Rio - பறக்காத பறவை
அனிமேஷன் ஜாம்பவான் பிக்ஸ்சர்(Pixar)க்கு போட்டியாக இருக்கும் அனிமேஷன் ஸ்டுடியோகளில் ஒன்று 20th Century Fox இன் ப்ளூ ஸ்கை(Blue Sky) ஸ்டுடியோ. Ice Age மூன்று பாகங்களையும் உருவாக்கியவர்கள். Ice age படத்தின் மூன்றாம் பாகம் சமீபத்தில் வந்து வசூலை அள்ளியது. Ice Age தவிர Robots, Hoton Hears a Who என்ற இரு அனிமேஷன் படங்களை தந்துள்ளார்கள். ஆனால் Ice Age படங்களே இவர்களுக்கு நல்ல பெயரை தந்தது. Rio இவர்களின் ஆறாவது படம். Ice Age படங்களுக்கு அடுத்து மற்றொரு வெற்றி படத்தை தந்துள்ளார்கள்.
நீல நிற கிளிவகையை சார்ந்த படத்தின் கதாநாயகனான Blu பறக்க தெரியாத சிறுவயதில் பிரேசிலில் உள்ள Rio நகருக்கு அருகில் உள்ள காட்டில் இருந்து பறவை கடத்துபவர்களால் பிடிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல படுகிறது. அங்கே தவறுதலாக வண்டியில் இருந்து கீழே விழுந்து Linda என்னும் குட்டிப்பெண் எடுத்து வளர்கிறாள்.வருடங்கள் பல ஆகிறது. Lindaவுடன் சேர்ந்து Blu கிளியும் பறக்க தெரியாமலே வளர்கிறது.இருவரும் இணைபிரியா நண்பர்களாக உள்ளனர்.
Tulio என்ற பறவைகள் ஆராய்ச்சி செய்பவன் Lindaவை காண வருகிறான்.Blu கிளி வகைகள் அழிந்து விட்டதாகவும் , உலகிலேயே மீதி இரண்டு தான் உள்ளன எனவும்,ஒன்று ஆண் கிளியான Blu, மற்றொன்று பெண் கிளியான Jewel தன்னிடம் பிரேசிலில் உள்ள Rioவில் உள்ளதாக கூறுகிறான்.இவை இரண்டையும் குலவ விட்டு இதன் வகைகள் அழியாமல் காக்க முடியும் என கூறுகிறான்.அதற்கு தன்னுடன் Bluவும்,Lindaவையும் Rioவிற்கு அழைக்கிறான்.
Lindaவும் சம்மதித்து Bluவுடன் Rioவிற்கு செல்கிறாள்.அங்கே Bluவும்,Jewel பெண்கிளியும் பறவைகளை கடத்தி விற்கும் கும்பலால் கடத்தப்பட்டு விட அவைகளை தேட ஆரம்பிக்கின்றனர் Lindaவும், Tulioவும். பறவைகளை கடத்தி விற்கும் கும்பலில் இருந்து காலில் கட்டப்பட்ட சங்கலியோடு தப்பிக்கும் Bluவும்,Jewelலும்,Bluவுக்கு பறக்க தெரியாததால்,பறக்க முடியாமல் வேறு சில பறவைகளின் உதவி கொண்டு காலில் கட்டப்பட்ட சங்கலியை அவிழ்க்க படாதபாடு படுகின்றன.
Bluவும்,Jewelலும் சங்கலியை எப்படி அறுத்தன , பின் இரு கிளிகளும் எப்படி காதலில் விழுகின்றன , இவை இரண்டையும் தேடி கொண்டிருக்கும் கும்பலில் இருந்து எப்படி தப்பித்தன,Blu எப்படி பறக்க ஆரம்பிக்கிறது என்பது மீதி படத்தில் சுவராசியமாக நகைசுவையோடு செல்கிறது.
Bluவும்,Jewelலும் முதன் முதலில் சந்திக்கும் காட்சிகளும், திருட்டு குரங்கு கூட்டமும், Blu மற்றும் Jewel வுடன் கடைசிவரை வரும் மூன்று பறவைகளும் ரசிக்க வைக்கின்றன. பறவைகளை கடத்தி விற்கும் கும்பலில் இருக்கும் வில்லன் பறவையும் மறக்க முடியாத ஒன்று. அனிமேஷன் ரசிகர்கள் தவற விட கூடாத படம். படத்தின் முதலில் வரும் பறவைகள் அனைத்தும் சேர்ந்து போடும் ஆடலும் பாடலுமே போதும் கொடுத்த டிக்கெட் காசுக்கு.இந்த கோடையில் சிறுவர்களுக்கு அருமையான படம். படத்தின் முதல் இரு நிமிடங்களை கீழே பாருங்கள்
படத்தின் ட்ரைலர்
அன்புடன்,
லக்கி லிமட்
மிகவும் ரசித்து பார்த்தேன் இந்த படத்தை. படத்த்தின் மேக்கிங் பற்றிய பிரத்யேக வீடியோ மிகவும் அருமையாக இருந்தது.
ReplyDeleteநானும் படத்தை பார்த்துவிட்டேன் நண்பரே. கலர்புல் பிலிம்.
ReplyDeleteரியோவுக்கு படித்ததில் நல்ல விமர்சனம் நண்பா
ReplyDeleteநீங்க ப்ளாக் எழுதற்தில்லைன்னு நினைச்சிட்டு விட்டுட்டேன்,இப்போதான் இந்த ப்ளாக்கை ப்ளாக்ரோலில் சேர்த்தேன் நண்பா,இனி அவசியம் வருவேன்.
King Viswa ,! சிவகுமார் ! ,|கீதப்ப்ரியன்|Geethappriyan|
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே