The Goonies - வாண்டுகளின் புதையல் வேட்டை - மீள் பதிவு


Browse Comics - The Gooniesகாமிக்ஸ் காதலர்களே ,
காமிக்ஸ் உலகத்தில் புதையல் வேட்டை கதைகள் மிக பிரபலம். பல கதைகள் புதையல் வேட்டையை மையமாக கொண்டு வந்துள்ளன. நம் சிறுவயதில் புதையல் வேட்டை கதைகளையும், திரைபடங்களையும் விரும்பி பார்ப்பதுண்டு. புதையல் வேட்டை விளையாட்டும் விளையாடியதுண்டு. இவைகளை என்றுமே மறக்க இயலாது.

1985 ஆம் ஆண்டு Steven Spielberg ஆல் கதை எழுதப்பட்டு , Richard Donner அவர்களால் இயக்கப் பட்டு வெளிவந்த திரைப்படம் The Goonies . இப்படத்தை தற்சமயம் தான் பார்த்தேன். Hollywood ல் இன்று வரை சிறு வயது நினைவுகளை நினைவுபடுத்தும் சிறந்த Classic திரைப்படமாக ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது.

இக்கதையின் மையக்கரு புதையல் வேட்டை தான். எனக்கும் புதையல் வேட்டை கதைகள் , திரைப்படங்கள் என்றால் அலாதி பிரியம். சிறுவர்களை வைத்து எடுத்துள்ளதால் என்னவோ இது நம் இளவயதில் படித்த புத்தகங்களையும் , விளையாடிய பருவத்தையும் நினைவு படுத்துகிறது.காமிக்ஸ் ரசிகர்கள் புதையல் வேட்டை கதைகளை மிகவும் ரசிப்பார்கள் என்பதால் என் மனம் கவர்ந்த இப்படத்தை பற்றி இங்கு பதிவிடுகிறேன்

Browse Comics - The Goonies - Fratellisதிருட்டை தொழிலாக கொண்ட தங்களை Fratellis என அழைத்துக்கொள்ளும் குடும்பத்தை சேர்ந்த திருடன் தன் தாய் Fratelli மற்றும் சகோதரன் உதவியுடன் ஜெயிலில் இருந்து தப்புவதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. Astoria, Oregon கிராமத்தில் தான் நமது கதாநாயகர்கள் (The Goonies) படை வசிக்கிறது. Mikey Walsh மற்றும் Brandon Walsh இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கு அண்மை வீடுகளில் வசிக்கும் Chunk,Mouth மற்றும் Data ஆகியோர் Mikey Walsh ன் நண்பர்கள் .இதில் Brandon Walsh மட்டும் வாலிப வயதினன்.

Browse Comics - The Goonies - With Treasure MapAstoria Country Club Golf மைதானம் கட்டுவதற்காக இவர்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய சொல்கிறது. போதிய பணமின்மையால் மைதானம் கட்டுவதை தடுக்க முடியாமல் வீட்டை காலி செய்யும் நிலை அனைவருக்கும் ஏற்படுகிறது. இதனால் Mikey Walsh பெரிதும் மன வருத்தமடைகிறான். அவர்கள் தாங்கள் சேர்ந்து இருக்கும் கடைசி வார விடுமுறையை ஒன்றாக கழிக்க விரும்புகிறார்கள்.ஆனால் Brandon Walsh Driving License Test ல் தோல்வியடைவதால் கார் ல் வெளியே செல்ல முடியாத நிலை உருவாகிறது. பொழுது போகாமல் அனைவரும் Mikey Walsh இன் தந்தை சேகரித்து வைத்துள்ள பழைய பொருட்க்களை கிளறுகிறார்கள். அப்போது ஒரு பழைய செய்தித்தாளும், பழைய ஸ்பானிஷ் வரைபடம் மற்றும் நாணயமும் ஒன்றும் கிடைக்கிறது . அதில் Astoria, Oregon கிராமத்தில் பிரபல கடற்கொள்ளையன் ஒற்றைக்கண் வில்லியின் புதையல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. Mikey Walsh க்கு தன் தந்தை கூறியது நினைவு வருகிறது.

பிரபல கடற்கொள்ளையன் ஒற்றைக்கண் வில்லி ஒருமுறை ஒரு புதையலை கைப்பற்றியதாகவும் , பின் அதை தன் கப்பலில் நிரப்பிக் கொண்டு சென்றதாகவும், அவனை பிடிக்க பிரிட்டிஷ் அரசன் அனுப்பிய படைகளுடன் போரிடும் போது தான் தோற்று விடுவோம் என அறிந்த வில்லி ஒரு கடற் குகையில் தன் கப்பலுடன் புகுந்து கொண்டதாகவும், பிரிட்டிஷ் படை அந்த குகையை வாயிலை தகர்த்து மூடி விட்டதால் வில்லி அங்கேயே மாட்டி கொண்டதாகவும் , உள்ளே மாட்டிக்கொண்ட வில்லி அங்கே இருந்து பல குகைகள் , பாதாள வழிகள் மற்றும் பல அபாய ஆளை கொள்ளும் பொறிகள் விட்டு பின் தன் உடனிருந்த அனைவரையும் கொன்றுவிட்டு தானும் இறந்து விட்டதாகவும்,ஆனால் ஒருவன் மட்டும் கப்பலை சென்றடையும் வரைபடத்தோடு தப்பி வந்து விட்டதாகவும் தன் தந்தை கூறியதாக கூறுகிறான்

Browse Comics - The Goonies - Chunk - Mikey - Mouth - Dataமேலும் அதற்கான வரைபடமும் இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது. அதை நம்பும் Mikey Walsh நாம் அனைவரும் சேர்ந்து புதையலை கண்டுபிடிக்கலாம், அதன் மூலம் தங்கள் வீட்டை காலி செய்வதில் இருந்து தப்பலாம் என கூறுகிறான். அதற்க்கு அவன் நண்பர்களும் சம்மதம் தெரிவிக்கிறார்கள். ஆனால் Mikey Walsh அண்ணன் மட்டும் இவை எல்லாம் கட்டுக்கதை மற்றும் அவர்களை போக அனுமதிக்கமுடியாது என கூறுகிறான்.Mikey Walsh அண்ணன் Brandon Walsh ஐ ஏமாற்றி கட்டி போட்டு விட்டு அனைவரும் புதையல் வேட்டைக்கு கிளம்புகிறார்கள்.

வரைபடத்தை பின்பற்றி செல்லும் அவர்கள் புதையல் கப்பலுக்கு செல்லும் வழி என குறிப்பிட்டு இருந்த இடத்தில் ஒரு ரெஸ்டாரன்ட் இருப்பதையும் கண்டு அதன் உள்ளே செல்ல தீர்மானிக்கிறார்கள். அப்போது உள்ளே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அதை கேட்ட Chunk உள்ளே செல்ல வேண்டாம் திரும்பி விடுவோம் என கூறுகிறான். ஆனால் அது பாட்டில் உடைந்த சப்தம் என கூறும் மற்றவர்கள் Chunk யும் கூட்டி கொண்டு உள்ளே செல்கிறார்கள். உள்ளே முன்னர் ஜெயிலில் இருந்து தப்பி சென்ற திருடனும் , அவனது அம்மா மற்றும் அவனது சகோதரர்கள் இருக்கிறார்கள்.

Browse Comics - The Goonies - Mikeyஅவர்களை யார் என அறியாத நமது Goonies படை அவர்களை ரெஸ்டாரன்ட் இல் பணிபுரிபவர்கள் என நினைத்துக்கொண்டு செல்கிறார்கள்.உள்ளே வந்தவர்களை திருடர்களின் அம்மா Fratelli பயமுறுத்தி அவர்களுக்கு என்ன வேண்டும் என கேட்கிறாள். அப்போது Mikey பாத்ரூம் எங்கே என கேட்டு அந்த ரெஸ்டாரன்ட் ஐ ஆராய எண்ணி செல்கிறான். அங்கே மிகப்பெரிய உடலும்,பலமும் பார்க்க மிக விகாரமான ஒருவனை கட்டி வைத்துள்ளனர். அவன் பெயர் Sloth என்றும் அவனும் அவர்களின் சகோதரன் என்றும் அறிந்து கொள்கிறான். அவனை பார்த்து பயந்த Mikey ஓடுகிறான் நண்பர்களிடம் பின் அனைவரும் அங்கிருந்து திருடர்களால் விரட்டி அடிக்கப் படுகின்றனர் .

இவர்களை தேடி வந்த Mikey அண்ணன் Brandon கடைசியில் இவர்களை கண்டு விடுகிறான் . அப்போது ரெஸ்டாரன்ட் இல் வெளிவரும் திருடர்களும் அவர்களது அம்மாவும் கார் இல் எதையோ ஏற்றி செல்கின்றனர். அதை இவர்கள் குப்பை என நினைத்து கொள்கிறார்கள்.ஆனால் அவர்கள் கொண்டு சென்றது முன்னால் அந்த ரெஸ்டாரன்ட் க்குள் சென்ற இருவரில் ஒருவரது உடல். அவர்கள் இருவரும் FBI Agents, திருடர்களை பிடிக்க வந்த அவர்களை Fratellis கொன்று விடுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ரெஸ்டாரன்ட் கதவை உடைத்து உள்ளே செல்கின்றனர்.இதே சமயத்தில் Brandon தோழிகள் Andy மற்றும் Stef அங்கே வருகிறார்கள். பின் அவர்களும் இவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள்.

Browse Comics - The Goonies - In Restaurantஉள்ளே சென்ற பின் Mikey அங்கே ஒரு சுரங்க வழியை கண்டு பிடிக்கிறான். ஆனால் அதன் உள்ளே செல்ல அனைவரும் மறுக்க, எதிர்பாராதவிதமாக அங்கே உள்ள Freezer திறக்க அங்கே கொல்லப்பட்டFBI Agents இருவரில் ஒருவனது உடல் விழுகிறது , பின் அங்கே அந்த திருடர்கள் கள்ள நோட்டு அடித்துள்ளதையும் கண்டுபுடிகின்றனர் . அதன் பின் தான் தங்கள் கொலைகாரர்களிடம் வைத்திருப்பதை உணருகின்றனர் . அப்போது அந்த திருடர்கள் வந்து விட வேகமாக FBI Agent உடலை Freezer மீண்டும் மறைத்து வைத்து விட்டு அனைவரும் சுரங்க வழியில் உள்ளே செல்கின்றனர். ஆனால் FBI Agent உடலை Freezer இல் வைக்கும் பொது தவறுதலாக Chunk உள்ளே மாட்டிக் கொள்கிறான்.

Browse Comics - The Goonies - Fratellisமீண்டும் வந்த திருடர்கள் Chunk ஐ கவனிக்காமல் Freezer இல் உள்ள உடலை தூக்கி கொண்டு செல்கின்றனர். அந்த வீட்டில் இருந்து தப்பும் Chunk வெளியே சென்று ரோட்டில் வரும் காரை மறித்து உதவி கேட்கிறான். ஆனால் அந்த காரில் பிணத்தை ஏற்றிக்கொண்டு அந்த திருடர்கள் தான் வந்தனர். வந்த அவர்கள் Chunk ஐ பிடித்துக்கொண்டு மீண்டும் ரெஸ்டாரன்ட் வருகின்றனர் .Chunk பிடித்து ஏன் இங்கு வந்தாய் எதற்கு வந்தாய் என விசாரிக்கின்றனர். பயந்த Chunk உண்மையெல்லாம் சொல்லி விடுகிறான். Chunk ஐ அந்த விகார தோற்றமுடைய Sloth க்கு அருகில் அவனையும் கட்டி போட்டு வீட்டு சுரங்க வழியில் இவர்களும் புதையலை தேடி நுழைகின்றனர்.

Browse Comics - The Goonies - Chunk And Slothகட்டிபோடப்பட்ட Chunk Sloth இடம் அன்பு காட்டி அவனிடம் நட்பாகிறான். Sloth Chunk ஐ காப்பாற்றுகிறான். Sloth மற்றும் Chunk சேர்ந்து கொண்டு நண்பர்களை காப்பாற்ற அவர்களும் சுரங்க வழியில் நுழைகின்றனர். உள்ளே சென்ற நமது வாண்டு படை எப்படி வரைபடம் மூலம் புதையலை அடைகிறார்கள் , ஒற்றைக்கண் வில்லியின் அபாய பொறிகளை எப்படி முறியடித்து கப்பலையும் ஒற்றைக்கண் வில்லியையும் பார்க்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாகவும் . நகைசுவையாகவும் எடுத்துள்ளார்கள். திருடர்கள் இவர்களை விரட்டி வந்து படும் பாட்டையும் , வாண்டு படை அவர்களை சமாளிப்பதையும் அருமையாக படமாக்கி உள்ளார்கள்.




Browse Comics - The Goonies - In CavernBrowse Comics - The Goonies - In Cavern


Browse Comics - The Goonies - Chunkசிறுவன் Chunk செய்யும் சேட்டைகள் நம்மை சிரிக்க வைக்கின்றன. எதை எடுத்தாலும் போட்டு உடைக்கும் பாத்திரமாக சித்திரிக்கபட்டுள்ளான். Chunk ஐ கோவப்படுத்தி கதவை உடைக்கசெய்வதும் , Brandon காதலி அவன் என நினைத்துக்கொண்டு அவன் தம்பி Mikey க்கு இருட்டில் முத்தம் கொடுக்கும் காட்சிகள் நம்மை ரசிக்க செய்கின்றன . இறுதியில் வழக்கம் போல் எல்லா புதையல் வேட்டை கதைகளை போலவே குகை இடிந்து விழுகிறது. திருடர்கள் என்ன ஆனார்கள் ? கப்பல் புதையலோடு என்ன ஆனது ? நமது வாண்டு படை வீட்டை காலி செய்யாமல் காப்பற்றினார்களா ? என்பது மீதி சுவராசியம் .






Browse Comics - The Goonies - One Eyed Willie's Pirate ShipBrowse Comics - The Goonies - One Eyed Willie



1985 ல் எடுக்கப்பட்ட இப்படம் கிராபிக்ஸ் உக்தி இல்லாமல் நம்மை ரசிக்கும் படி எடுக்கப்பட்டுள்ளது .இதில் இணைந்து நடித்தவர்கள் எல்லாம் மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது . இது எந்தளவு உண்மை என தெரியவில்லை. மேலும் விபரங்களுக்கு The Goonies


Browse Comics - The Goonies
Share:

4 comments:

  1. லக்கி லிமட்,

    மீள் பதிவிலும் நாங்கதான் பஸ்ட். எப்படி?

    மேலும் பல நல்ல படங்களை தொடர்ந்து பார்க்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நண்பா மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்
    கண்டிப்பாக இந்த படமும் பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. விஸ்வா,கார்த்திக்,

    தங்கள் வருகைக்கு நன்றி...தொடர்ந்து உங்கள் ஆதரவை நல்குங்கள்

    ReplyDelete
  4. என்ன அருமையான விமர்சனம்..
    வாழ்த்துக்கள் நண்பரே.
    தெ கூனிஸ் படத்தை ஒரே ஒரு பார்த்திருக்கிறேன்.செம்மையான படம்.
    சிறுவன் Chunk கதாபாத்திரம் படத்தில் கலக்கலாக இருக்கும்.
    நன்றி மற்றும் பாராட்டுகள்.

    ReplyDelete