Man on a Ledge [2012] – மேன் ஆன் லெட்ஜ்


திருடுதல் , கொள்ளையடிக்கும் படங்களை பார்க்க பலருக்கும் விருப்பமுண்டு. பலருக்கு இப்படி பரபர கொள்ளையடிக்கும்  படங்கள் பல உண்டு. உதாரணமாக Ocean’s 11 ,12,13 பட வரிசைகளை எடுத்து கொள்ளலாம். விதவிதமாக யோசிச்சு பணத்தையோ ,அல்லது வைரத்தையோ அபேஸ் செய்யும் படங்களில் முக்கியமான ஒரு பட வரிசை Ocean’s 11 ,12,13 . இப்படமும் இந்த வகையை சேர்ந்தது தான். ஆனால் தன் மேல் சுமத்தப்பட்ட பழியை துடைக்க கதாநாயகன் திருடுகிறான்.
Nick Cassidy ஒரு போலீஸ் அதிகாரி. Englander என்பவனின் 40 மில்லியன் பெறுமான ஒரு வைரத்தை காவல் காக்க சென்று அந்த வைரத்தை திருடியதாக பழி சுமத்தப்பட்டு ஜெயிலில் இருக்கிறான். ஆனால் அந்த வைரம் உண்மையில் திருட பட வில்லை. Englander தன் வைரத்தை மறைத்து வைத்து விட்டு அதை Nick Cassidy திருடியதாக பழி போடுகிறான். இதன் மூலம் தன் நஷ்டப்பட்டு மூடப்பட்டு இருந்த ஜிவல்லரி பிஸினெசை காப்பாற்றுகிறான்.

தன்னை நிரபராதி என நிருபிக்க Nick Cassidy ஜெயிலில் இருந்து தப்பிக்கிறான். தப்பித்து Englander நகைக்கடைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய ஹோட்டலில் ரூம் எடுத்து பின் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறவே அங்கே ஹோட்டலுக்கு கீழே கூட்டம் கூடுகிறது. போலீஸ்,மீடியா  என பலரும் குவிகின்றனர்.  இது போல் தற்கொலை செய்ய முடிவெடுப்பவர்களை மனம் மாற்றி காப்பாற்றும் குழுவும் வருகிறது. அப்படி இவரது மனதை மாற்ற வருபவள் Lydia. அவளிடம் தான் ஒரு நிரபராதி தான் வைரத்தை திருட வில்லை அதை நிருபிக்கவே தற்கொலை செய்ய போவதாக கூறுகிறான்.

மேலும் Nick Cassidy  தன் மேல் பழி சுமத்த சில போலீஸ் அதிகாரிகளும் உதவியுள்ளதாக கூறுகிறான்.Lydia அவனது மனதை மாற்ற முயற்சி செய்கிறாள். ஆனால் நமது Nick Cassidy திட்டமோ வேறு இவன் இங்கே தற்கொலை செய்வதாக அனைவரையும் திசை மாற்றி கொண்டு இருக்க , அங்கே Englanderஇன்  ஜிவல்லரியில் Nick Cassidy தம்பியும் அவனது காதலியும் , எந்த வைரத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டானோ அந்த வைரத்தை திருடுகின்றனர். அவர்களுக்கு இங்கிருந்தே போன் மூலம் பேசி உதவுகிறான். இதன் மூலம் தான் நிரபராதி என நிருபிக்க முயல்கிறான்.

வைரம் திருடப்பட்டதா… Nick Cassidy தன்னை நிரபராதி என நிருபித்தானா என்பதே மீதி படம். தற்கொலை செய்வேன் என மிரட்டி கொண்டே அங்கிருந்து அவர்கள் வெடி வைத்து தகர்க்க உதவுவது, Nick Cassidy  தம்பியும் , அவனது காதலியும் முதல் பிளான் சொதப்பி விட , இரண்டாவது பிளானை பயன்படுத்தி வைரத்தை எடுப்பது,பின் மீண்டும் அவர்கள் கடைசியில் வைரத்தை பறிகொடுத்துவிடுவது என ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக செல்கிறது.

உங்களுக்கு ஒன்றரை மணி நேரம் விறுவிறுப்பான போரடிக்காத பரபர படம் பார்க்கனுமா…? மேலும் நீங்கள் திருடுதல் , கொள்ளையடிக்கும் பட ரசிகரா…இது உங்களுக்கான படம். நமக்கு உலகசினிமாலாம் இந்த மாதிரி பர பர படங்கள் தான்.
Share:

7 comments:

  1. நமக்கு உலகசினிமாலாம் இந்த மாதிரி பர பர படங்கள் தான்.// correct boss

    ReplyDelete
  2. //உங்களுக்கு ஒன்றரை மணி நேரம் விறுவிறுப்பான போரடிக்காத பரபர படம் பார்க்கனுமா…?//

    ஆமா ... ஆமா. ஆனா இன்னும் ஒரிஜினல் ப்ரிண்ட் வரலயே பாஸ். இப்போ தான் ஷேர்லாக் ஹோம்ஸ் பார்க்கிறேன். இது வந்ததும் நிச்சயம் பார்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  3. படத்தோட ப்ளாட் (Plot) ரொம்ப நல்லா இருக்கு... எனக்கும் இந்த மாதிரி பர பர intelligent படம் தான் ரொம்ப பிடிக்கும்....நீங்க கதையைய விவரிக்கிற ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு,,,
    படத்த எங்க பாஸ் பார்த்தீங்க ??

    ReplyDelete
  4. நல்ல பதிவு லக்கி!
    இந்தப் படத்தோட கதையை வாசிச்சு இன்டரஸ்ட்டாயி படத்தை தேடினன்.. நல்ல பிரிண்ட் கிடைக்கலை. இபபோ வந்திருக்கலாம்.. போய்ப் பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  5. ஹாலிவுட் ரசிகன் , ராஜ், jz
    படத்தின் R5 பிரிண்ட் வந்துவிட்டது. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. அருமையான பதிவு நண்பரே! மிக ரசித்தேன் தங்கள் பதிவை! படம் பார்க்க டைம் கிடைக்க மாட்டேங்குது பாஸ்!

    ReplyDelete
  7. உங்கள் விமர்சனம் படித்துவிட்டு படம் பார்த்தேன். நீங்கள் oceans படங்கள பத்தி எல்லாம் சொன்னதால்,ஆர்வமாக பார்த்தேன்.படம் செம மொக்கை பாஸ். இந்த மாதிரி திருடும் கொள்ளையடிக்கும் படங்கள் நான் அதிகம் பார்த்துள்ளேன். என்னை கேட்டால் பெஸ்ட் படம் என்றால் "the score" படம்தான்.முடிந்தால் நீங்கள் பார்க்கவும்.

    ReplyDelete