Priest (2011) பிரிஸ்ட்



இரத்தக்காட்டேரிகள் அதாங்க Vampires படங்களுக்கு Zombies படங்கள் போலவே தனி ரசிகர் பட்டாளமே ஹாலிவுட்டில் உண்டு. இரத்தக்காட்டேரிகள் பட ரசிகர்களுக்கு சரியான தீனி கொடுத்த படமென்றால் Underworld பட மூன்று பாகங்களை சொல்லலாம். முதல் இரண்டு பாகங்கள் தொடர்ச்சியாக(sequel) வருபவை. ஆனால் மூன்றாம் பாகம் முதல் இரண்டு பாகங்களுக்கு(Prequel) முந்தைய கதையை தாங்கி வரும். முதல் பாகத்தில் நாம் நினைபவற்றை அப்படியே தலைகீழாக புரட்டி போடும். உதாரணமாக முதல் பாகத்தில் வில்லன்களாக இருப்பவர்கள் கதாநாயகர்களாக இருப்பர். மூன்று பாகங்களும் ரசிகர்களுக்கு சரியான ஆக்ஸ்ன் தீனி போட்டவை.

இப்போது Priest படத்திற்கு வரலாம். Underworld படத்தை போல இருக்குமென எண்ணி ட்ரைலரை பார்த்து விட்டு சென்றேன். Priests என்பவர்கள் இரத்தக்காட்டேரிகளுக்கும் , மனிதர்களுக்கும் நடக்கும் போரில் இரத்தக்காட்டேரிகளை அழிக்க சர்ச்சில் உள்ள பெரிய தலைகளால் உருவாக்கப்பட்டவர்கள். மேலும்  சர்ச் எது சொன்னாலும் கட்டுபடுபவர்கள். நடந்த முடிந்த போரில் இரத்தக்காட்டேரிகள் Priests ஆல் அழிக்கபடுகின்றன.

நம்ம கதாநாயகர் Priestsகளில்  ஒருவர். எஞ்சிஇருக்கும் மனித இனம் சர்ச் ஆளுகைக்கு கீழ்படிந்து வாழ்ந்து வருகிறார்கள். நம்ம கதாநாயகரின் சகோதரனின் மகளை சில இரத்தக்காட்டேரிகள் கடத்தி கொண்டு செல்ல , மேலும் சகோதரனையும், அவரது மனைவியும்   கொன்று விடுகின்றன. இதனை சகோதரனின் மகளின் காதலன் மூலமாக அறியும் கதாநாயகர் சகோதரனின் மகளை காப்பாற்ற செல்ல சர்ச்சிடம் அனுமதி கேட்கிறார்.
அவர்கள் இரத்தக்காட்டேரிகளே இல்லை அவை முழுவதுமாக அழிந்து விட்டன என அனுமதி தர மறுக்கவே அவர்களை எதிர்த்து சகோதரனின் மகளை மீட்க பைக்கில் 250 மைல் வேகத்தில் செல்கிறார். அட என நிமிர்ந்து உட்கார்ந்தால் படம் 0 மைல் வேகத்தில் செல்ல ஆரம்பிக்கிறது.

கதாநாயகருக்கு பில்டப் மட்டும் கொடுக்கிறார்கள் அதற்கான ஆக்சன் காட்சிகள் ஒன்றை கூட காணோம். இதில் கதாநாயகர் துப்பாக்கி பயன்படுத்த மாட்டாராம். சரி கத்தியை கொண்டு கலக்குவார் என பார்த்தால்  இரத்தக்காட்டேரி பறக்கிறது இவரும் பறக்கிறார், ஆனால் இரத்தக்காட்டேரி மட்டும் செத்து விழுகிறது என்ன என்று பார்த்தால்  இவரது கத்தியில் ரத்தம் இருக்கிறது , கதாநாயகர் திருமலை விஜய் போல் உக்காந்து போஸ் கொடுக்கிறார்.

இதில் சகோதரனின் மனைவி அவரது முன்னாள் காதலி மற்றும் , சகோதரனின் மகள் அவரது மகள் என திருப்பங்கள் வேறு. தூக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை. சரி கிளைமாக்சில் கலக்குவார்கள் என எதிர்பார்த்தால் இரத்தக்காட்டேரிகளை தாங்கி செல்லும் ரயிலை இவர் 250 மைல் வேகத்தில் சென்று ஏறி கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த் ஸ்டைலில் ரயில் மீது ஓடி ரயில் வெடிக்கும் நேரத்தில் மகளோடு ரயிலில் இருந்து தவ்வி படத்தை முடிக்கிறார். அப்படா என நாமும் பாய்ந்து தாவி ஓட வேண்டியதாக இருக்கிறது.

அப்பறம் தான் கடைசியில் கதாநாயகர் சொல்கிறார் இனி தான் ஆரம்பம் என.. இப்ப தான் படம் ஆரம்பிக்குதாம் இரண்டாம் பாகத்தில்(அப்படி ஒன்று வந்தால்)  நல்லா இருக்குமோ?… 3D யில் பார்த்தால் படம் நல்லா இருக்குமோ?…..
Share:

7 comments:

  1. நண்பரே,
    இந்த படம் காமிக்ஸ் கதையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையை கொண்ட ஒன்று என்று தகவல் வந்த போதே நான் சற்று யோசித்தேன். ஆனால் இப்படி ஒரு துடிப்பில்லாத கதையை கொண்டு வருவார்கள் என்று நான் யோசிக்க வில்லை. இந்த படத்தின் இயக்குனர் தயாரித்த லீஜியன் படத்தின் கதை ஓரளவுக்கு வித்தியாசமான கதை. அதனால் நம்பி எதிர்பார்த்தேன்.

    //3D யில் பார்த்தால் படம் நல்லா இருக்குமோ?…..// அப்படி எல்லாம் சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த படம் 2Dயில் தான் ஷூட் செய்யப்பட்டது. பின்னரே 3Dக்கு மாற்றப்பட்டது. ஆனால் சில காட்சிகள் ஓக்கேதான்.

    ReplyDelete
  2. நல்ல அறிமுகம் நண்பா

    ReplyDelete
  3. இந்தப் படத்தை நேற்று பார்த்திருக்க வேண்டியது. இதுவா இல்லை தோரா என்ற விவாதம் எழுந்து, பின்னர், தோர் பார்ப்பது என்று முடிவாகியது :-) .. இரண்டு நாட்களில் தோர் பார்ப்பேன். நல்லவேளை இதைப் பார்க்கவில்லை என்ற நிம்மதி எழுந்தது உங்கள் பதிவைப் படிக்கும்போது ...

    ReplyDelete
  4. //Underworld படத்தை போல இருக்குமென எண்ணி ட்ரைலரை பார்த்து விட்டு சென்றேன்//
    same with me..

    ReplyDelete
  5. கருந்தேள் அவர்களே பார்க்காதது நன்று என எண்ணி கொள்ளுங்கள்

    ReplyDelete
  6. King Viswa,JZ,|கீதப்ப்ரியன்|Geethappriyan|
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  7. நண்பரே,
    வெகு நாட்களாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தாத தமிழ் சினிமா உலகம் என்ற தளம் இன்று முதல் இயங்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த வாரம் ரிலீஸ் ஆன த ப்ரீஸ்ட் காமிக்ஸ் கதையை மைய்யமாக கொண்டு வந்த கல்லறை உலகம் என்கிற ப்ரீஸ்ட் படமே முதல் விமர்சனம்.

    கிங் விஸ்வா
    தமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்

    ReplyDelete