The Expatriate [2012]

The Dark Knight இல் நடித்த Aaron Eckhart நினைவிருக்கிறதா...?. முதலில் Harvey Dent ஆக Batmanனுடன் சேர்ந்து குற்றவாளிகளை பிடிக்கும் நேர்மையான வக்கீலாகவும், பின்னர் ஜோக்கரால் மனம் மாற்றப்பட்டு பாதி வெந்த முகத்துடன் Two Face ஆக பயங்கர வில்லனாக நடித்தவர். இவர் தான் இப்படத்தின் ஹீரோ. இப்படத்தின் கதை ஒன்றும் புதியது இல்லை. ஒரே வரியில் சொல்லி விடலாம். போலீஸ் மற்றும் வில்லன்களால் துரத்தப்படும் ஹீரோ.

ஹீரோ Logan ஒரு Ex-CIA அதிகாரி. தாயை இழந்த தன் மகளுடன் பெல்ஜியமில்  ஒரு Security சாதனங்கள் தயாரிக்கும் கம்பெனியில் என்ஜினியராக வேலை பார்க்கிறான். அவனது வேலை தயாரிக்கப்படும் Security கருவிகளில் உள்ள குறைபாடு மற்றும் அதை எப்படி ஹேக் செய்து தகர்க்கலாம் என்பதை கண்டு பிடிக்கும் வேலை. மேலும் பல படங்களில் பார்த்தது போல் தன் டீன்ஏஜ் மகளுடன் அந்த வயதுக்கே உரித்தான   பிரச்சனைகளோடு , மகளுக்கு தான்  Ex-CIA என்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறான்.

ஒருநாள் தனக்கு வேலையாக கொடுக்கப்பட்ட Security லாக்கர் இரண்டை எப்படி ஹேக் செய்து திறக்கலாம் என கண்டுபிடித்து தனது மேல்அதிகாரியிடம் கூற , அவர் இன்று இரவுக்குள் ரிப்போர்ட் ரெடி செய்து கொடுத்து விட்டு போக சொல்ல, தனது மகளுக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு  ரிப்போர்ட்கொடுத்து விட்டு வெளியேறுகிறான். பின் தன் மகளை ஸ்கூலில் இருந்து அழைத்து கொண்டு  வரும் வழியில் மகளுக்கு உணவு அலர்ஜி ஏற்பட அப்படியே மருத்துவமனைக்கு சென்று அங்கேயே இரவு இருந்து விட்டு காலையில் கிளம்புகிறார்கள்.

போகும் வழியில் ஒரு வெளியாக தன் ஆபிஸ்க்கு வர அங்கே ஒரு குண்டூசி கூட இல்லாத அளவிற்கு துடைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அங்கே ஒரு அலுவலகம் இருந்ததிற்க்கான அறிகுறியே இல்லாத அளவிற்கு இருக்கிறது. தன் சகபணியாளர்களுக்கும், அலுவலக நம்பர்களுக்கும் போன் செய்ய, எல்லாம் செயலிழந்து இருக்கின்றன. உடனே தனது Head  ஆபிஸ்க்கு சென்று விசாரிக்கிறான். அப்படி அலுவலகமே எங்களுக்கு இல்லை  என்கிறார்கள்.

என்னவென்று மெல்ல மெல்ல ஆராய தான் ஏமாற்றப்பட்டு இருப்பதையும்,அவன் பணிபுரிந்த கம்பெனி உருவாக்கப்பட்டதே அந்த Security லாக்கர் திறக்கும் வழியை கண்டுபுடிக்க என்றும், உண்மையில் அந்த லாக்கர்கள் CIAவிற்கு பயன்படும் லாக்கர்கள் என்றும்,  அவனுடன் பணிபுரிந்த அனைவரும் கொல்லப்பட்டதையும் அறிகிறான். அதேவேளையில் அவனையும், மகளையும் கொல்லவும் துரத்த ஆரம்பிக்கிறார்கள். இதோடு CIAவும் இவனை தேட ஆரம்பிக்கிறது. இருவற்க்குமிடையே மாட்டிக்கொண்டு எப்படி தன் மகளையும் காப்பற்றி, தானும் தப்புகிறான் என்பதே படம்.


இதே கதையை கொண்டு பல படங்கள் வந்திருக்கின்றன. இனிமேலும் இதே கதையை ஆக்சன் காட்சிகளையும் , திருப்பங்களையும் மாற்றி இன்னும் எத்தனையோ படங்கள் எடுக்கலாம். ஆனால் இவை இரண்டும் ரசிக்கும் படி இருந்தால் எத்தனை படங்கள் என்றாலும் பார்க்கலாம். துரத்தல் படங்களில் இருக்கும் விறுவிறுப்பு இப்படத்திலும் கடைசிவரை இருப்பதால் நம்மால் போரடிக்காமல் ரசிக்க முடியும். மேலும் இறுதியில் வில்லன்களை பெரிதும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் போட்டு தள்ளும் தந்திரம் அருமை. இந்த CIA ரக ஆக்சன் பட பிரியர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். படத்தின் ப்ளுரே பிரிண்ட் டவுன்லோட் செய்ய கிடைகிறது. ட்ரைலர் மேலே.

- லக்கி லிமட்
Share:

8 comments:

 1. Aaron Eckhart ஹீரோவாக நடிப்பாருன்னே எனக்கு தெரியாது.. டைம் கிடைக்கும் போது பார்த்துவிடுகிறேன்!

  ReplyDelete
 2. அருமையான தகவல் ஜி! புது ஆங்கிலப்படங்களைக் குறித்ததான தெளிவு மிக மிக அருமையாக விளக்குற்றிருக்கிறது!

  ReplyDelete
 3. ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க கிட்ட இருந்து சினிமா பதிவு....
  Plot நல்லா இருக்கு தல....கண்டிப்பா பார்கிறேன்...

  ReplyDelete
 4. Aaron Eckhart battlefield LA என்ற ஏலியன் படத்தில் ஹீரோ! ராணுவ கமாண்டராக வருவார்!

  ReplyDelete
 5. பர பர விமர்சனம், தூள்! வாய்ப்பு கிடைத்தால் பார்த்து விட வேண்டியதுதான்!

  ReplyDelete
 6. Started little slow , energizing through out the movie

  ReplyDelete
 7. இந்த படத்தைப் பற்றி கேள்விப் படவில்லை. ப்ளு ரே டவுன்லோட் என்றாலும் கணினியில் பார்க்க முடியும் என்று நினைக்கிறன் சரிதானே ? பரபரப்பாக இருந்தால் எனக்கு பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ப்ளூரே ரிப் (rip) பற்றி தான் கூறினேன். கணிணியில் பார்க்கலாம்

   Delete