வில்லன்களிலே முக்கியமான வில்லன்
தன்னை வில்லாதி வில்லன் நம்பர் 1 என நினைத்து கொண்டிருக்கும் க்ரூ நினைப்பில் வெக்டர் என்பவன் மண்ணை போடுகிறான்.எகிப்தில் உள்ள பிரமிடையே திருடி தன்னை வில்லாதி வில்லன்களில் முக்கியமான வில்லன் என காட்டுகிறான்.இதனால் தன் பெருமைக்கு பங்கம் வந்ததை அறியும் க்ரூ நிலாவையே திருடி மீண்டும் தன் பெருமையை நிலை நாட்ட நினைக்கிறான்.இதற்க்காக கொடூர செயல்களுக்கு நிதி உதவி செய்யும் Bank Of Evil க்கு சென்று நிலாவை திருட ராக்கெட் செய்ய பண உதவி கேட்கிறான்.
வயதான க்ரூவை மட்டம் தட்டும் Bank Of Evil, தற்போதைய நிறைய இளவயது துடிப்பான திருடர்களுக்கு மத்தியில் வயதான க்ரூவை நம்ப மறுக்கிறது.அவனை நிலாவை சுருக்கி சிறிதாக்கும் கருவியை கொண்டு வந்து காட்டினால் நிதி உதவி செய்வதாக கூறுகிறது.
நிலாவை சுருக்கி சிறிதாக்கும் கருவியை திருடி கொண்டு வரும் வழியில் அதனை வெக்டர் அபகரித்து செல்கிறான்.அவனது இடத்திற்குள் நுழைய முடியாத க்ரூ வெக்டருக்கு பிஸ்கட் விற்கும் மூன்று அநாதை குழந்தைகளை தத்து எடுத்து அவர்களின் மூலம் நிலாவை சுருக்கி சிறிதாக்கும் கருவியை வெக்டரிடமிருந்து திருட நினைக்கிறான்.
தத்து எடுத்த மூன்று குழந்தைகள் அன்பில் சிறிது சிறிதாக அவனது கொடூர குணம் மாறுகிறது.க்ரூ வெக்டரிடமிருந்து நிலாவை சுருக்கி சிறிதாக்கும் கருவியை பறித்தானா... நிலாவை திருடி வில்லாதி வில்லன்களில் முக்கியமான வில்லனாக ஆனானா என்பது மீதிபடம்.
நமது Pixar படங்களுக்கு இணையாக முடியாவிட்டாலும் ரசித்து பார்க்க முடிகிறது.அதுவும் வில்லனாக க்ரூ ஐஸ் கீழே விழுந்ததால் அழும் சிறுவனுக்கு அழகான பலூன் செய்து கொடுத்து அவனது அழுகையை நிறுத்தி பின் அந்த பலூனையே உடைத்து விட்டு செல்லும் அறிமுக காட்சி நன்றாக இருக்கிறது.க்ரூ கீழே வேலை பார்க்கும் Minions என்னும் சிறு பொம்மைகளும் சிரிக்க வைத்து toy story யில் வரும் ஏலியன் மொம்மைகளை நினைவு படுத்துகின்றன.காட்டப்படும் மூன்று குழந்தைகளும் அதிலும் சிறிய பெண் குழந்தை அழகாக உள்ளது.பிஸ்கட் ரோபோட்கள் மூலம் நிலாவை சுருக்கி சிறிதாக்கும் கருவியை திருடுவது,மூன்று குழந்தைகளின் சுட்டிதனங்கள் போன்றவை ரசிக்க வைக்கின்றன.
அன்புடன்,
லக்கி லிமட்
ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்... நிச்சயம் பார்த்துவிடுகிறேன்...
ReplyDeleteமிக நல்ல விமர்சனம்! அனிமேஷன் படங்கள் எப்படி இருந்தாலும் ரசிக்கலாம்!
ReplyDeletephilosophy prabhakaran,எஸ்.கே வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே
ReplyDelete