அண்டர்வேர்ல்ட் - Underworld Movie Series - 3

இரண்டாம் பாகத்தில் முழித்த மார்கஸ், விக்டரால் அடைக்கப்பட்ட அவனது சகோதரன் Werewolf  வில்லியமை சிறையிலிருந்து விடுவிக்க செல்கிறான். சிறையிலிருந்து வில்லியமை விடுவிக்க அவனுக்கு இரண்டு சாவிகளும் தேவை. ஒன்று விக்டரின் நெஞ்சில் இருந்தது அதை விக்டர் இறந்த பின் அதை எடுக்கும் Kraven என்பவனிடமிருந்து அவனை கொன்று பெறுகிறான். மற்றொன்று விக்டரின் மகள் Sonja கழுத்தில் உள்ளது. Sonja விக்டரால் லுசியன் கண் முன் கொல்லப்பட்ட பின் லுசியன் அதனை எடுத்து கொள்கிறான். அதன் பின் லுசியன் இறந்த பின் அது செலின் மற்றும் மைக்கேல் எடுத்து கொள்கின்றனர். இதனால் மார்கஸ் செலினையும் , மைக்கேலையும் விரட்டுகிறான். அவனிடமிருந்து தப்பித்து அவனையும் ,வில்லியமையும் கொல்வதே இரண்டாம் பாகம்.

முதல் இரண்டு பாகங்களில் தான் நான் மேலே சொன்ன வாம்பயர்கள் ,Werewolf மற்றும் லைகன்கள் மூலக்கதை கொஞ்ச கொஞ்சமாக பிரித்து சொல்லபடுகிறது.  முதல் இரு பாகங்களை முழுமையாக பார்த்த பின்னரே அனைத்து கதைகளும் நமக்கு விளங்கும். மேலும் செலின் பெற்றோர்களை ஏன் விக்டர் கொன்றான் என்பது இரண்டாம் பாகத்திலும், செத்து போனதாக சொல்லப்பட்ட லுசியன் எப்படி உயிரோடு வந்தான் என்பது முதல் பாகத்திலும் சொல்லபடுகிறது.  முதல் இரு பாகங்களிலும் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. முதல் இரண்டு பாகங்கள் மற்றும் நான்காம் பாகத்தின் கதாநாயகி செலின்(Selene)  என்ற கதாபாத்திரம்.  Vanhelsing  மற்றும் Pearl Harbor படங்களில் கதாநாயகியாக நடித்த Kate Beckinsale. மூன்றாம் பாகத்தில் இவர் கிடையாது. இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் கீழே



இனி மூன்றாம் பாகத்தை பார்ப்போம். இதில் லைகன்கள்(Lycans) எங்கே எப்படி வந்தார்கள் என்பது விவரிக்கபடுகிறது. முதல் பாகத்தில் வில்லனாக முதலில் காட்டப்படும் லுசியன்(Lucian) என்ற லைகன்(Lycan) கதாபாத்திரம் தான் மூன்றாம் பாகத்தின் ஹீரோ. இதில் செலின் கிடையாது. மூன்றாம் பாகம் மேலே நான் விட்ட மூலக்கதையில் இருந்து அதாவது 13 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கிறது.werewolfகளை வேட்டையாடி கொண்டிருக்கும் விக்டர் , ஒரு பெண் Werewolfஐ பிடிக்கிறான். அவளுக்கு மனித வடிவில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அது தான் முதல் லைகன் அதாவது மனித உருவுக்கு வர முடிகின்ற Werewolf. அவன் தான் லுசியன். விக்டர் அந்த பெண் Werewolfஐ கொன்று விட்டு லுசியனை அடிமையாக வளர்கிறான். அவனை Werewolfஆக மாற விடாமல் பார்த்து கொள்கிறான்.இதற்கிடையே விக்டர் மகள் Sonja லுசியன் மேல் காதல் கொல்கிறாள். ஒருநாள் அவளை Werwolfகளிடமிருந்து காப்பாற்ற லுசியன் Werewolfஆக மாறுகிறான். இதனால் விக்டர் அவனை ஜெயிலில் அடைத்து விடுகிறான். அங்கிருந்து மற்ற லைகன்களையும் காப்பற்றி தப்பிக்கும் லுசியன் விக்டருக்கு எதிராக போராட ஆரம்பிக்கிறான். லுசியன் மற்றும் தன் மகள் Sonja காதல் பற்றி அறியும் விக்டர் , Sonja வை லுசியன் கண் எதிரே சூரியஒளியை பட விட்டு கொல்கிறான்.



இதனை காணும் லுசியன் sonja கழுத்தில் இருக்கும் சங்கிலியை(அதாவது இரண்டாவது சாவி) எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பிக்கிறான். இதிலிருந்து லைகன்கள் மற்றும் வாம்பயர்கள் இடையே போர் ஆரம்பிக்கிறது. மூன்றாம் பாகத்தின் ட்ரைலர் கீழே..



முதல் மூன்று பாகங்கள் ஆக்சன் ரசிகர்கள் மற்றும் பரபர சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை. பெரும்பாலான கதையை நானே சொல்லிவிட்டதால் படம் சுவராசியமாக இருக்காது என நினைக்காதீர்கள். நானே ஏதோ டிராகுலா படம் போல என பார்க்காமல் இருந்து பின் என் நண்பன் ஒருவன் நன்றாக இருக்கும் என்றதால் முழு மூன்று பாகங்களின் கதையை கேட்ட பின்னரே பார்க்க ஆரம்பித்தேன். என்னதான் கதையை கேட்டாலும் படங்களின் முடிச்சுகள் சுவராசியமாக அவிழ்கப்படுகின்றன. படத்தை பார்க்காத ஆக்சன் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கவும்.

 நான்காம் பாகம் கதையை வேண்டுமென்றே இன்னும் இழுப்பதால் சுவராசியமாக இல்லை. ஆனால் ஆக்சன் காட்சிகள் நிறையவே உண்டு. தற்போது நான்காம் பாகம் டோரண்டில் நல்ல பிரிண்ட் டவுன்லோட் செய்ய கிடைப்பதால் அதனையும் பார்த்து விடுங்கள்
தமிழில் பின்னூட்டம்(Comment) எழுத இங்கே http://www.google.com/transliterate/tamil செல்லவும்
Share:

No comments:

Post a Comment