The Avengers அட்டகாசம்


 ஏற்கனவே கருந்தேளார் Avengers பற்றி ஆதி முதல் இறுதி வரை ஆராய்ச்சி கட்டுரையே வெளியிட்டுவிட்டார். அவரின் Avengers பதிவுகள் ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றி விட்டன. முதல் நாள் பார்க்க முடியாததால் இன்று காலை பகல் காட்சியே பார்த்து விட்டேன். பல நாள் கழித்து அருமையான சூப்பர் ஹீரோ படம் பார்த்த நிறைவு கிடைத்தது.சூப்பர் ஹீரோக்களில் எனக்கு பிடித்த ஆசாமி Spiderman தான். அடுத்தபடியாக Batman அதுவும் Batman Begins படத்துக்கு பிறகு தான்.

Iron Man , Hulk , Thor , Captain America  என அனைவருக்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்க( இவர்களை பற்றி அறியாதவர்கள் உடனே கருந்தேளாரின் பதிவுகளை பார்க்க ) அனைவரும் ஒன்றாக நடிக்கும் படம் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும். அதை ஏமாற்றாமல் அசத்தியிருக்கிறார்கள். படத்தின் கதை எப்போதுமே சூப்பர் ஹீரோ படங்களில் ஒன்று தான் உலகத்தை காப்பாற்றுவது. அது தான் இங்கேயும். கதையை மேலும் சற்று விரிவாக கருந்தேளாரின் இந்த பதிவில் பார்க்க. இங்கே படத்தில் கலக்குபவர்களை பற்றி பார்ப்போம்

தியேட்டரில் அறிமுக காட்சிகளிலும் சரி, அதிரடி காட்சிகளிலும் சரி பலத்த ஆதரவையும் , கைதட்டலையும் பெறுவது Hulk தான். Hulk படங்கள் ஏற்கனவே இரண்டு வந்திருந்தாலும் இந்த படம் ஒன்றே அந்த இருபடங்களை தூக்கி சாப்பிட்டு விடுகிறது. வில்லன் லோகியை புரட்டி எடுப்பது , வில்லன்களின் விமானத்தை தோருடன் சேர்ந்து வீழ்த்திய பிறகு தோரை குத்து விடுவது , இறுதியில் Iron manஐ எழுப்புவது போன்ற காட்சிகளில் தியேட்டர் அதிர்கிறது. எல்லாருக்கும் சமமாக காட்சிகளை கொடுத்திருந்தாலும் Hulkகே வெல்கிறது.



அடுத்து நம்ம அயன் மேன் இவர் மற்ற ஹீரோக்களை கிண்டல் அடிப்பதில் ரசிகர்களை கவருகிறார். முக்கியமாக அயன் மேனும் , தோரும் முதலில் மோதும் காட்சிகள். ஆக்சன் காட்சிகளில் hulkகுக்கு அடுத்து அயன் மேன் தான். மாடியிலிருந்து கீழே விழும் போதே பறந்து வரும் அவரது அயன் மேன் உடையை மாற்றிக்கொண்டு பார்க்கும் காட்சியில் பயங்கர கரவோஷம்.  hulk மற்றும் ironman  இருவரே அதிகமாக ரசிகர்களை கவருகிறார்கள். ஒரு கட்டத்தில் வில்லன் லோகி என்னிடம் ஒரு படையே இருக்கு என அயன்மேனிடம் சொல்ல அதுக்கு அயன்மேன் என்கிட்டே ஹல்க் இருக்குடா என கூறும் பதிலடி அருமை.

படத்தில் அடுத்த கவரும் அம்சம் சூப்பர் ஹீரோக்கள் அவர்களுக்கிடையே போடும் சண்டைகள். வில்லன்களிடையே மோதுவதை காட்டிலும் இரு ஹீரோக்கள் மோதுவது படு சுவராசியமாக இருக்கிறது. நான்கு சூப்பர் ஹீரோக்களில் கேப்டன் அமெரிக்கா பழமையானவர் என்பதாலோ என்னவோ ரசிக்கும் விடயங்கள் இவரிடம் குறைவு.  சாதாரண ஹீரோ பீலிங்கே ஏற்படுத்துகிறார். தோர் ஆங்காங்கே அசத்துகிறார். தோரின் சுத்தியலை hulk தூக்க முடியாமல் இருக்க தோர் அதை தூக்கி ஹல்க்கை அடிக்கும் காட்சி என ரசிக்கும் காட்சிகள் படத்தில் ஏராளம்.

கிளைமாக்ஸ் சொல்லவே தேவையில்லை…ஆறு பேரும் ஒன்று சேர்ந்து சுற்றி நிற்கும் காட்சியில் விசில் பறக்கிறது. கடைசி அரைமணி நேரம் அட்டகாசம்,அதகளம் தான். படத்தில் ஏமாற்றும் விஷயம் 3D தான். 3Dயில் ஒன்றும் சொல்லிகொள்ளும் படியாக இல்லை. கண்ணாடி இல்லாமல் 2Dயிலேயே படத்தை பாத்திருக்கலாம். படம் 3D முறையில் எடுக்க பட வில்லை என நினைக்கிறன். இதை சொல்லவே தேவையில்லை இருந்தாலும் சொல்லுகிறேன்… இந்த வருடத்தின் தவற விட கூடாத படம்.
Share:

7 comments:

  1. பார்த்தாச்சா .... இன்னும் நெகடிவ் விமர்சனம் ஒன்னு கூட படிக்கல. எல்லாரும் சூப்பர்னு சொல்றாங்க. எப்படியும் தியேட்டர்ல பார்க்கலாம்னு நினைக்கிறேன்.

    விமர்சனத்திற்கு நன்றி.

    ReplyDelete
  2. ஹாலிவுட்ரசிகன்,

    கண்டிப்பா தியேட்டர்ல போய் பாருங்க

    ReplyDelete
  3. Nanba super indru than paarkka porean.iron man dress maaruvathu trailer pakkavaa irunthathu...

    ReplyDelete
  4. உங்க விமர்சணத்தை பார்த்துடோம்ல போய் பார்துரவேண்டியது தான்

    ஒரு பதிவு போட்டுக்கேன் வந்து பாருங்க

    6 சமூக வலைத்தளங்களை ஒரே தளத்தில் காணலாம்

    ReplyDelete
  5. படம் படு அட்டகாசம் போல.. கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன்!!

    ReplyDelete
  6. செம படம் என்று உங்கள் விமர்சனம் அடித்து சொல்கிறது......இந்த வாரத்துக்கு இங்க டிக்கெட் எல்லாமே புல்... அடுத்த வாரம் வீக் எண்டு போலாம் என்று இருக்கிறேன்...
    கண்டிப்பா IMDB Top10ல இந்த படம் வரும் என்று நினைக்குறேன்...

    ReplyDelete
  7. சூப்பர். இதை எப்படியும் இன்னொரு வாட்டி பார்க்காம உடமாட்டேன் :-)

    ReplyDelete