கிமுவில் சோமு


நண்பர்களே,
கிமுவில் சோமு என்ற இந்த காமிக்ஸ் பிரபல படங்களான இம்சை அரசன் புலிகேசி,அறை எண் 305ல் கடவுள் ஆகிய படங்களை இயக்கிய சிம்பு அவர்களால் வரையப்பட்டு ஆனந்த விகடனில் 1999 ஆம் ஆண்டு 25 வாரங்களாக தொடராக வெளிவந்தது. சிறந்த சித்திரங்களுடன் நகைசுவையுடனும் வாசகர்களின் பாராட்டை பெற்றது.இது ஆனந்த விகடனில் வெளியான நேரத்தில் தொடர்ச்சியாக படிக்க முடியவில்லை.தற்போது முழு புத்தகமாக படித்ததில் மகிழ்ச்சி.மேலும் இந்த சித்திரகதை உருவாக நமது கதாநாயகர்களான இரும்புக்கை மாயாவி,லக்கி லூக் ஒரு தூண்டுதலாக அமைந்ததாக சிம்பு அவர்கள் கூறியுள்ளார். இக்கதை 2004 ஆம் வருடமே நர்மதா பதிப்பகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தான் எனக்கு தெரிந்தது.சிம்பு அவர்கள் அவரது என்னுரையில் நமது லயன் காமிக்ஸ் கதாநாயகர்கள் ஆர்ச்சி,இரும்புக்கை மாயாவி ஆகியோரை பற்றி குறிப்பிட்டுள்ளார்.அவர் தற்போது எடுத்து கொண்டிருக்கும் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படம் கூட நமது லக்கி லூக்கை பிரதிபலிப்பதாக உள்ளது.சரி நாம் கதைக்கு வருவோம்.

கதைக்கு போகும் முன் கதையின் கதாபாத்திரங்களை பற்றி பார்ப்போம்.கதையின் கதாநாயகன் சோமு விஞ்ஞானி அவனது நண்பன் வெங்கி. சோமுவின் மாமா மகள் சுட்டிப்பெண் ருக்கு மற்றும் கயவர்கள் கபாலி,பிச்சு.மேலும் முல்லா தாத்தா இவர்களுடன் குட்டி டினோசர் சுப்புணி.டினோசர் எப்படி வந்தது என்பதை கதையில் காண்க.

சிறுவன் சோமு தன் தாத்தாவின் மேல் பாசமாக இருக்கிறான்.அவனது தாத்தா அவருக்கு கிடைத்த ஒரு விசித்திர பலகையின் துணை கொண்டு 12 வருடங்களாக ஏதோ ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.ஒருநாள் ஆராய்ச்சியில் ஏதோ வெடித்து தாத்தா இறந்து போகிறார்.மனம் உடையும் சோமு அந்த விசித்திர பலகையை எடுத்து வைத்து கொள்கிறான்.மேல்படிப்புக்காக தன் மாமா ஊருக்கு சென்னை செல்கிறான்.காலங்கள் உருண்டோடுகின்றன.பதினெட்டு வருடங்களுக்கு பிறகு சோமு படித்து விஞ்ஞானி ஆகிறான்.

தன் தாத்தா ஆராய்ச்சியை தொடர்கிறான்,வெற்றி கொள்கிறான்.தன் தாத்தாவின் கனவான கால இயந்திரத்தை கண்டுபிடிக்கிறான். தன் கண்டுபிடிப்பை தன் மெக்கானிக் நண்பன் வெங்கியிடம் காட்டுகிறான்.இருவரும் கால பயணம் மேற்கொள்ள தயாராகின்றனர்.அப்போது சோமுவின் மாமா பெண் ருக்கு வருகிறாள்.அவள் அடம் பிடிப்பதால் வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்து கால இயந்திரத்தில் ஏறி கி.பி 1450 செல்கின்றனர். அங்கே அந்த காலத்தில் வேட்டைக்கு வந்த மன்னர் படை துரத்தவே மீண்டும் நிகழ்காலம் வருகின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும் கயவர்கள் கபாலியும்,பிச்சுவும் அந்த கால இயந்திரத்தை தாங்கள் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடிவு பண்ணுகின்றனர்.சோமு,வெங்கியை மிரட்டி ருக்குவை பணயக்கைதியாக எடுத்துகொண்டு கால இயந்திரம் மூலம் கிமு ஆறரை கோடி ஆண்டுகளுக்கு பின்னால் செல்கின்றனர். என்ன செய்வது என தெரியாமல் முழிக்கும் சோமுவும் வெங்கியும் முல்லா தாத்தாவின் உதவியை நாடுகின்றனர்.அவர் வைத்திருக்கும் பறக்கும் கம்பளம் மூலம் சோமு இன்னொரு கால இயந்திரம் உருவாக்கி அவர்களும் கிமு ஆறரை கோடி ஆண்டுகளுக்கு பின்னால் பயனமாகின்றனர். அவர்கள் கபாலி,பிச்சுவை பார்த்தார்களா,ருக்குவை காப்பாற்றினார்களா என்பது மிகவும் சுவைபட விறுவிறுப்பாக செல்கிறது.

கதையில் அவர்கள் பயணிக்கும் டினோசர் காலம், ஆதிவாசிகள்,செவ்விந்தியர்கள்,சக்கரத்தை கண்டுபுடிக்கும் மனிதன்,டைட்டானிக் கப்பல்,கொலம்பஸ்,ரோமானிய பேரரசு,அசோக சக்கரவர்த்தி,கிளியோபட்ரா ஆகியவை மனதை கவரும் வண்ணம் உள்ளன.வாங்கி படித்து பாருங்களேன்.இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக்கவும். விலை ரூபாய் 40/-.




web counter

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse All - உலவல்



Share:

10 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு!

    மிகவும் அருமையான கதைஇது. (இந்த கதை என்னுடையது என்று வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடியது வேறு கதை).
    வழக்கம் போல இவரும் சில பல காமிக்ஸ் ஹீரோக்களின் பெயரை தவறாக கூறி இருக்கிறார் (இவர் நடுவில் பல காலமாக காமிக்ஸ் படிக்க வில்லை),
    இந்த புத்தகத்தின் உருவாக்கத்தில் இவர் தன்னுடைய ஆஸ்தான புத்தக சப்ளையர் சிவாவுக்கு கூட கிரெடிட் கொடுத்தமாதிரி நியாபகம்.

    கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டது இவரை சந்தித்து, பார்க்கலாம் - இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் ப்ரிவியூவிலவது அவரை சந்திக்க முடிகிறதா என்று.

    ReplyDelete
  2. ஆம் விஸ்வா, ஸ்பைடர் என்பதற்கு ஸ்பைடர்மேன் என்றும், வேதாளன் என்பதற்கு வேதாளம் என்றும் கூறியுள்ளார்.

    ReplyDelete
  3. இந்த கதையை நானும் ஆனந்த விகடனில் படித்து இறுக்கின்றோன்.... மீண்டும் படிக்க அவலக உள்ளது.... நன்றி நண்பரே.....

    ReplyDelete
  4. i was keeping the stories more from vikatan but i missed it even it missed the book some years age the stories is in my mind
    i like it so much

    ReplyDelete
  5. லிமட்,

    அருமையான ஒரு காமிக் தொடர் கிமுவில் சோமு. ஆனந்த விகடனில் நான் படித்தபோது, ஒவ்வொரு வாரமும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு வார முடிவிலும், ஒரு ட்விஸ்டுடன் வைத்து முடித்து நம்மை எதிர்பார்க்க வைத்திருப்பார், சிம்பு.

    புத்தக வடிவில், தன் அப்பா அம்மா, மதன் மற்றும் சிவா புக் ஸ்டாலுக்கும் நன்றி கூறியிருப்பதிலேயே அவர் எளிமை தெரிகிறது. இயக்குனர் அவதாரத்தில் மேலும் சாதிப்பார் என்று நம்புவோம்.

    இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்திற்கு அவர் லாரன்ஸை தேர்வு செய்ததே ஒரே குறையாக தெரிகிறது. அவரின் தொந்தரவுகள் சிம்புதேவனின் கதையமைப்பில் அதிகம் தெரியாவண்ணம் இருக்கும் என்று நம்புவோம்.

    உங்கள் பதிவை படித்துவிட்டு, 2004ல் வெளிவந்த இந்த புத்தகம் முழுக்க விற்று தீர்ந்தால், சந்தோஷபடுபவர்கள் நாமாக தான் இருக்க முடியும்.

    தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

    ReplyDelete
  6. ரபிக்,ramesh ,
    கருத்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  7. சிம்பு சினிமாவிற்கு சென்று விட்டாலும் காமிக்ஸ் வேலைகளை அவப்போது தொடர வேண்டும் என்பது என் ஆசை. செய்வாரா என் பார்ப்போம். சிம்பு தேவனின் ஓவியங்கள் சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  8. very nice information. i am going to buy this book soon.

    thanksssssssssssss.

    ReplyDelete
  9. arai en 305il kadavul padam parthu naa viyanthu vitten evarukku mattum kavul visithira mulaiyai koduthirukirar kadavuluku nandri eppadi oru padi paliyai koduthatharku

    ReplyDelete
  10. Hi im from srilanka i have read it in my childhood i wanna read it again can u send me the book via post?

    ReplyDelete