புஸ் இன் பூட்ஸ் - Puss In Boots [2011]


Shrek அனிமேஷன் பட வரிசைகளை பார்த்தவர்களுக்கு Shrek 2 இல் அறிமுகமான Puss in boots பூனையை ரசிக்காமல் இருந்திருக்க முடியாது. தொப்பியை கழட்டி கையில் வைத்து கொண்டு பாவமாய் பார்க்குமே ஒரு பார்வை அதற்காகவே பலரால் ரசிக்க பட்டது. Puss in boots பூனையை கதாநாயகனாக கொண்ட படம் தான் இது. இக்கதை Puss in boots பூனை Shrek குழுவினரை இரண்டாம் பாகத்தில் சந்திப்பதற்கு முன் நடப்பதாக காட்டபடுகிறது.

சட்டத்தால் தேடப்படும் திருடனாக சுற்றி திரியும் Puss , Jack மற்றும் Jill என்ற திருட்டு தம்பகளிடம் மேஜிக் பீன்ஸ் இருப்பதை கேள்விபட்டு அதை அவர்களிடமிருந்து திருட செல்கிறது. அங்கே அதை திருட மற்றொரு  பூனையும் வருகிறது. இதனால் Puss  திருடுவது தடை பட, காரணமான அந்த பூனையை விரட்டி செல்கிறது Puss. அப்போது நடக்கும் விரட்டலும், அதன் பின் puss மற்றும் அந்த பூனைக்கும் இடையே நடக்கும் Dance Fight நம்மை சிரித்து ரசிக்க வைக்கின்றன.

சண்டையின் முடிவில் அது பெண் பூனை எனவும் அதன் பெயர் Kitty Softpaw எனவும் தெரிந்து கொள்கிறது. மேலும் தான் திருடனாக தேட படுவதற்கு காரணமான Humpty Dumpty என்ற பழைய முட்டை நண்பனால் அனுப்பி வைக்க பட்ட பூனை என அறிந்து கோபப்படுகிறது.  ஆனால் Humpty Dumpty , மேஜிக் பீன்ஸ்களை திருடி அதன் மூலம் தங்க வாத்து முட்டைகளை அடைய தனக்கு உதவினால் , Puss பெற்ற கெட்ட பெயரை நீக்கி திருடன் இல்லை என நிருபிக்க உதவுவதாக கூறுகிறது.

இதற்க்கு ஒத்து கொள்ளும் Puss தான் உதவுவதாக கூறுகிறது. பின் மூவரும் சேர்ந்து முதல் படியாக Jack மற்றும் Jill திருட்டு தம்பகளிடம் இருந்து மேஜிக் பீன்ஸ்களை திருட செல்கின்றனர். அவர்களிடமிருந்து திருடிய பின் அதனை விதைத்து வளரும் மரத்தின் மூலம் தங்க வாத்து முட்டைகளை திருட செல்கின்றனர். தங்க வாத்து முட்டைகளை திருடினார்களா? Puss தனது திருடன் என்ற கெட்ட பெயரை துடைத்ததா? என்பதே மீதி படம்.

Pussக்கு Puss in Boots என எப்படி பெயர் வந்தது என Puss  மற்றும் Humpty Dumpty யின் பிளாஷ்பேக் காட்சியில் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணை ஒரு காளையிடம் இருந்து காப்பாற்றுவதால் Pussக்கு பூட்ஸ்கள் பரிசாக கிடைகிறது. அதிலிருந்து Puss in Boots என பெயர் வருகிறது. படத்தில் Pussஇன் தோரணைகளும் , காமெடிகளும் ரசிக்க வைக்கின்றன.  Puss மற்றும் Kitty Softpaw மோதும் dance fight முக்கியமான ஒன்று. கீழே உள்ள வீடியோவில் துரத்தலும் அதன் பின் நடக்கும் dance fight.


என்னால் படத்தை 3Dயில் திரையில்  பார்க்க முடியவில்லை, பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறன். Dreamworks அனிமேஷன் நிறுவனத்திற்க்கு Shrek பட வரிசைகள் எப்போதுமே வெற்றியை தந்தவை. அதனுடன் இதுவும் சேர்ந்து கொண்டது..  kungfu panda மற்றும் Puss in boots படங்களின் தொடர்ச்சியான வெற்றிக்கு பின் pixar உடன் சரிநிகர் போட்டி போடும் நிறுவனமாக உள்ளது. படத்தின் நல்ல பிரிண்ட் டோரெண்டில் தற்போது கிடப்பதால் படத்தை தவறவிடாதீர்கள். படத்தின் ட்ரைலர் கீழே
Share:

11 comments:

  1. Welcome back Limat.

    YES, YOU Would have Loved this film more in 3D.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி விஸ்வா

    ReplyDelete
  3. அனிமேஷன் படங்களை அதிகமாக பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை நண்பரே..தங்களது விமர்சனம் பார்க்க ஆவலை தூண்டுகிறது...வாய்ப்பு கிடைப்பின் பார்க்கிறேன்..நல்ல பதிவு..நன்றி.

    சைக்கோ திரை விமர்சனம்

    ReplyDelete
  4. 3Dல் நீங்கள் கண்டிப்பாக மிஸ் செய்தே விட்டீர்கள்! 2 வாரங்கள் முன்பு கூட சத்யத்தில் ஒரு ஷோ ஓடிக் கொண்டிருந்ததாக நியாபகம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  5. போன வாரம் தான் டவுன்லோட் பண்ணினேன். சில படங்கள் பார்க்க வேண்டி இருப்பதால் அவற்றைப் பார்த்துவிட்டு கண்டிப்பாகப் பார்க்கிறேன்.

    படம் நன்றாக இருக்கும் போல இருக்கிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

    ReplyDelete
  6. பயங்கரவாதி டாக்டர் செவன்,
    கண்டிப்பாக தலைவரே...வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. ஹாலிவுட்ரசிகன்,
    ஆமாம் ரசிகரே... தவற விடக்கூடாத ஒன்று

    ReplyDelete
  8. பாஸ்,
    இன்னைக்கு தான் டவுன்லோட் பண்ணினேன்.... படம் பார்த்து விட்டு என்னோட கருத்தை சொல்கிறேன்....

    ReplyDelete
  9. அழகாக எழுதப்பட்ட ஒரு விமர்சனம். நன்றி லிமட்

    சாவியின் தமிழ் சினிமா உலகம்

    ருத்ரபூமி 10-02-2012 Journey 2: The Mysterious Island திரை விமர்சனம்

    ReplyDelete
  10. நான் இதுக்கு முன்னாடி 2009ல் ரிலீசான "The True story of Puss in Boots" படம் பார்த்திருந்தேன். செம மொக்கையான அனிமேஷன் படம். இதுவும் அதே கதைதானோன்னு நெனைச்சுட்டு பார்க்க முயற்சி செய்யாமலே விட்டுட்டேன்...
    இப்பதான் இந்த படத்தை பார்க்கனுங்கற ஆசை திரும்ப வந்திருக்கு!

    ReplyDelete
    Replies
    1. அனிமேஷன் ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒன்று JZ அவர்களே

      Delete