ஆபிரகாம் லிங்கன் - அமெரிக்காவின் தலைசிறந்த ஜனாதிபதிகளில் ஒருவர். நிறவெறியையும்,அடிமை முறையையும் ஒழித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். இவரையே கதாநாயகனாக கொண்டு எழுதப்பட்ட வாம்பயர் நாவல் Abraham Lincoln, Vampire Hunter. இந்த நாவலை தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்தில் அடிமை முறைகளோடு எதிர்த்து போராடுவதோடு இரவில் ரத்தகாட்டேரிகளான வாம்பயர்களை வேட்டையாடும் பணியிலும் ஈடுபடுகிறார் ஆபிரகாம் லிங்கன்.
ஆபிரகாம் லிங்கனின் சிறுவயதில் அவனது தந்தையின் முதலாளியும், வாம்பயருமான Bart என்பவன் அவனது தாயை கடித்து கொன்று விடுகிறான். கொஞ்சம் தான் வளர்ந்தவுடன் அவன் வாம்பயர் என தெரியாமல் தன் தாயை விஷம் வைத்து கொன்று விட்டான் என நினைத்து அவனை கொல்ல செல்கிறான். வாம்பயரான Bart லிங்கன் சுட்டும் சாகாமல் லிங்கனை கொல்ல வருகிறான். Henry என்பவன் லிங்கனை காப்பாற்றுகிறான். Bart ஒரு வாம்பயர் அவனை போல் பல வாம்பயர்கள் அமெரிக்காவில் இருப்பதாக Henry மூலம் லிங்கன் அறிந்து கொள்கிறான். Henry வாம்பயர்களை அழிக்க லிங்கனுக்கு பயிற்சி தருகிறான். பயிற்சியை பெற்ற லிங்கன் அன்றிலிருந்து இரவில் வம்பயர்களை வேட்டையாடுபவனாக மாறுகிறான்.
தன் தாயை கொன்ற Bart ஐயும் கொல்கிறான். Bart இறக்கும் போது Henryயும் ஒரு வாம்பயர் என்பதை சொல்கிறான். இதனால் லிங்கன் Henryயையும் கொல்ல செல்கிறான். ஆனால் Henry தன் மனைவியை Adam என்ற வாம்பயர்களின் தலைவன் கொன்று விட்டு தன்னையும் கடித்து வம்பயராக மாற்றி விட்டதை கூறுகிறான். மேலும் தான் வம்பயர்களை போல் அல்ல தான் வம்பயர்களுக்கு எதிரானவன் என கூறுகிறான். ஆனால் சமாதானமடையாத லிங்கன் வாம்பயர்களை வேட்டையாடுவதை நிறுத்தி விடுகிறான். Mary என்பவளை காதலித்து மணந்து கொள்கிறான்.மேலும் தனது பேச்சு திறமையால் அடிமை முறைகளை எதிர்த்து போராடி அரசியலில் நுழைகிறான்.
Bartஐ கொன்றதால் கோபமான Adam என்ற வாம்பயர்கள் தலைவன் லிங்கனின் நண்பனை கடத்தி லிங்கனை தன்னோடு இணைத்து கொல்ல முயலுகிறான். ஆனால் லிங்கன் அவனிடமிருந்து நண்பனை காப்பாற்றி கொண்டு வந்து விடுகிறான். பின் தனது திறமையால் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி அடிமை முறைகளை கலைய பாடுபடுகிறான். ஆனால் Henry அடிமைகள் இருப்பதாலேயே வம்பயர்கள் அடிமைகளை மட்டும் கொல்கின்றன. இல்லாவிடில் அனைவருக்கும் ஆபத்து என்கிறான். லிங்கன் இதை கேட்க மறுக்கிறான். அடிமைமுறைகளை ஆதரிப்பவர்களை எதிர்த்து போர்களை நடத்தி வெற்றி பெறுகிறான். இதனால் கோபமடைந்த வம்பயர் தலைவன் Adam லிங்கனை அழிக்க முதலில் லிங்கன் மகனை கொள்கிறான். பின் எதிர்படைகளோடு வம்பயர்களை களம் இருக்கிறான்.தற்போது எதிர்படைகளோடு வாம்பயர்கள் சேர்ந்து கொள்வதால் மீண்டும் வாம்பயர்களுக்கு போராட்டத்தை ஆரம்பிக்கிறான். எப்படி வாம்பயர்களை அழித்தான் என்பதே மீதி படம்.
யப்பா…முக்கால்வாசி படத்தை பற்றி சொன்னால் தான் கதையே சொல்ல முடிகிறது. இது தான் கதை என சொல்ல முடியாமல் அப்படியும் இப்படியுமாக செல்கிறது.இல்லாவிடில் ஒரே வரியில் வாம்பியர்களை எதிர்த்து போராடுகிறார் என சொல்ல வேண்டும்.ஆபிரகாம் லிங்கன் என்ற கதாபாத்திரத்துக்காக படம் எடுத்திருப்பார்கள் போல. பரபரப்பான ரத்த காடேரிகளை கொல்லும் சண்டை காட்சிகளை எதிர் பார்த்து சென்றீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள். அங்கங்கே அவ்வபோது சில ஆக்சன் காட்சிகளை பார்க்கலாம் அவ்வளவே.
இந்த படத்தில் வரும் வாம்பயர்கள் சூரிய ஒளிக்கு பயப்படுபவை கிடையாது.முகத்தில் கிரீம் தடவி கொண்டு சூரியஒளியில் தைரியமாக அலைகின்றன. மேலும் வாம்பயர்களே வாம்பயர்களை கொல்ல முடியாது , லிங்கன் வைத்திருக்கும் கோடாலியில் துப்பாக்கியும் உண்டு போன்ற பல வித்தியாசமான விஷயங்கள் இருந்தாலும் ரசிக்க முடியவில்லை. இதை imdbயில் பலர் ஏன் fantastic action என கமெண்ட் போட்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. ஒருவேளை இந்த படத்தின் மூலமான நாவலை படித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ. படம் ஆரம்பிக்கும் முன் போட்ட The Dark Knight Rises, Ice Age 4 ட்ரைலரை பார்த்தது மட்டுமே திருப்தியை தந்தது.
பார்க்கலாம் என்றிருந்தேன்.. தப்பித்தேன். நன்றி
ReplyDeleteஎன்ன கதையே இப்படி இருக்கிறது? தப்பித்துக்கொள்கிறேன்.. நன்றி பாஸ்!!
ReplyDeleteபடத்திற்கு ஒரு நல்ல கதைக்கரு இருந்தும் நாறடிச்சுட்டாங்க போலருக்கு. சரி விடுங்க ... என்னிக்காவது இந்தக் கதையில காந்தித் தாத்தா வேம்பயராகுவாரு. அப்போ பாத்துக்கலாம். :)
ReplyDeleteஇன்னிக்கு பாக்கலாம்னு திட்டம் போட்டிருந்தேன். போலாமா வேணாமா
ReplyDeleteபோங்க பாஸ் ...ஆனா ரொம்ப எதிர்பாக்காதீங்க...
DeleteLincoln என்கிற பேருல ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு படம் எடுக்கிறார்...அதுக்கும் இதுக்கும் நான் கொஞ்சம் குழப்பிடேன்...
ReplyDeleteஉங்க விமர்சனத்தை படிக்கும் போது படம் மொக்கை மாதிரி தெரியுது....சுத்தி வளைச்சு முக்கை தொடுற கதை மாதிரி தெரியுது...
//முகத்தில் கிரீம் தடவி கொண்டு சூரியஒளியில் தைரியமாக அலைகின்றன//
என்ன கிரீம் பாஸ்.... Fair and Lovely யா... சூரிய ஒளியில இருந்தது வம்பயார் சருமத்தை காக்க... சும்மா காமெடி... :)
நல்ல விமர்சனம்... உங்கள் தளத்திற்கு முதல் வருகை ! Follower ஆகி விட்டேன். பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteஓகே ஓகே கொஞ்சம் இப்போதான் நிம்மதியோ நிம்மதி நல்ல படத்துக்கு தொகை ஒதுக்கி வைத்திருக்கிறேன் நண்பா! அதை காப்பாற்றி விட்டீர்.
ReplyDelete