காமிக்ஸ் காதலர்களே ,காமிக்ஸ் உலகத்தில் புதையல் வேட்டை கதைகள் மிக பிரபலம். பல கதைகள் புதையல் வேட்டையை மையமாக கொண்டு வந்துள்ளன. நம் சிறுவயதில் புதையல் வேட்டை கதைகளையும், திரைபடங்களையும் விரும்பி பார்ப்பதுண்டு. புதையல் வேட்டை விளையாட்டும் விளையாடியதுண்டு. இவைகளை என்றுமே மறக்க இயலாது.
1985 ஆம் ஆண்டு
Steven Spielberg ஆல் கதை எழுதப்பட்டு ,
Richard Donner அவர்களால் இயக்கப் பட்டு வெளிவந்த திரைப்படம்
The Goonies . இப்படத்தை தற்சமயம் தான் பார்த்தேன்.
Hollywood ல் இன்று வரை சிறு வயது நினைவுகளை நினைவுபடுத்தும் சிறந்த
Classic திரைப்படமாக ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது.
இக்கதையின் மையக்கரு புதையல் வேட்டை தான். எனக்கும் புதையல் வேட்டை கதைகள் , திரைப்படங்கள் என்றால் அலாதி பிரியம். சிறுவர்களை வைத்து எடுத்துள்ளதால் என்னவோ இது நம் இளவயதில் படித்த புத்தகங்களையும் , விளையாடிய பருவத்தையும் நினைவு படுத்துகிறது.காமிக்ஸ் ரசிகர்கள் புதையல் வேட்டை கதைகளை மிகவும் ரசிப்பார்கள் என்பதால் என் மனம் கவர்ந்த இப்படத்தை பற்றி இங்கு பதிவிடுகிறேன்
திருட்டை தொழிலாக கொண்ட தங்களை
Fratellis என அழைத்துக்கொள்ளும் குடும்பத்தை சேர்ந்த திருடன் தன் தாய்
Fratelli மற்றும் சகோதரன் உதவியுடன் ஜெயிலில் இருந்து தப்புவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.
Astoria, Oregon கிராமத்தில் தான் நமது கதாநாயகர்கள் (The Goonies) படை வசிக்கிறது.
Mikey Walsh மற்றும்
Brandon Walsh இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கு அண்மை வீடுகளில் வசிக்கும்
Chunk,Mouth மற்றும்
Data ஆகியோர்
Mikey Walsh ன் நண்பர்கள் .இதில்
Brandon Walsh மட்டும் வாலிப வயதினன்.
Astoria Country Club Golf மைதானம் கட்டுவதற்காக இவர்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய சொல்கிறது. போதிய பணமின்மையால் மைதானம் கட்டுவதை தடுக்க முடியாமல் வீட்டை காலி செய்யும் நிலை அனைவருக்கும் ஏற்படுகிறது. இதனால்
Mikey Walsh பெரிதும் மன வருத்தமடைகிறான். அவர்கள் தாங்கள் சேர்ந்து இருக்கும் கடைசி வார விடுமுறையை ஒன்றாக கழிக்க விரும்புகிறார்கள்.ஆனால்
Brandon Walsh Driving License Test ல் தோல்வியடைவதால் கார் ல் வெளியே செல்ல முடியாத நிலை உருவாகிறது. பொழுது போகாமல் அனைவரும்
Mikey Walsh இன் தந்தை சேகரித்து வைத்துள்ள பழைய பொருட்க்களை கிளறுகிறார்கள். அப்போது ஒரு பழைய செய்தித்தாளும், பழைய ஸ்பானிஷ் வரைபடம் மற்றும் நாணயமும் ஒன்றும் கிடைக்கிறது . அதில்
Astoria, Oregon கிராமத்தில்
பிரபல கடற்கொள்ளையன் ஒற்றைக்கண் வில்லியின் புதையல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Mikey Walsh க்கு தன் தந்தை கூறியது நினைவு வருகிறது.