 1 பார்க்குமாறு மேலாடையை கழட்ட சொல்கிறான். தனக்கு முன்பு நடந்ததை அப்படியே ஹெக்டர் 1க்கு நடக்க செய்கிறான்.முன்பு நடந்த நிகழ்ச்சிகள் ஹெக்டர் 2வால் பார்வையில் ஹெக்டர் 1க்கு நடக்க செய்யபடுகிறது.முடிவில் ஹெக்டர் 1 முன்பு ஹெக்டர் 2 செய்தது போலவே காலபிரயாணம் செய்கிறான்.

எல்லாம் சுபமாக நடந்தது என ஹெக்டர் 2 நினைக்கும் போது சில ஹெக்டர் 2 எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடக்கின்றன.இதனால் மீண்டும் தான் காலபிரயாணம் செய்ய வேண்டுமென ஹெக்டர் 2 ஆராய்ச்சிகூடத்தில் இருப்பவனிடம் சொல்கிறான். ஆனால் ஆராய்ச்சிகூடத்தில் இருப்பவன் ஹெக்டர் 2 மீண்டும் அனுப்ப முடியாது என கூறுகிறான். அவனை மிரட்டும் ஹெக்டர் 2 தான் மீண்டும் போயே ஆக வேண்டும் என கூறுகிறான்.

உன்னை காலபிரயாணம் செய்ய விடகூடாது என ஹெக்டர் 3 தன்னிடம் கூறியதாக ஆராய்ச்சிகூடத்தில் இருப்பவன் ஹெக்டர் 2விடம் கூறுகிறான்.ஹெக்டர் 3 யார் என ஹெக்டர் 2 கேட்கிறான். உனக்கு 40 வினாடிகள் முன்பாக ஹெக்டர் 3 அதாவது ஹெக்டர் 2க்கு 40 வினாடிகள் முன்பாக கலனில் இருந்து வந்ததாக கூறுகிறான். இதை கேட்டு ஹெக்டர் 2 மட்டுமில்லாமல் அதிர்கிறான்.

ஹெக்டர் 3 எப்படி வந்தான்... ஹெக்டர் 2 அடுத்து என்ன செய்ய போகிறான்.... மூன்று ஹெக்டர்களில் யார் அவனது மனைவியோடு சேர போவhttp://www.blogger.com/img/blank.gifது என சொல்கிறது மீதி படம்.விறுவிறுப்பாக ஒரு மணிநேரம் போக வேண்டுமானால் இந்த படத்தை பாருங்கள்.இந்த ஸ்பானிஷ் படம் ஆங்கில Subtitle உடன் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.சுட்டி இங்கே

இந்த ஸ்பானிஷ் படத்தின் டிரைலர்



அன்புடன்,
லக்கி லிமட்
Share:

3 comments:

  1. Time crime in English
    http://www.demonoid.me/files/details/1865276/32269080/

    ReplyDelete
  2. இந்த படத்தின் கதையை ஐஎம்டிபியில் தற்செயலாக படித்துவிட்டு ரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்டேன்..
    ஆனால், இப்பதான் தமிழுல ஒரு விமர்சனத்தை படிக்கிறேன்.ரொம்ப நன்றி.

    ReplyDelete
  3. Watch triangle... Same story, with different treatment...

    ReplyDelete