அண்டர்வேர்ல்ட் - Underworld Movie Series - 1


Priest என்ற மொக்கை வாம்பயர் படத்தை பார்த்து விட்டு அந்த வெறுப்பில் எனக்கு பிடித்த அண்டர்வேர்ல்ட் படத்தின் மூன்று பாகங்களை பற்றிய இந்த பதிவை எழுத ஆரம்பித்தேன். பின் ஆர்வம் இல்லாமல் Draft இல் போட்டு விட்டேன். தற்போது தான் அண்டர்வேர்ல்ட் படத்தின் நான்காம் பாகம் பார்க்க நேர்ந்தது. மேலும் தற்போது வரும் புதிய ஹாலிவுட் படங்களை பற்றி பல பதிவர்களும் எழுதி விடுவதால்  இந்த பதிவை தூசு தட்டி விட்ட இடத்தில் இருந்து முதல் மூன்று பாகங்களை பற்றி மூன்று பதிவுகளாக ஒரே மூச்சில்  எழுதி விட்டேன்.

மூன்று பாகங்களை பற்றி பார்க்க போகும் முன் படத்தின் முக்கியமான நான்கு கதாபாத்திரங்களை பற்றி பார்த்து விடுவோம். சாதாரண மனிதன்,வாம்பயர்(Vampire - இரத்தகாடேரிகள்),Werewolf(மனித ஓநாய்) மற்றும் லைகன்(Lycans – ஓநாய் மனிதன்).சாதாரண மனிதனை பற்றி சொல்ல தேவையில்லை.

இதில் வாம்பயர்கள் என்பவர்கள் இரத்தத்தை உறிஞ்சுபவை.பார்க்க மனித வடிவில் இருப்பவை. இரத்தத்தை உறிஞ்ச இரண்டு கொடூர பற்கள் இருக்கும். இயற்கை மரணம் கிடையாது. இரவில் மட்டுமே வெளியில் உலவுபவர்கள்.சூரியஒளி பட்டால் இறந்து விடுவார்கள். இந்த வாம்பயர்கள் சாதாரண மனிதனை  கடித்தால் வைரஸ் பரவி அவர்களும் வாம்பயர்களாக மாறி விடுவார்கள்.

அடுத்து Werewolf(மனித ஓநாய்) , சாதாரண மனிதனிலிருந்து Werewolf ஆக மாறியவர்கள். பார்க்க ஓநாய் போல இருப்பவர்கள்.இவர்களால் மீண்டும் மனித உருவுக்கு வர முடியாது. இவர்களுக்கும் இயற்கை மரணம் கிடையாது. வெள்ளியால் செய்த குண்டு மற்றும் வாள் போன்றவற்றால் இவர்களை கொல்ல முடியும். இந்த Werewolf சாதாரண மனிதனை  கடித்தால் வைரஸ் பரவி அவர்களும் Werewolf ஆக மாறி விடுவார்கள்.

அடுத்து லைகன்(Lycans – ஓநாய் மனிதர்கள்), இவர்கள் Werewolfலிருந்து உருவானவர்கள். Werewolf இன் அனைத்து குணங்களும் இவர்களுக்கும் பொருந்தும். ஆனால் இவர்களால் நினைத்த நேரம் மனித உருவும், ஓநாய் உருவும் எடுக்க முடியும்.

டிராகுலா மற்றும்  ஆக்சன் பட பிரியர்களுக்கு விருந்தளிக்க கூடியவை Underworld பட வரிசைகள்.  Underworld Awakening இது Underworld பட வரிசையில் தற்போது வந்துள்ள  நான்காம் பாகம். முதல் மூன்று பாகங்களும் ஆக்சன் பட ரசிகர்களுக்கு தீனி போட்டவை. நீங்கள் Vanhelsing போன்ற படங்களை ரசிப்பவர்களாக இருந்தால் இந்த பட வரிசைகள் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை. முதல் மூன்று பாகங்களும் ஒன்றுகொன்று சார்ந்த  கதையமைப்பை கொண்டவை. மேலும் மற்ற வாம்பயர், Werewolf புராதன கதைகளை போல் சிலுவையை வைத்து கொல்லுவது,மாந்திரீகம் இல்லாமல் zombie கதையை போல் வைரஸ் ,சயின்ஸ் மூலமே சொல்ல பட்டிருக்கும். நான்காம் பாகம் முதல் மூன்று பாகங்களின் வசூல் வெற்றிக்கு பின் மீண்டும் வசூலை பார்க்க எடுக்கப்பட்ட படம். முதல் மூன்று படங்கள் சுவராசியமாகவும் ஆக்சன் கலந்து எடுக்கப்பட்டிருக்கும்.  இதுவரை வந்துள்ள பாகங்கள்

Underworld
Underworld: Evolution
Underworld: Rise Of The Lycans
Underworld: Awakening

வாம்பயர்கள்(Vampires) அதாவது டிராகுலா மற்றும் லைகன்கள்(Lycans) அதாவது ஓநாய் மனிதர்கள் இவைகளுக்கிடையே நடக்கும் மோதல்கள் தான் இப்படங்களின் மையக்கதை. படத்தின் முதல் இரு பாகங்களும் தொடர்ச்சியானவை. அதாவது இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சி. ஆனால் மூன்றாம் பாகம் முதல் இரண்டு பாகங்களின் Prequel. அதாவது முதல் இரண்டு பாகங்களுக்கு முன்னர் நடந்த கதையை விவரிக்கும். மூன்றாம் பாகம் தான் எப்படி வாம்பயர்களுக்கும், லைகன்களுக்கும் மோதல்கள் துவங்கின என காட்டுகிறது.
மூலக்கதை ஆரம்பிப்பது 5ஆம் நூற்றாண்டு. 5ஆம் நூற்றாண்டில் ஒரு கிராமத்தில் புது வைரஸ் மூலம் நோய் பரவி அனைவரும் இறக்கின்றாகள். அதில் Alexander Corvinus என்னும் போர்படைத்தலைவன் ஒருவன் மட்டும் தப்பிக்கிறான். வைரஸ் அவன் உடலில் வேறுமாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இறப்பதற்கு பதிலாக வைரஸ் மூலம் அவனது உடல் சாதாரண மனிதனை போல் இல்லாமல்  சாகாத தன்மையை பெறுகிறது.

அவனுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. அதில் இரண்டு குழந்தைகள் அவனை போல் சாகாத தன்மையை பெற்று இருக்கின்றன. ஒரு குழந்தை சாதாரண மனிதனை போல் இருக்கிறது.சாகாத தன்மையை பெற்ற இருவரில் ஒருவனான மார்கஸ் என்பவனை வவ்வால் கடிக்கிறது. அதனால் முதல் வாம்பயர் ஆக உருவாகிறான்.

மற்றொருவன் வில்லியம், அவனை  ஓநாய் கடிக்கிறது. அதனால் முதல் Werewolf என்னும் ஓநாய் மனிதனாக ஆக மாறுகிறான்.  கவனிக்க லைகன்(Lycan) அல்ல.  லைகன்களுக்கும்(Lycans) ஓநாய் மனிதர்களுக்கும், Werewolf   ஓநாய் மனிதர்களுக்கும் வித்தியாசம் உள்ளது.  Werewolf ஆக மாறிவிட்டால் மீண்டும் மனிதனாக மாற முடியாது. ஆனால் Lycans நினைத்த நேரம் ஓநாயாகவும் பின் மீண்டும் மனித வடிவம் எடுக்க முடியும். இதில் வில்லியம் மாறுவது Werewolfஆக.

வில்லியம் Werewolf ஆக மாறியதால் கட்டுப்படுத்த முடியாத ஓநாய் மனிதனாக  மாறி அனைவரையும் கடிக்கிறான். இவனால் கட்டுப்படுத்த முடியாத பல Werewolf  உருவாகின்றன. இவனை கட்டுப்படுத்த  மார்கஸ் சாககிடக்கும் விக்டர் (இரண்டாவது வாம்பயர் ) என்னும் போர்படைத்தலைவனிடம் அவனை கடித்து வாம்பயர் ஆக மாற்றி ஒரு ஒப்பந்தம் செய்கிறான்.  அது அவனின் படையை வாம்பயர்களாக மாற்றி வில்லியமை பிடிப்பது. விக்டர் (இரண்டாவது வாம்பயர் ) அமிலியா என்பவளை கடித்து மூன்றாவது வாம்பயர் உருவாக்குகிறான். இந்த மூன்று வாம்பயர்கள் கடிப்பதன் மூலமே  வாம்பயர்களாக கொண்ட Death Dealers என்ற படை உருவாக்கபடுகிறது.  இப்படையின் வேலை வில்லியமை பிடிப்பது மற்றும் அவனால்  Werewolf   ஆக மாறியவர்களை கொல்வது.பின்னர் மூவரும் சேர்ந்து வாம்பயர்கள் ஆட்சி அமைகிறார்கள். இந்த மூவரில் ஒருவர் ஆட்சி புரியும் போது மீதி இருவர் தூக்கத்தில் இருக்க வேண்டும். ஒருவர் தூக்கத்துக்கு போகும் போது மற்றொருவரை எழுப்பி ஆட்சியை ஒப்படைத்து விட்டு தூக்கத்துக்கு செல்ல வேண்டும். அவ்வபோது மூவரும் எழுவர்.

மார்கஸ் , விக்டர் மற்றும் அமிலியா என்ற முதல் மூன்று வாம்பயர்களும் , அவர்களின் Death Dealers வாம்பயர்கள்  படையும் 13ஆம் நூற்றாண்டில் வில்லியம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்கிறார்கள். மார்கஸ் வில்லியமை ஒன்று செய்ய கூடாது என விக்டரை கேட்டு கொள்கிறான். ஆனால் வில்லியமை பிடிக்கும் விக்டர் அவனை கட்டுப்படுத்த முடியாது அதனால் வாம்பயர் இனம் அழிந்து விடும் எனக் கூறி அவனை தப்பிக்க முடியாத சிறையில் அடைத்து அதன் இரண்டு சாவிகளில் ஒன்றை தன் நெஞ்சினிலும் மற்றொன்றை தன் மகள் Sonja கழுத்தில் சங்கிலியாக போடுகிறான். Death Dealers படை விக்டர் வசம் இருப்பதால் மார்கஸால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மேலே சொல்லப்பட்டது வாம்பயர்கள் மற்றும் Werewolf   உருவாகும் படத்தின் மூலக்கதை நடப்பது 5 நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை.  இக்கதை நடக்கும் காலம் வரை லைகன்கள்(Lycans) கிடையாது. இதன் பின்னரே 13 ஆம் நூற்றாண்டில் முதல் லைகன்(Lycan) லுசியன்(Lucian) உருவாகிறான். லைகன்கள்(Lycans) எப்படி உருவானார்கள் என்பதை மூன்றாம் பாகம் விவரிக்கிறது. இப்போது முதல் பாகத்திற்கு செல்வோம்.
தொடர்ந்து படிக்க பதிவின் அடுத்த பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்க
அண்டர்வேர்ல்ட் - Underworld Movie Series - 2
தமிழில் பின்னூட்டம்(Comment) எழுத இங்கே http://www.google.com/transliterate/tamil செல்லவும்
Share:

13 comments:

  1. நான் அண்டெர்வேர்ல்ட் படங்களில் முதல் இரண்டு பாகங்கள்தான் பார்த்தேன்.அருமையான ஆக்சன் தீனி என்று சொல்லலாம்.மூன்றாவது நான்காவது பாகத்தை பார்க்க வேண்டும்.

    நண்பரே, நீண்ட பதிவாக இருப்பினும் சுவாரஸ்யங்களுக்கு மட்டும் பஞ்சமில்லை.அவ்வளவு அழகாக ஒவ்வொரு பாகத்தையும் ஆழமாக கதை, காட்சிகளை பகிர்ந்துக் கொண்டமைக்கு மிக்க நன்றிகள்..தங்களது பணி தொடர வேண்டும்..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Kumaran வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மூன்றாவது பாகத்தை கண்டிப்பாக பாருங்கள்

      Delete
  2. //Priest என்ற மொக்கை வாம்பயர் படத்தை பார்த்து விட்டு அந்த வெறுப்பில் எனக்கு பிடித்த அண்டர்வேர்ல்ட் படத்தின் மூன்று பாகங்களை பற்றிய இந்த பதிவை எழுத ஆரம்பித்தேன். பின் ஆர்வம் இல்லாமல் Draft இல் போட்டு விட்டேன்.//

    இதுபோன்ற பல நெடும்பதிவுகளை இடுவதர்க்காவது நீங்கள் பல மொக்கை படங்களை பார்க்கக் கடவது.

    ReplyDelete
  3. நான்காவது பாகம் சென்ற மாதமே பார்த்துவிட்டேன். பட ஓக்கேதான். ஐந்தாம் பாகத்திற்கும் இப்போதே பிட்டு போட்டுவிட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. விஸ்வா வருகைக்கு நன்றி .நான்காம் பாகத்தில் லைகன்களை வில்லன்களாக மாற்றி விட்டார்கள்.புதிய கதையை ஆரம்பித்து உள்ளார்கள்...

      Delete
  4. பாஸ்,
    ரொம்ப நல்ல பதிவு. நிறைய தகவல்களை தந்து இருக்கேங்க.
    பதிவு கொஞ்சம் பெருசா இருக்குற மாதிரி ஒரு பீல். என்ன கேட்டா முனு பாகத்துக்கு சேர்த்து முனு பதிவா போட்டு இருக்கலாம்.

    எனக்கும் வாம்பயர்கள் கான்செப்ட் பிடிக்காது, உங்க பதிவ படிச்ச அப்புறம் Underworld சீரீஸ் டவுன்லோட் பண்ணலாம்ன்னு தோணுது.

    ReplyDelete
    Replies
    1. ராஜ் நண்பரே...இந்த படம் மற்ற வாம்பயர்கள் படத்தில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கும் . நிச்சயம் ரசிப்பீர்கள்.

      Delete
  5. நான் இன்னும் ஒரு அன்டர்வேர்ல்ட் படமும் பார்த்ததில்லை.. இதுவரைக்கும் "லைக்கன்" என்பது வேர்வுல்ஃபுக்கான மறுபெயர் என்றுதான் நினைத்திருந்தேன். (வேம்பயர்களை ட்ராகுலாக்கள் என்பது மாதிரி..)

    எல்லாரும் ஒவ்வொரு படத்துக்கேற்ற மாதிரி werewolfக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்..
    ஹாரி பாட்டர் சீரீஸ் , TEEN WOLF சீரிஸ் போன்றவற்றின் படி, werewolf என்பது சாதாரணமாக மனிதராக இருப்பார்கள்.. பெளர்ணமித் தினத்தில் ஓநாயாகி விடுவார்கள்.

    TWILIGHT சீரீஸின் படி, werewolf சாதாரண மனிதராக இருந்து, தங்களின் விருப்பத்தின் படியும், கோபப்படும்போதும் ஓநாயாகி விடுவார்கள்..

    இதுல எதை நம்புறது.. (வேர்வுல்ஃபையே நம்பக் கூடாதுதான்.. இருந்தாலும் அதுக்கு ஒரு விளக்கம் கொடுப்பதில் இவ்வளவு சிக்கலா?)

    ReplyDelete
    Replies
    1. jz நண்பரே,
      அண்டர்வேர்ல்ட் படத்தின் படி werewolf மற்றும் லைக்கன் இருவருமே முதல் முறை கடிக்கப்பட்ட பின் பெளர்ணமித் தினத்தில் தான் ஓநாயாக மாறுவார்கள்.

      ஆனால் லைகன்கள் மீண்டும் மனிதனாக மாறுவார்கள்.மீண்டும் நினைத்த நேரம் ஓநாயாக மாறுவார்கள்.

      ஆனால் werewolf மீண்டும் மனிதனாக மாற முடியாது.

      Delete
  6. யப்பா ... மூச்சு வாங்குது (கொஞ்சம் இருக்குங்க. விசுக்கிக் கொள்கிறேன்).

    புதிய நான்காவது பாகம் தவிர மற்ற மூன்று பாகங்களையும் இரண்டு முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். இப்பொழுது கதை கொஞ்சம் மறந்துவிட்டது. சீக்கிரம் நான்காவது பாகத்தின் Bluray-RIP வந்துவிடும். அதற்கு முன் மீண்டும் கதையை ஞாபகப்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

    நன்றி லிமட்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஹாலிவுட்ரசிகரே,

      நான்காம் பாகம் கண்டிப்பாக போரடிக்காது.ஆனால் முதல் மூன்று பாகங்களை போல் எதிர் பார்க்க முடியாது.

      Delete
  7. ஊஊஊ அடுத்தபாகத்துக்காக ஆவலாய் வெயிட்டறேன் பாஸ்!

    ReplyDelete