Cars 2 3D - கார்ஸ் இரண்டாம் பாகம்



போன வருடம் ஜுன் மாதம் வெளியாகி ஆகி வசூலில் சக்கை போடு போட்ட Toy Story  மூன்றாம் பாகத்திற்கு பிறகு இந்த வருடம் அதே ஜுன் மாதம் கார்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தை பிக்ஸ்சர் வெளியிட்டுள்ளது.  பிக்ஸ்சர்  படம் என்றாலே கொண்டாட்டம் தான். Toy Story 3 யின் வெற்றி அடுத்த  பிக்ஸ்சர்  படம் எப்போது வரும் என அனைவரையும் நினைக்க வைத்தது. அடுத்த படம் Cars 2 என அறிந்த போது ஆவல் அதிகரித்தது. மேலும் இது toy stroy க்கு அடுத்து இரண்டாம் பாகம் வரும் படம்.

மனிதர்கள், மிருகங்கள் மற்றும் பொம்மைகள் அல்லாமல் முழுவதும் கார்களை வைத்து அவைகளுக்கு என கண்,வாய், தனித்தன்மை மற்றும் கார்கள் மட்டும் கொண்ட தனி உலகம் கொடுத்து 2006ல் வந்த முதல் பாகம் அனைவராலும் கவரப்பட்டு , பாராட்டப்பட்டு வெற்றி பெற்றது. Toy Story படங்களை போல் மிக பெரிய வெற்றி பெற விட்டாலும் இரண்டாம் பாகம் எடுக்குமளவிற்கு முதல் பாகத்தில் வந்த கார் கதாபாத்திரங்கள் புகழ் பெற்றன.

முதல் பாகத்தில் அதிவேக ரேஸ் காரான Lightning McQueen தனது கர்வத்தை அழித்து உண்மையான நண்பர்களை Radiator Springs என்னும் கார் கிராமத்தில் கண்டு கொள்கிறது. இந்த பாகத்தில் தனது நண்பனான truck Mater உடன் சேர்ந்து world grand prix அதி வேக கார் பட்டதை வெல்ல செல்கிறது. இப்படம் வெளியானதிலிருந்து பல எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

பிக்ஸ்சரின் முதல் மொக்கை படம், imdb, rotten tomatos போன்ற தளங்களில் இதுவரை எந்த பிக்ஸ்சர் படமும் பெறாத குறைந்த ரேங்க் என பல எதிர்மறையான விமர்சனங்கள். என்னடா பிக்ஸ்சரா இப்படி என படத்திற்கு சென்றால் , பிக்ஸ்சரின் முந்தைய படமான Toy Story 3 யின் மகத்தான வெற்றியும் , Toy Story  யின் தொடர் பாகங்கள் அனைத்துக்கும் கிடைத்த வெற்றியும், அதனால் இந்த படத்திற்கு கிடைத்த எதிர்பார்ப்புமே மேற்சொன்ன எதிர்மறையான விமர்சனங்களுக்கு காரணம் மற்றபடி படம் மொக்கை என்பதில் உண்மையில்லை.

பிக்ஸ்சரின் முந்தைய படங்களை போலவே இப்படமும் கடைசிவரை ரசிக்கவே வைத்தது. இனி கதைக்கு வருவோம். முதல் பாகத்தில் Lightning McQueen காருக்கு நண்பனான truck Mater காரே இப்படத்தின் கதாநாயகன். ஆயில் கம்பெனி ஒன்று தனது புதிய ஆயிலை அறிமுகபடுத்தும் விதமாக world grand prix என்னும் ஜப்பான்,இத்தாலி,லண்டன் என மூன்று சுற்றுகள் கொண்ட போட்டியை நடத்துகிறது. இப்போட்டிக்கு Lightning McQueen தனது நண்பனான truck Mater உடன் சேர்ந்து செல்கிறது.

அங்கே Lightning McQueen போட்டியாக இத்தாலியை சேர்ந்த காரும் வருகிறது. இந்த இரண்டில் ஒன்றே வெற்றி பெறும் என எதிர்பார்க்க படுகிறது. ஆயில் கம்பெனியின் புதிய ஆயிலை ஆபத்தானது என காட்டி அதை தடுக்க ஒரு கூட்டம் முயல்கிறது. இதற்க்காக ரேசில் கலந்து கொள்ளும் கார்களை வெடிக்க செய்கின்றன. இந்த கூட்டத்தை தடுக்க ஜேம்ஸ்பாண்டு போல பிரிட்டிஷ் உளவாளி காரும் , அதன் துணை உளவாளி காரும் வருகின்றன . எதிர்பாராத விதமாக truck Materஐ அமெரிக்க உளவாளி என தப்பாக கருதி அதையும் சேர்த்து கொண்டு வில்லன் கும்பலை தடுக்க முயல்கின்றன.

Lightning McQueen ஜப்பான்,இத்தாலி,லண்டன் மூன்று சுற்றிலும் கலந்து world grand prix சாம்பியன் பட்டம் வென்றதா, truck Materரும் , மற்ற உளவாளிகளும் சேர்ந்து  வில்லன் கும்பல் திட்டங்களை எப்படி முறியடித்தார்கள்… என்பது ரசிக்கும் விதத்தில் செல்கிறது. படத்தின் முதல் காட்சிலேயே பிரிட்டிஷ் உளவாளியாக வரும் கார் பட்டையை கிளப்புகிறது. ஜேம்ஸ்பாண்டு படங்களில் ஆரம்பத்தில் வருமே ஒரு சண்டை காட்சி அது போல் அதிரடியாக கலக்குகிறது.

அடுத்து படத்தில் காமெடியாக கலக்குவது truck Mater. ஆரம்பத்தில் இருந்து ரசிக்க வைக்கிறது. truck Mater பாத்ரும் செல்லும் காட்சி அனைவரையும் ரசிக்க வைக்கும்.ஜப்பான், இத்தாலி ரேஸ் காட்சிகள் அருமையாக உள்ளன. ஜப்பானில் கார் நடன காட்சி, கார்களின் சுமோ சண்டை ,பாரிசில் தெருவில் இருக்கும் புறாக்களுக்கு பதிலாக சிறிய விமானங்கள் போன்ற பல சிறிய ரசிக்க வைக்கும் காட்சிகள். குங்ஃபூ பாண்டா 2 படத்தை விட இப்படமே எனக்கு பிடித்தது. ஆனால் toy story 3 என்ற முந்தைய பிரமாண்டமான வெற்றியின் முன் இப்படம் நிற்க முடியாது.

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
படத்தின் ட்ரைலர்
Share:

6 comments:

  1. இந்த படத்தை நேற்றே பார்த்து விட்டேன். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  2. ஒஸ்கார் ஏதும் கைநழுவிப் போயிராதே??

    ReplyDelete
  3. படம் எனக்கு பிடிக்கவில்லை நண்பா..... மற்றபடி இன்று தான் உங்கள் தளத்திற்கு முதல் முறையாக வருகின்றேன்,நிறைய அனிமேஷன் படங்களைப் பற்றி எழுதி உள்ளீர்கள்,சந்தோசமாக இருந்தது,

    ReplyDelete
  4. அனிமேசன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவிடுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.கார்ஸ்2 பார்த்து விடுகிறேன்.குங்பூபாண்டா2 எனக்கும் பிடிக்கவில்லை.

    ReplyDelete
  5. உலக சினிமா ரசிகன்,
    வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  6. அனிமேசன் படங்கள் மீது எனக்கு நிறைய ஆர்வம் உண்டு விமர்சனம் அழகு!அனிமேசன் படங்கள் மீது எனக்கு நிறைய ஆர்வம் உண்டு விமர்சனம் அழகு!

    ReplyDelete