12:01

வணக்கம் நண்பர்களே ,
யதோச்சையாக Time Travel திரைப்படங்களை கூகுளில் தேடி கொண்டிருந்தபோது இப்படம் சிக்கியது. 1993 ல் இப்படம் டிவியில் அமெரிக்காவில் Fox Network ல் வெளியானது.

Barry Thomas ஒரு Science Research Lab ல் அலுவலக பணியில் அடிக்கடி தன் தலைமை அதிகாரியிடம் குட்டு வாங்கும் ஓர் சாதாரண பணியாளன். அவனே யாரென்றே தெரியாமல் Science Research Lab ல் விஞ்ஞானியாக இருக்கும் Lisa Fridercks கதாநாயகியை தினமும் பார்த்து மென்று முழுங்குகிறான்.

ஒரு நாள் வழக்கம் போல் காலையில் எழுகிறான், டிவியில் செய்திகள் கேட்கிறான்,செய்திதாளில் அன்றைய செய்தியை வாசிக்கிறான் அலுவலகத்திற்கு நேரமானதால் போன் செய்யும் அம்மாவிடம் கூட வேக வேகமாக பேசிவிட்டு கிளும்புகிறான், செல்லும் வழியில் ஒரு கார் விபத்தை பார்க்கிறான்,அலுவலகத்திற்கு தாமதமாக வந்ததால் தலைமை அதிகாரியிடம் திட்டு வாங்குகிறான்,காலையில் செய்திகளில் பார்த்த விஞ்ஞானியை பார்க்கிறான் , தன் அலுவலக நண்பனுடன் சேர்ந்து யாருடனோ பேசிக்கொண்டு இருக்கும் கதாநாயகியை பார்க்கிறான்,பின் கேண்டீனில் கதாநாயகியிடம் வழிந்து விழுகிறான் , பின் அவளிடம் பேச சென்று வாங்கி கட்டி கொள்கிறான்,மாலையில் அலுவலகம் விட்டு செல்லும் போது ரெட் ரோஸ் வாங்கிகொண்டிருக்கும் கதாநாயகியை யாரோ காரில் செல்லும் இருவர் சுட்டு கொன்று விட்டு செல்வதை பார்க்கிறான், கதாநாயகி இறந்த சோகம் தாங்காமல் நண்பனுடன் சென்று பாரில் ஊத்தி விட்டு வீடு வந்து மீண்டும் தூங்குகிறான்.அப்பாடா!!! முடிந்தது.

என்னடா கதையை பற்றி சொல்ல சொன்னால் ஒவ்வொரு காட்சியாக கூறுகிறேன் என்று முறைக்காதீர்கள். படம் முழுவதும் இது மட்டும் தான் திரும்ப திரும்ப நடக்க போகிறது. இரவில் தூங்க செல்லும் Barry Thomas ஒரு மின்னலால் தன் வீட்டு விளக்கின் மூலம் 12:01 மணிக்கு மின்சாரத்தால் தாக்கப்படுகிறான். மீண்டும் காலையில் எழுந்து பார்த்தால் மேலே சொன்ன நிகழ்ச்சிகள் முழுவதும் மீண்டும் நடப்பதை உணருகிறான். அலுவலகத்திலும் எல்லாம் மீண்டும் நடப்பதை உணருகிறான். கதாநாயகி Lisa Fridercks உயிரோடு இருப்பதை பார்க்கிறான். அப்பொழுது தான் நேற்றை நாள் மீண்டும் நடப்பதை உணருகிறான்.மாலையில் கதாநாயகியை காப்பாற்ற நினைக்கிறான் முடியவில்லை. நேற்றைய நாள் போல் சுட்டு கொல்ல படுகிறாள்.அடுத்த நாள் காலை மீண்டும் அதே படுக்கையில் இருந்து எழுகிறான்.நேற்றைய நாள் மீண்டும் நடக்கிறது.

தன்னை தவிர உலகமே செய்தியில் விஞ்ஞானி கூறியது போல் காலசுழலில்(Time Loop)சிக்கியிருப்பதை அறிகிறான்.அன்றைக்கு கதாநாயகியை காப்பாற்றி விடுகிறான். ஆனால் 12:01 மணியிலிருந்து மீண்டும் அடுத்த நாள் பழைய படி வருகிறது. இது எதனால் வருகிறது ? தான் மட்டும் ஏன் காலசுழலில் சிக்கவில்லை? இதை எப்படி நிறுத்துவது என்பதை கதாநாயகியுடன் தினமும் சேர்ந்து அவளை நம்ப வைத்து அவள் உதவியுடன் அறிந்து தடுப்பதே மீதி கதை. ஒவ்வொரு நாளும் ஏதோ காரணத்தால் தடை படுவதும் , அதை அடுத்த நாள் சமாளித்து இறுதியில் நாயகன் வெற்றி பெறுகிறான் என்பது சுவையாக போகிறது. Time Travel கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு .பாருங்களேன். மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும் .

அன்புடன்,
லக்கி லிமட்
Browse All | Browse Comics
Share:

7 comments:

 1. தேடிக்கிட்டிருக்கேன்.. என்னா கானோம்?

  ReplyDelete
 2. இங்கே பாருங்க அண்ணாமலையான் நண்பரே ,
  http://www.sinlesslinks.com/Movies/1201-1993-tvrip-xvid/

  ReplyDelete
 3. Watch the similar kind of movie "Ground Hog Day"

  http://msk-cinema.blogspot.com/2009/04/groundhog-day-1993.html

  ReplyDelete
 4. இன்னும் சில படங்கள்
  TimeLine
  Frequency
  Time traveller's Wife
  The Lake house
  A sound of thunder
  Back to the future..series
  The Time Machine
  The Jacket

  ReplyDelete
 5. thanks for the post,, realy good...

  ReplyDelete
 6. where can i download this movie friend?send the link to my mail id rezuwaan1988@gmail.com

  ReplyDelete
 7. there are many movies titled prometheus. one of the prometheus movie is like the same story u just just described. fantastic movie. search in imdb and piratebay

  ReplyDelete