Kung Fu Panda 2 (2011) – குங்ஃபூ பாண்டா

Kung_Fu_Panda_2_Poster

சிறந்த அனிமேஷன் Sequel பட வரிசைகள் என பிக்ஸ்ரின்(Pixar) Toy Story படங்களை சொல்லலாம். அடுத்தடுத்து வரும் பாகங்கள் முன் பாகத்தை தூக்கி சாப்பிட்டு விடும். Toy Story படத்திற்கு அடுத்த பாகம் இல்லை என வந்த அறிவிப்பு பெரும்  சோகம் எனலாம். பிக்ஸருக்கு அடுத்த அனிமேஷன் ஜாம்பவான் என ட்ரிம்வொர்க்ஸ்(Dreamworks) நிறுவனத்தை சொல்லாம். இவர்கள் வெளியிட்ட Shrek பட வரிசைகள் இவர்களுக்கு நல்ல பெயரை பெற்று தந்தவை.

ட்ரிம்வொர்க்ஸ் 2008 இல் வெளியிட்ட  Kung Fu Panda முதல் பாகத்தில் குங்ஃபூ மாஸ்டர் ஆக ஆசைப்பட்டு குங்ஃபூ கற்றுக்கொள்ள விரும்பும் காமெடி பாண்டா எதிர்பாராத விதமாக டிராகன் வாரியர் என்னும் குங்பூ மாஸ்டர் பதவியை பெற்று எதிரியான பயங்கர சிறுத்தையிடமிருந்து ஊரை காப்பாற்றும். 2008ல் வெளியான இப்படம் ஜாக்கி சானின் பழைய படங்களை நமக்கு நினைவுக்கு கொண்டு வரும். படத்தில் ஜாக்கிசான் ஒரு குங்ஃபூ குரங்குக்கு குரல் கொடுத்தும் இருக்கிறார்.

மேலே வீடியோவில் பாண்டா vs சிறுத்தை உள்ள கிளைமாக்ஸ் காட்சியும் , Furious Five என்னும் குரங்கு,பெண்புலி,வெட்டுக்கிளி,பாம்பு,கொக்கு கூட்டணி ஒரு தொங்கு பாலத்தில் சிறுத்தையோடு மோதும் காட்சிகள் நம்மை மிகவும் ரசிக்க வைக்கும். இதோடு பாண்டாவின் காமெடி என முதல் பாகத்தில் அசத்துவார்கள்.

இப்படிப்பட்ட படத்தின் இரண்டாம் பாகம் அதுவும் 3Dயில். இரண்டாம் பாக எதிர்பார்ப்பை படத்தில் பூர்த்தி செய்தார்களா என பார்ப்போம். முதல் பாகத்தில் சிறுத்தையை வென்ற பாண்டா. இரண்டாம் பாகத்தில் பீரங்கி தயாரித்து ஊரை அழிக்க விழையும் மயிலையும் , அதன் கூட்டாளிகளான ஓநாய்களையும் எதிர்கொள்கிறது. முதல் பாகத்தை போலவே காமெடி காட்சிகளும், ஆக்சன் காட்சிகளும் உள்ளன. குறிப்பாக inner peace என்னும் கலையை பாண்டாவின் குரு பாண்டவுக்கு கூறும் காட்சிகளும் அதனை தொடர்ந்து வரும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.

பாண்டாவின் சீரியஸான காமெடி காட்சிகள்  பல நம்மை படத்தை நம்மை கடைசி வரை ரசித்து பார்க்க வைக்கிறது. ஆனால்   முதல் பாகத்தில் உள்ள ஆக்சன் அனிமேஷன் விருந்துகள் இப்படத்தில் குறைவே. மேலும் இரண்டாம் பாக கிளைமாக்ஸ் முதல் பாக கிளைமாக்ஸ் போல் மிக ரசிப்பதாக இல்லை. முதல் பாக வில்லன் சிறுத்தையை பாண்டா எப்படி வெல்ல போகிறது என இருந்த எதிர்பார்ப்பு இப்படத்தில் இல்லை.

பிக்ஸர் படங்களில் கதாநாயகன் பாத்திரம் போல் கதையில் வரும் அனைத்து பாத்திரங்களும் மனதில் பச் என ஒட்டிக்கொள்ளும். பாண்டவில் பாண்டா மட்டுமே நம்மை பெரிதாக கவருகிறது.ரசிக்கும் படியான இரண்டாம் பாகத்தை கொடுத்திருந்தாலும் முதல் பாகத்தில் கிடைத்த நிறைவு இப்படத்தில் இல்லை

Share:

6 comments:

  1. இருந்தாலும் குழந்தைகளுக்கு இந்த படம் பெரிதளவில் பிடித்துள்ளது என்பது தியேட்டருக்கு வந்த கூட்டத்தை கொண்டே காண முடிந்தது.

    இந்த வாரம் ஜாக்கி சான் படமும், எக்ஸ் மென் 1st கிளாஸ் படமும் வருகிறது. இந்த சம்மர் செம விருந்துதான்.

    கிங் விஸ்வா
    சென்னை சூப்பர் காமிக்ஸ் - இரண்டாம் புத்தகம் - சென்னை சூப்பர் கிட்ஸ்

    ReplyDelete
  2. இந்தப் படத்த இந்த வீக்கெண்டு கட்டாயமா பார்ப்போம்னு நினைக்கிறேன். படம் எப்புடி இருந்தாலும் பார்த்தே தீருவேன் - குரங்குப்பூ பாண்டா ரசிகர் மன்றம்

    ReplyDelete
  3. முதல் படம் தந்த எக்ஸ்பீரியன்ஸுக்காகவேனும் இதை கண்டிப்பாக பார்ப்பேன்.. புதுசாக interesting கதாபாத்திரங்கள் ஏதும் இல்லையா?

    ReplyDelete
  4. விஸ்வா இந்த வாரம் Xmen சென்னையில் ரிலீஸ் இல்லை.அடுத்த வாரம் தான்.

    கருந்தேள் கண்ணாயிரம்,JZ

    பாண்டா ரசிகர்கள் ரசிக்க கூடிய பார்க்க வேண்டிய படம் தான்

    ReplyDelete
  5. JZ,
    புதிதாக வந்த பாத்திரம் வில்லன் மயில் தான்...

    ReplyDelete
  6. "U hav to blive its a Special"
    -Po-

    ReplyDelete