Showing posts with label Sci-Fi. Show all posts
Showing posts with label Sci-Fi. Show all posts

Fringe [2008-2013]


பல நாள் Draftல் அரைகுறையாக தூங்கி கொண்டிருந்த இந்த பதிவுக்கு போன வாரம் முடிந்த இந்த சீரீஸின் முடிவால் விடிவு வந்திருக்கிறது. Time Travel கதையை கொண்ட படம் என்றால் அது எப்படிப்பட்ட பிளாப் ஆன படமானாலும் தேடி பிடித்து பார்க்கிற ஆள் நான். இதற்கு காரணம் Back To The Future படம். பிளஸ்2 படிக்கும் போது எப்படிடா இப்படி எல்லாம் யோசிச்சு படம் எடுக்குறாங்கனு நினைக்க வச்ச படம். படத்தை பார்த்து விட்டு படத்தை பார்க்காதவர்களிடம் கதையை சொல்லுவதிலேயே ஒரு ஆனந்தம்,கெத்து இருந்தது அப்போது.இதற்கு பிறகு பல Time Travel படங்கள் பார்த்திருந்தாலும் இதனை போல் என்னை எதுவும் கவரவில்லை.

வேற எந்த Time Travel படமும் இனிமேல் இது போல் பிடிக்காது என நினைத்திருக்கும் போது நம்ம பாலா அறிமுகபடுத்திய ஆங்கில சீரீஸ் Lost  எனது வாயை பிளக்க வைத்தது. ஒவ்வொரு episode முடியும் போதும் அடுத்த எபிசோடை பார்த்தே தீர வேண்டும் என்ற வெறியை உண்டாக்கியது. Time travel மட்டுமில்லாமல் அதனை ஒட்டிய பல Sci-Fi சமாச்சாரங்களை வைத்து அதகளம் பண்ணியிருப்பார்கள்.இதை பற்றி பாலா எழுதிய பதிவை இங்கே காணலாம்.Sci-Fi ரசிகர்கள் தவற விட கூடாத நாடகம் இது. அடுத்து என்ன வரும்னு பொறுமை இல்லாமல் அவசர கதியில் பார்த்ததால் பல விஷயங்கள் புரியவில்லை .மீண்டும் முதலில் இருந்து பார்க்க எண்ணியுள்ளேன்.

சரி...Fringe சீரீஸ்க்கு வருவோம். Time travel சம்பந்தப்பட்ட அனைத்து Sci-Fi விஷயங்களை கொண்ட இன்னொரு நாடகம். Time Travel , Parallel Universe , Time Line,Time leak என சொல்லிக்கொண்டே போகலாம். Time இதில் முக்கியமானதாக இருந்தாலும் அது போக பல Sci-Fi விஷயங்களையும்,Scienceக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும்(அதாவது Fringe Science என இதில் சொல்வார்கள்)  கலந்தடிப்பார்கள்.  உதாரணமாக Shape Shifting,Mutation,Pattern இப்படி என்னென்னமோ சொல்வார்கள்.  அதற்காக ராவாக போகும் என நினைக்க வேண்டாம். விறுவிறுப்புக்கும்,திரிலிங்க்கும் பஞ்சமிருக்காது.

இந்த சீரீசை உருவாக்கியவர் Lost சீரீஸ் உருவாக்கியவர்களில் ஒருவரான , மேலும் MI-3 , Star Trek , Super 8 போன்ற படங்களின் டைரக்டர் J.J Abrams. Lost சீரீஸ் ஒன்றே போதும் இவரது திறமைக்கு. மேலும் வரப்போகும் Star Trek இரண்டாம் பாகம் மற்றும் Star Warsஇன் அடுத்த பாக டைரக்டரும் இவரே.

Walter ஒரு அறிவியல் ஆய்வாளர் விஞ்ஞானி. அவரின் ஏழு வயது மகன் Peter ஒரு அரிய நோயால் பாதிக்கபடுகிறான். பல வருடங்களுக்கு முன்னர் இருந்த இந்த நோயை அப்போது குணப்படுத்திய டாக்டர் 1936ல் இறந்து விடுகிறார். இதனால் டைம் டிராவல் செய்து 1936 க்கு முன்னர் சென்று அந்த டாக்டரை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்து தன் மகன் Peterஐ காப்பாற்ற நினைக்கிறார் Walter. ஆனால் அதற்காக கண்டுபிடிக்கும் கருவி அவர் நினைத்ததை போல் செயல்படாமல் வேறுவிதமாக செயல்படுகிறது. இதனால் தன் மகன் Peterஐ காப்பாற்றமுடியாமல் போகவே Peter இறந்துவிடுகிறான். இதனால் மிகவும் நொந்து போன Walter அடுத்து செய்யும் ஒரு காரியம் இரு உலகங்களை புரட்டி போட போகிறது என தெரியாமல் செய்து விடுகிறார். .இந்த நிகழ்வுகள் நடப்பது 1980களின் மத்தியில்.

பல வருடங்களுக்கு பின் தற்போதைய காலத்தில் 2008ல் ,  Scienceக்கும் அப்பாற்பட்ட அல்லது தற்போதைய Scienceஆல் விளக்கம் அளிக்க முடியாத பல விஷயங்களையும், நிகழ்வுகளையும் (இதனை Fringe Science என்கின்றனர்) கண்டறிய, ஆராய FBI ஆல் Fringe Division என்னும் பிரிவு உருவாக்கபடுகிறது. இதில் பணியாற்றுபவள் கதாநாயகி Olivia. தானாக Auto Pilot மூலமாக பாஸ்டன் நகரில் தரை இறங்குகிறது ஒரு விமானம். உள்ளே இருந்த 147 பயணிகள் அனைவரும் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்து  எலும்புகள் மட்டும் எஞ்சிய நிலையில் இறந்திருக்கிறார்கள். இதை போல் பல விளக்கமுடியாத  நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கின்றன. இதனை ஆராய ஆரம்பிக்கிறாள் Olivia.

இதற்கு உதவ மற்றும் ஆராய விஞ்ஞானி Walter ஐ அணுகுகிறாள். ஆனால் Walter இருப்பதோ மனநல மருத்துவமனையில், மேலும் பழைய நினைவுகள் பலவற்றை மறந்த நிலையிலும்,  நிலையான மனநிலை இல்லாதவராக இருக்கிறார். எனவே அவரை கட்டுக்குள் வைக்கவும், செயல் பட வைக்கவும் அவரது மகன் Peter ஐயும் உடன் சேர்த்து கொள்கிறாள். இந்த மூவர் குழு Fringe நிகழ்வுகளை ஆராய ஆரம்பிக்கிறது. Peter தான் சிறுவயதிலேயே இறந்து விட்டானே எப்படி வந்தான் என கேட்பவர்களுக்கு விடை , இரண்டாவது சீசனில் .

இப்படி Fringe நிகழ்வுகளை ஆராய்ந்து , நடக்க போகும் விபரீதங்களை தடுத்து கேஸை முடிப்பதாக The X Files சீரீஸ் போலவே செல்லும் முதல் சீசன் ஏழு ,எட்டு  எபிசொடுகளுக்கு பிறகு புது தடத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது. மதில்களை வழியே  ஊடுருவி சென்று பல பேங்க் safe deposit boxகளை கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல். அந்த safe deposit boxகளிருந்து எடுக்கப்பட்ட பாகங்களை இணைத்து உருவாக்கப்படும் teleportation device மூலமாக யாரும் தப்பவே முடியாத ஜெர்மன் சிறையில் இருந்து teleportation மூலமாக தப்புகிறான் Jones என்பவன்.

இதிலிருந்து விறுவிறுவென சூடு பிடித்து ஓடும இந்த சீரீஸ் முதல் சீசன் முடிவிலிருந்து ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. காரில் சென்று கொண்டிருக்கும் Olivia திடீரென காணாமல் போக... Peter 1978-1985 என பொறிக்க பட்டிருக்கும் தன் மகன் Peter கல்லறைக்கு Walter சென்று அஞ்சலி செலுத்த... காணாமல் போன Olivia 9/11/2001 இல் தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட World Trade Center இல் இருக்க...ஆனால் வருடம் 2008 ... என பல திருப்பங்களோடு முடியும் முதல் சீசன் இரண்டாவது சீசனை உடனே பார்க்க வைத்து விடும். முதல் சீசனின் ட்ரைலர் கீழே


முதல் சீசனின் முடிவு தான் இப்படி என்றால் இரண்டாவது சீசனின் ஆரம்பம்  அடுத்து வரும் 20 வினாடிகள் டைட்டிலை கூட பார்க்க பொறுக்காமல் ஓட்ட வைத்தது. திடீரென காரிலிருந்து காணாமல் போன Oliviaவை தேடி Walter மற்றும் Peter கார் இருக்கும் இடத்திருக்கு வர, Walter காரின் உள்ளே சென்று ஆராய அடுத்து நடப்பதை கீழே உள்ள லிங்கில் பாருங்கள்...

A New Day in the Old Town / FRINGE

 முதல் சீசன் முடிவு போலவே இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன் முடிவுகளும் உங்களை அடுத்த சீசனுக்காக காத்திருக்க முடியாமல் இருக்க வைக்கும். அதிலும் மூன்றாவது சீசனின் முடிவு இந்த சீரீஸின் பெஸ்ட் Finale. நாலாவது சீசன் பாதி வரை நன்றாக செல்லும் சீரீஸ் அதற்கடுத்து எல்லா சீரீஸ் போல கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை தான். நாலாவது சீசனோடு முடித்திருக்கலாம். ஐந்தாவதாக 13 எபிசோடு கொண்ட சீசன் என இழுத்து போன வாரம் தான் முடித்திருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை  Sci-Fi ரசிகர்களுக்கான சரியான தீனி இந்த சீரீஸ் . அனைத்து சீசன்களும் முடிந்து விட்டதால் மொத்தமாக டவுன்லோட் செய்து பார்த்து விடலாம்.

- லக்கி லிமட்
Share:

Timecrimes - Los Chronocrímenes காலகுற்றம்


மற்றுமொரு விறுவிறுப்பான ஸ்பானிஷ் மொழி Time Travel படம் இது.ஹெக்டர் என்பவன் தனது தனது மணைவியோடு புதியதாக மாறிய வீட்டில் பொருள்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கிறான்.அப்போது ஒரு போன் அழைப்பை எடுக்கிறான்.மறுமுனையில் யாரும் பேசாமல் போகவே அந்த எண்ணுக்கு அவனே மீண்டும் போன் செய்கிறான்.அப்போது பதில் இல்லை வித்தியாசமான சப்தம் மட்டும் வருகிறது.பின் தன் வீட்டின் வெளியில் சேரில் அமர்ந்து எதிரே உள்ள மலைபகுதியை பைனாகுலரில் ஆராய்கிறான்.
Share:

Frequency [2000] - அமானுஷ்ய அலைவரிசை

நண்பர்களே,
அமானுஷ்ய அலைவரிசை என்ற தலைப்பை பார்த்தவுடன் நமது காமிக்ஸ் ரசிகர்களுக்கு மர்ம மனிதன் மார்ட்டின் அறிமுகமான அமானுஷ்ய அலைவரிசை கதை நினைவு வரலாம். அதே போல் அமானுஷ்மான இப்படத்தை நேற்று பார்த்தேன்.ஆங்கில படங்களில் Sci-Fi படங்கள் என்றாலே எனக்கு கொஞ்சம் அலாதி.அதிலும் time travel சம்பந்தப்பட்ட கதைகளை தேடி தேடி பார்ப்பேன். இப்படம் time travel கதைகளை போன்றே வித்தியாசமான கதையை கொண்டது.நிகழ்காலத்தில் இருக்கும் மகன் இறந்தகாலத்தில் 30 வருடங்களுக்கு முன் இறந்த தனது தந்தையுடன் அவர் தீ விபத்தில் இறக்க போகும் சிறிது நேரத்திற்கு முன்னாள் பேசியதால் என்ன நடந்தது என்பதை இப்படம் சுவராசியமாக சொல்கிறது.
Share:

12:01

வணக்கம் நண்பர்களே ,
யதோச்சையாக Time Travel திரைப்படங்களை கூகுளில் தேடி கொண்டிருந்தபோது இப்படம் சிக்கியது. 1993 ல் இப்படம் டிவியில் அமெரிக்காவில் Fox Network ல் வெளியானது.

Barry Thomas ஒரு Science Research Lab ல் அலுவலக பணியில் அடிக்கடி தன் தலைமை அதிகாரியிடம் குட்டு வாங்கும் ஓர் சாதாரண பணியாளன். அவனே யாரென்றே தெரியாமல் Science Research Lab ல் விஞ்ஞானியாக இருக்கும் Lisa Fridercks கதாநாயகியை தினமும் பார்த்து மென்று முழுங்குகிறான்.
Share: