Wallace & Gromit in The Curse of the Were-Rabbit


Wallace & Gromit in The Curse of the Were-Rabbit - இப்படம் நண்பர் Saravana Kumar MSK இன் கடந்த பதிவான Mary and Max படத்தை போலவே ஒரு Clay Animation படமாகும்.Wallace & Gromit கதாபாத்திரங்கள் UKவை சேர்ந்த Animation கதாபாத்திரங்கள்.30 நிமிடங்களே ஓடுமாறு தயாரிக்கப்பட்ட இவ்விரு கதாபாத்திரங்களின் Animation படங்கள் , Wallace & Gromit in The Curse of the Were-Rabbit படத்தின் மூலம் ஒரு முழுநீள படமாக வெளிவந்தது.இப்படம் DreamWorks Animation and Aardman Animations ஆகியோரால் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

நகரில் ராட்சச காய்கறிக்கான போட்டி நடை பெற இருக்கிறது. அனைவரும் தங்கள் தோட்டத்தில் வளர்க்கும் காய்கறிகளை போட்டிக்கு கொண்டு செல்ல தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஒரே தொல்லை முயல்கள். தோட்டத்தில் வளர்க்கும் காய்கறிகளை சாப்பிட்டு விடுகின்றன. இதை தடுக்கும் பொறுப்பில் Wallace மற்றும் Gromit ஈடுபட்டுள்ளனர்.Wallace தன் சில கண்டுபிடிப்புகளின் துணை கொண்டு எல்லாருடைய தோட்டத்தில் வளர்க்கும் காய்கறிகளை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்து உள்ளான்.

இருவரும் சேர்ந்து காய்கறிகளை சாப்பிடும்,சேதபடுத்தும் முயல்களை பிடிக்கின்றனர். அவற்றை எல்லாம் தங்கள் வீட்டில் வைத்துள்ளனர். ஒரு கட்டத்தில் முயல்களை வைக்க இடபற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க Wallace முயல்களின் மனதை மாற்றி அவை காய்கறிகளை சேதபடுத்தாமல் இருக்க வைக்கும் ஒரு புது இயந்திரத்தை கண்டுபுடிகிறார்.அதை ஒரு முயலை கொண்டு பரிசோதிக்கும் போது ஏற்படும் விபத்தால் அந்த முயல் Wallace ஐ போலவே செயல்படுகிறது. காய்கறிகளை சாப்பிடாமல் Wallace விரும்பும் cheese ஐ விரும்பி சாப்பிடிகிறது , Wallace இன் குணநலன்கள் சில வந்து விடுகிறது.

நகரில் திடீரென ஒரு ராட்சச முயல் ஒன்றின் அட்டகாசம் துவங்குகிறது. மனிதனை விட பல மடங்கு பெரிதாக இருக்கிறது. இதனால் நகரில் உள்ள மக்கள் பெரும் அவதி படுகின்றனர். அந்த ராட்சச முயலால் அனைத்து காய்கறிகளும் சாப்பிட படுகின்றன. Wallace மற்றும் Gromit இருவரும் தாங்கள் செய்த பரிசோதனையில் மாற்றப்பட்ட முயலின் வேலை தான் இது என நினைத்து அதை புடிக்க முயலுகின்றனர்.ஆனால் ஒருநாள் இரவு அந்த முயலை பிடிக்க முயலுகையில் Gromit இந்த ராட்சச முயல் Wallace கண்டுபிடிப்பின் மூலம் பரிசோதிக்கப்பட்ட முயல் அல்ல என்பதை கண்டுபுடிகிறது. எப்படி அந்த ராட்சச முயல் வந்தது எங்கிருந்து வருகிறது என்ற திடிக்கிடும் உண்மையை கண்டுபுடிகிறது. அந்த முயலை தடுக்க Gromit முயலுவது தான் மீதி படம் .

படத்தின் ஆரம்பத்தில் Wallace மற்றும் Gromit இருவரும் சேர்ந்து முயல்களை பிடிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பின் அந்த ராட்சச முயல் வந்தது என்ற திருப்பம் அருமை. Animation படங்களை ரசிப்பவர்கள் கண்டிப்பாக இப்படத்தை ரசிக்கலாம் .

அன்புடன்,
லக்கி லிமட்
Browse All | Browse Comics
Share:

3 comments:

  1. லிமட்,

    இப்படி ஒரு பிளாக் ஆரம்பித்து இருப்பதை சொல்லவே இல்லையே? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. விரைவில் பாத்துடுறேன்.
    ஃபார்மாலிட்டி டன்

    ReplyDelete