The Amazing Spider-Man aka Spider-Man Reboot



இதற்கு முந்தைய பதிவை படிக்காதவர்கள் இங்கே The Amazing Spider-Man சென்று படித்து விட்டு வரவும்.

இந்த வருடத்தில் ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது என கேட்டால் அனைவரும் கூறும் பதில் கண்டிப்பாக The Amazing Spider-Man என இருக்காது,The Dark Knight Rises என்று தான் இருக்கும். இதே போல் பல சூப்பர் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து கலக்கிய, வசூல் வேட்டை நடத்திய Avengers படத்தை The Amazing Spider-Man மிஞ்சுமா என்று கேட்டால் பதில் கண்டிப்பாக முடியாது என்று தான் இருக்கும். ஆனால் காமிக்ஸிலும்,டிவியில் கார்டூனாகவும் ஸ்பைடர்மேனை ரசித்தவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் படம் The Amazing Spider-Man. பேட்மேனுக்கு Batman Begins போல இந்தபடம் ஸ்பைடர்மேனுக்கு சிறந்த Reboot படமாக அமையுமா என பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் வந்த ஸ்பைடர்மேன் மூன்று பாகங்களை இயக்கியவர் Sam Raimi . இவர் இயக்கிய ஸ்பைடர்மேன் படங்கள் வெற்றி பெற்றாலும்,  வசூலிலும் கலக்கினாலும்   காமிக்ஸில் ரசித்த ஸ்பைடர்மேனின் கதாபாத்திரம் மற்றும் முக்கியமான கதாபாத்திரங்கள் சரியாக காட்டப்படவில்லை  என்று பலரின் கருத்தாக இருந்தது. அதிலும் முக்கியமாக வில்லன்கள். The Dark Knight வெற்றியில் Joker கதாபாத்திரம் முக்கிய பங்கு வகித்ததை யாராலும் மறுக்க முடியாது. கடைசியாக வந்த ஸ்பைடர்மேன் மூன்றாம் பாகம் வில்லன்கள் விஷயத்திலும் , கதாபாத்திரங்களின் பங்களிப்பிலும் சொதப்பலான படமாக வந்தது.

ஸ்பைடர்மேனின் முக்கிய சிறந்த  மூன்று எதிரிகள் என ரசிகர்களால் கூறப்படுபவர்கள் Green Goblin (Sam Raimi இயக்கிய முதல் பாக வில்லன்) , Doc Ock -(இரண்டாம் பாக வில்லன்) மற்றும் Venom - மூன்றாம் பாகத்தில் ஸ்பைடர்மேனை முதலில் பிடித்து கொண்டு பின் Eddie என்பவனை பிடித்து கொள்ளும் வேற்று கிரகத்தில் இருந்து வந்த உயிரினம்.முதலில் ஸ்பைடர்மேனை பிடித்து கொண்டதால் அவனின் சக்திகளையும் கொண்டது. ஸ்பைடர்மேனின் Spider-Sense உணர்வால் Venomஐ கண்டறியமுடியாது. Green Goblin ஸ்பைடர்மேனின் முதல் காதலியான Gwen Stacy மரணத்திற்கு காரணமானவன். Doc Ock நியூயார்க் போலீஸ் ஆபீசர் மற்றும் Gwen Stacyயின் அப்பா Captain Stacy மரணத்திற்கு காரணமானவன்.

இந்த மூன்று முக்கியமான வில்லன்களில் Doc Ock மட்டுமே Sam Raimi இயக்கிய படங்களில் ரசிகர்களை திருப்தி படுத்துமாறு இருந்தது. Green Goblin மற்றும் Venomஐ சரியான வில்லன்களாக காட்டப்படவில்லை. அதிலும் மூன்றாம் பாகம் ஏனோ தானோ என எடுக்கப்பட்டு இருந்தது. முக்கியமான மூன்று வில்லன்களையும் பயன்படுத்தி விட்டதால் நான்காம் பாகத்தில் ஸ்பைடர்மேனுக்கு நிகரான வில்லனாக யாரை போடலாம் என Sonyக்கும் , Sam Raimiக்கும் நடந்த பிரச்சனையாலேயே Spidermen 4  கைவிடப்பட்டு Spiderman Reboot அதாவது The Amazing Spiderman ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

படங்களை விட ஸ்பைடர் மேனை எனக்கு பிடித்தது 1994 இல் ஆரம்பித்து 1998 வரை Marvel Films Animation தயாரித்து ஒளிபரப்பான அனிமேஷன் சீரீஸில்(Series) தான். இதுவரை வந்த ஸ்பைடர்மேன் அனிமேஷன் சீரீஸ் அனைத்திலுமே இதுதான் பெஸ்ட் எனலாம். நான் Disney சேனலில் பார்த்து பின் முழுவதையும் டவுன்லோட் செய்து பார்த்து விட்டேன். இந்த சீரீஸின் வெற்றிக்கு காரணம் ஸ்பைடர்மேனிலிருந்து அவனது காதலி மற்றும் வில்லன்கள் வரை அனைத்து கதாபாத்திரங்களையும் மிக துல்லியமாக காட்டியது தான். மேலும் இந்த சீரீஸில் Captain America , Ironman , Blade , Punisher, DareDevil,Fantastic 4 ,X-Men மற்றும் S.H.E.I.L.D தலைவர் Nick Fury என பல ஹீரோக்கள் அவ்வபோது தலைகாட்டுவார்கள். இந்த சீரீஸின் Opening Theme மற்றும் முதல் எபிசோட் கீழே காணலாம்.




மேலே பார்த்த இந்த அனிமேஷன் சீரீஸின் முதல் எபிசோடின் வில்லன் தான் வரப்போகும் The Amazing Spidermen படத்தின் வில்லன் The Lizard. Dr. Connors என்பவர் சிறந்த சயன்டிஸ்ட்,ஸ்பைடர்மேனின் புரபசர் மற்றும் டாக்டர்.  போர்காலங்களில் பணியாற்றும் போது தனது ஒரு கையை இழந்தவர். இழந்த கையை திரும்ப வளர வைக்க பல்லிகளை வைத்து ஆராய்ச்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் தன்னை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி கொள்ள Dr. Connors இன் கை மீண்டும் வளருகிறது. ஆனால் பக்க விளைவாக Lizard என்னும் பயங்கர பல்லியாக மாறிவிடுகிறார். இவரை தடுத்து மீண்டும் Dr. Connors ஆக மாற ஸ்பைடர்மேன் உதவுகிறான்.இதனால் பின்னாளில் ஸ்பைடர்மேனுக்கு மிகவும் உதவுகிறார். Dr. Connors கதாபாத்திரத்தை Sam Raimi இயக்கிய Spidermen 2 மற்றும் 3 ஆம் பாகங்களில் பார்க்கலாம். ஆனால் ஸ்பைடர்மேனின் புரபசராக மட்டும் வருவார். இந்த Spidermen Rebootல் முக்கிய வில்லன்களாக மேலே சொல்லப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லாததை காணலாம். இந்த படத்தில் Peter Parker எப்படி ஒரு சூப்பர் ஹீரோவாக உருவெடுத்தான் என்பதும், Peter Parker - Gwen Stacy காதலுமே முக்கியமான பங்கு வகிக்க போகிறது என்பதால் சிறந்த வில்லன்கள் இதன் இரண்டாம் பாகத்திலே வருவார்கள் என கூறலாம். மேலும் இந்த படத்தை Untold Strory என விளம்பரபடுத்துகிறார்கள். அது என்ன Untold Story என்பதை பற்றியும் இந்த படத்தின் விமர்சனத்தையும் கீழேயுள்ள கருந்தேளார் பதிவில் காணலாம். The Amazing Spider-Man (2012) - English படத்தின் மற்றொரு ட்ரைலர் கீழே
Share:

6 comments:

  1. நெடுநாள் கழித்து பதிவிட்டு எங்களை அசத்தி விட்டீர்கள் லிமட்.

    இப்போது ஒரு சிறிய பயணத்தில் இருப்பதால் இந்த படத்தை எங்கே பார்ப்பேன் என்றே தெரியாது. ஆனால் கண்டிப்பாக வெள்ளிகிழமை பார்த்துவிடுவேன்.

    ReplyDelete
  2. ரொம்ப நாள் கழிச்சு ஒரு சூப்பர் பதிவை கொடுத்துட்டீங்க..ரசித்தேன்.
    அதுவும் எனக்கு பிடித்த ஸ்பைடெர்மென் வேறு..கடந்த மூன்று படங்களில் என்னை கவர்ந்த படமாக ரெண்டாவது பாகத்தை கூறலாம்.
    தங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்..தொடருங்கள்.நன்றி.

    ReplyDelete
  3. வருக வருக இன்னும் நிறைய பதிவிடுக! எனது ஆருயிர் நாயகன் சிலந்தி மனிதனை வரவேற்போம்! டோபி மகுயிர் அழகாக இருந்தார் மனிதரையே தொடர செய்திருக்கலாம் அதில் எனக்கு மிகுந்த வருத்தம் அதில் எதாவது பிரச்னை எழுந்ததா தோழரே?

    ReplyDelete
  4. பாஸ்,
    ஏனோ எனக்கு ஸ்பைடர் மேன் படங்கள் மேல் அவ்வளவு இடுபாடு கிடையாது... முதல் பாகத்தை ரொம்ப ஆர்வமாய் தியேட்டரில் பார்த்தேன்.. அடுத்த பாகங்கள் என்னை வெகுவாய் கவர வில்லை.. அதனால் Amazing மேல எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்கிறேன்..
    ட்ரைலரில் ஸ்பைடர் மேன் Lizard உடன் சண்டை போடுவது போல் பார்த்தேன். ஆனால் நீங்கள் சொல்வதை பார்த்தல் Lizard பெரிய வில்லன் மாதிரி தெரியவில்லை...பார்போம்...

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க.
    http://dohatalkies.blogspot.com/2012/07/12-angry-men.html

    ReplyDelete
  6. அருமையான பதிவு...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete