அண்டர்வேர்ல்ட் - Underworld Movie Series - 2

முதல் பாகத்தில் கதை 21 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கிறது. லைகன்களின் தலைவன் லுசியன்(Lucian)  15ஆம் நூற்றாண்டில் லைகன்களுக்கும், வாம்பயர்களுக்கும் நடந்த போரில் கொல்லபட்டதாலும், போரில் வென்ற வாம்பயர்கள் எஞ்சியிருக்கும் லைகன்களையும் அழிக்க ஆரம்பிக்கின்றனர்.படத்தின் நாயகி செலின்(Selene) ஒரு வாம்பயர். லைகன்களை(Lycans) எதிராக அவர்களை அழிக்க உருவான Death Dealers  குருப்பில் இருப்பவள். லைகன்களை தேடி பிடித்து அழிப்பவள்.தனது குடும்பத்தை லைகன்கள்(Lycans) கொன்றதால் அவர்கள் மேல் பழிவாங்கும் கோவத்தோடு இருக்கிறாள். கண்ணில் படும் லைகன்களை அழிக்கிறாள்.

லைகன்கள் சிலர் மைக்கேல் என்ற ஒருவனை பின் தொடர்ந்து செல்வதை பார்க்கிறாள். ஒரு சாதாரண மனிதனை ஏன் லைகன்கள் பின் தொடர்கின்றனர் என சந்தேகம் கொள்கிறாள். லைகன்கள் மைக்கேலிடமிருந்து சோதனைக்கு ரத்தத்தை எடுக்க முயல்வதை அறிந்து அவர்களை தடுத்து அவனை காப்பாற்றுகிறாள். ஆனால் 15ஆம் நூற்றாண்டில் இறந்ததாக சொல்லப்பட்ட லுசியன்(Lucian) உயிரோடு இருப்பதை அறிகிறாள். லுசியன்(Lucian) மைக்கேலை கடித்து விடுவதால் மைக்கேல் லைகனாக மாற ஆரம்பிக்கிறான். மைக்கேலும் , செலினும் காதல் கொள்கின்றனர்.

லைகன்கள் பலர் உயிரோடு இருப்பதை Death Dealersல் உள்ள வாம்பயர்கள்  யாரும் நம்ப மறுப்பதால் செலின் தூக்கத்தில் இருக்கும் இரண்டாவது வாம்பயரான விக்டரை எழுப்புகிறாள். விக்டரே செலினை வளர்த்தவன் மற்றும் செலின் பெற்றோர் சாவிற்கு காரணம் லைகன்கள் என செலினுக்கு கூறியவனும் விக்டரே. லைகன்கள் மைக்கேலை பிடித்து கொண்டு சென்று விடுகின்றனர். லைகன்கள் கூட்டத்தில் இருக்கும் Singe என்னும் சயன்டிஸ்ட்  செலின் பிடித்து வந்து விக்டரிடம் ஒப்படைக்கிறாள்.  அவனிடமிருந்து பல உண்மைகள் தெரிய வருகிறது. மைக்கேல் Alexander Corvinusனின் மூன்று மகன்களில் வில்லியம்,மார்கஸ் தவிர சாதாரண மனிதனாக இருந்த மற்றொரு மகனின் வம்சா வழியை சார்ந்தவன் எனவும் அவன் மூலம் எடுக்கப்படும் தூய ரத்தம் மூலம் லைகன்களை மேலும் சக்தி வாய்ந்த லைகன்களாக மாற்ற முயல்வதாக கூறுகிறான்.இதை கேட்கும் விக்டர் Singeஐ கொன்று விட்டு  மைக்கேல் உட்பட அனைத்து லைகன்களையும் செலினிடம் அழிக்க சொல்கிறான்.

அங்கே லைகன்களிடம் மாட்டிக்கொண்டுள்ள மைக்கேல் லுசியன்(Lucian) மூலம் பல உண்மைகளை அறிகிறான். லைகன்கள் மற்றும் வாம்பயர்கள்  இடையே போரை ஆரம்பித்தது வாம்பயர்களே என்றும் முக்கியமாக விக்டரே என்றும் , தன் மகள் sonja  லைகன் லுசியனை விரும்பியதால் அவளை லுசியன் கண் முன்னால் கொல்கிறான். இதனாலே லைகன்கள் மற்றும் வாம்பயர்கள்  இடையே போர் உருவாகிறது எனவும் அறிந்து கொல்கிறான்.இதற்கிடையே லைகன்களை அழிக்க வரும் செலினும் உண்மையை அறிந்து கொள்கிறாள். மேலும் தன் பெற்றோரை கொன்றது லைகன்கள் அல்ல விக்டரே எனவும் தெரிந்து கொள்கிறாள்.

வாம்பயர்களுக்கும் , லைகன்களுக்கும் இடையே நடக்கும் சண்டையில் லுசியன் கொல்லபடுகிறான். சாகும் முன் செலினை மைக்கேலை கடித்து அவனை வாம்பயர் மற்றும் லைகன் சக்தி கொண்டவனாக மாற்ற சொல்லி விட்டு சாகிறான். அதன் படி செலின் மைக்கேலை கடித்து அவனை சக்தி வாய்ந்த hybridஆக மாற்றுகிறாள். அங்கே வரும் விக்டர் மைக்கேலை கொல்ல பார்க்கிறான். இறுதியில் செலின் விக்டரை கொன்று விடுகிறாள். இதற்கிடையே விக்டரால் கொல்லப்பட்ட லைகன் Singe சயன்டிஸ்ட்  ரத்தம் மூலம் தூங்கி கொண்டிருந்த மார்கஸ் முழிக்கிறான். லைகன் ரத்தத்தினால் அவன் சக்தி வாய்ந்த வாம்பயர் hybridஆக மாறி இருக்கிறான். இதோடு முதல் பாகம் முடிகிறது.முதல் பாகத்தின் ட்ரைலர் கீழே

தொடர்ந்து படிக்க பதிவின் அடுத்த பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்க
அண்டர்வேர்ல்ட் - Underworld Movie Series - 3
Share:

No comments:

Post a Comment