Showing posts with label Batman. Show all posts
Showing posts with label Batman. Show all posts

The Dark Knight Rises [2012] - Fever Continues...



சினிமா உலகமே ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருடத்தின் மிக முக்கியமான் படம் The Dark Knight Rises. இந்தப்படத்தை ஏன் உலகமே எதிர்பார்த்தது என்பதை எல்லாம் நான் சொல்ல தேவையில்லை. படம் இப்போது ரீலிஸ் ஆகிவிட்ட நிலையில் , இந்த படத்திற்கு விமர்சனம் எழுதாத சினிமா வலைதளங்களோ ,செய்திதாள்களோ இல்லை எனலாம். இதுவரை வந்த விமர்சனங்கள் பாசிடிவ் மற்றும் நெகடிவ் கலந்தே உள்ளன.

தியேட்டரில் ரஜினிக்கு இணையான கைதட்டல்களையும் , விசில்களையும் பெறுகிறார் பேட்மேன். எந்தவொரு ஆங்கில பட கதாநாயகனும் நம்மூரில் இவ்வளவு கைதட்டல்களையும் , விசில்களையும் பெற்றதில்லை எனலாம். Bruce Wayne சாதாரணமாக கைத்தடியை ஊன்றி வரும் முதல் காட்சியிலேயே ரசிகர்களின் விசில் காதை பிளந்துவிட்டது. அடுத்து பேட்மேனாக வரும் முதல் காட்சிக்கு சொல்லவே வேணாம். என்ன தான் இரண்டரை மணி நேரம் படம் போரடிக்காமல் பரபரப்போடு சென்றாலும் , படம் பெரும் ஏமாற்றத்தையே எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தந்தது எனலாம். அதிலும் கிளைமாக்ஸ் பெரும் ஏமாற்றமே. ஓகே..ஓகே... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்...கீழே உள்ள நெகடிவ் மற்றும் பாசிடிவ் விமர்சனங்களை பாருங்கள்.

The Dark Knight Rises (2012) - English
Why is The Dark Knight Rises Nolan's worst yet?
The Dark Knight Rises (2012)- Mind Blowing

இணையத்தில் எங்கு சென்றாலும் The Dark Knight Rises விமர்சனமே எங்கும் நிறைந்திருக்கிறது. அதனால் நாம் இங்கே பார்க்க போவது பட விமர்சனம் அல்ல. ஏற்கனவே முந்தைய இந்த The Dark Knight Rises Fever பதிவில் பட ரிலிஸ்க்கு முன்னர் பரவிய The Dark Knight Rises ஜுரத்தை பார்த்தோம். படம் ரிலிஸ்க்கு பின்னர் இந்த ஜுரம் தணியும் என்றால் இல்லை. மேலும் பரவியே வருகிறது. இந்த ஜுரத்துக்கு இரண்டு காரணங்கள் ஒன்று பட விமர்சனங்கள் மற்றொன்று படத்தின் கிளைமாக்ஸ்.இதில் ஒரு காரணத்தை ஏற்கனவே பார்த்த நிலையில் இரண்டாவதை பார்ப்போம். படத்தின் கிளைமாக்ஸ் பற்றி பார்க்க போவதால் படம் பார்க்காதவர்கள்  இதற்கு மேல் படிக்க வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

கிளைமாக்ஸில் பேட்மேன் தனது BatPlaneல் பாமை தூக்கிக்கொண்டு கடலின் மேல் வெடிக்க செய்து அதனுடன் இறந்து விடுவதாக காட்டப்படும். அனைவரும் பேட்மேன் இறந்து விடுவதாக நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு அடுத்து வரும் காட்சியில் Bruce ஆறுமாதத்திற்கு முன்னரே BatPlaneல் AutoPilot வசதியை நிறுவியுள்ளதை Fox அறிகிறார்.இதனால் பேட்மேன் பாம் வெடிக்கும் முன் அதிலிருந்து வெளியேறி விட்டு AutoPilot மூலம் பாமை கொண்டு சென்று வெடிக்க விட்டதாக கூறலாம்.மேலும் அதற்கு அடுத்த காட்சியில் Blake பேட்மேனின் குகையை தான் வைத்திருக்கும் coordinates மூலம் கண்டுபிடிக்கிறான். இதை கொடுத்தது பேட்மேன் என கொள்வதன் மூலம் பேட்மேன் சாகவில்லை என்பது மேலும் உறுதியாகிறது.

உச்சகட்ட காட்சியாக Alfred இத்தாலியில் காபி ஷாப்பில் Bruceஐ CatWomanனுடன் பார்க்கிறார். இந்த காட்சியிலும் ரசிகர்கள் விசிலடித்து காதை கிழித்து விட்டார்கள். இந்த காட்சி பேட்மேன் சாகவில்லை என்பதை அடித்து சொல்கிறது. ஆனால் மற்றொரு தரப்பு இதை அடியோடு மறுக்கிறது. பேட்மேன் இறந்து விட்டார் எனவும், இங்கே தான் நோலன் ட்விஸ்ட் வைத்திருக்கிறார் என இவர்களும் அடித்து கூறுகின்றனர்.சரி இவர்கள் முடிவை பற்றி என்ன கூறுகிறார்கள் என பார்ப்போம்.

பேட்மேன் தனது BatPlaneல் பாமை தூக்கிக்கொண்டு செல்லும் போது பாம் வெடிக்க 5 செகண்ட்ஸ் என காட்டுகிறது. என்னதான் பேட்மேன் AutoPilot வசதி செய்திருந்தாலும் இந்த குறுகிய நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் வெளியேற முடியாது எனவும், கடைசியில் க்ளோஸப்பில் பேட்மேன் முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் சாவை நோக்கி செல்வது போலவே இருக்குமே அன்றி தப்பிப்பதை காட்டுவதாக இல்லை என்கிறார்கள். மேலும் இறப்பதற்கு முன்னரே Blakeக்கு குகையின் coordinatesஐ விட்டுவிட்டு போயிருக்கிறார் என்கின்றனர். அடுத்தது Alfred காபி ஷாப்பில் Bruceஐ காணும் காட்சி...

காபி ஷாப்பில் Bruceஐ காணும் Alfred முகத்தில் பேட்மேன் உயிரோடிருப்பதை கண்டு வியக்கும் மாற்றங்கள் எதுவும் இல்லை என்றும்,அந்த காட்சி படத்தின் தொடக்கத்தில் அவர் கூறுவது போல் அவரது கற்பனையில் வரும் காட்சியே என கூறுகின்றனர். இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம் , அப்படியென்றால் ஏன் அங்கே CatWoman இருக்கிறார்? CatWomanக்கும், பேட்மேனுக்கும் உள்ள நெருக்கம் Alfredக்கு தெரியவாய்ப்பில்லையே என்று.இதற்கு இவர்கள் கூறும் பதில் Alfred கற்பனையில் இருப்பது ஏதோ ஒரு பெண்.அதை நோலன் CatWomanஆக காட்டியுள்ளார் என்கின்றனர்.
Catwoman மற்றும் AutoPilot என இரண்டை விஷயங்களை வைத்து நோலன் நம்மை குழப்பி விட்டுள்ளார் என்கின்றனர் இவர்கள். ஆக இவர்கள் கூறுவது பேட்மேன் இறந்துவிட்டார் என்பதே.மேலும் சிலர் நோலன் முடிவை நம் கையிலேயே விட்டுவிட்டார் என்கின்றனர். யாருக்கு எது வேண்டுமோ அதை எடுத்து கொள்ளலாம் என்கின்றனர். இந்த முடிவு பற்றிய கருத்துக்களும், விவாதங்களும் The Dark Knight Rises உண்டாக்கிய ஜுரத்தை குறையவிடாமல் அப்படியே வைத்திருக்கிறது.படம் பார்த்த நண்பர்களே படத்தின் முடிவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படியே On the wayல இருக்கும் இன்னொரு சூப்பர்ஹீரோவை கீழே பார்த்து விடுங்கள்.இதன் கதையில் நோலனுக்கும் பங்குண்டு.

Share:

The Dark Knight Rises Fever

ஹாலிவுட்டிலும் , அனைத்து சினிமா வலைதளங்களிலும், வலைப்பூக்களிலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் The Dark Knight Rises படம் தான். பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பதை விட Dark Knight Rises ஜுரம் பரவிக்கொண்டு வருகிறது என சொல்லலாம். மெல்ல பரவி வந்த இந்த ஜுரம் 16ஆம் தேதி திரையிடப்பட்ட படத்தின் Premier ஷோவுக்கு பின் படுவேகமாக பரவி வருகிறது.

இதற்கு காரணம் இதன் முந்தைய பாகங்களான Batman Begins படத்தின் வெற்றியும், The Dark Knight படத்தின் பிரமாண்டமான வெற்றியும் தான் . The Dark Knight படம் ரிலீஸ் ஆகும் போதே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்திற்கு பல மடங்காக அதிகரித்து விட்டது. The Dark Knight படம் இந்தியாவில் ரிலீஸ் ஆகும் போது இந்தியாவில் இவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. காரணம் பலர் முதல் பாகமான Batman Begins பார்க்காததே. எனக்கு The Dark Knight படம் பார்த்த பிறகே இதற்கு முதல் பாகம் இருப்பது தெரியும். ஆனால் தற்போது அப்படியில்லை முதல் இரு பாகங்களை பார்த்த நிலையில் ஹாலிவுட்டில் இருக்கும் அதே ஜுரம் இங்கேயும் இருக்கிறது.

இந்த ஜுரம் மேலும் அதிகரிக்க காரணம் 16ஆம் தேதி திரையிடப்பட்ட படத்தின் Premier ஷோவுவுக்கு பின் வந்த விமர்சனங்களே. வந்த விமர்சனங்களும் படத்தின் வெற்றியை உறுதிபடுத்த, முதன்முதலாக வந்த ஒரு நெகடிவ் விமர்சனம் இப்படங்களின் ரசிகர்களின் பட வெறியை துல்லியமாக காட்டிவிட்டது. Marshall Fine என்பவர் படத்தை பற்றி நெகடிவ்வாக விமர்சனம் எழுத , அவர் பட ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார். இவரது விமர்சன சுட்டியை பிரபல சினிமா ரேட்டிங் தளமான Rotten Tomatos வில் போட வந்தது பிரச்சனை. Rotten Tomatos வில் சுட்டியை போட்ட பின் இவரை திட்டி இவரது தளத்துக்கு வரும் கொலைவெறி கமெண்ட்டுகள் அதிகரித்து விட்டன. எந்தளவுக்கு என்றால் அவரது வலைதளத்தின் சர்வரையே முடக்கிக்போடும் அளவுக்கு டிராபிக் சென்று விட்டன.இதன் பின் அவர் கேட்டு கொண்டதுக்கு இணங்க Rotten Tomatos தளம் அவரது சுட்டியை நீக்கி விட்டது.

இவருக்கு அடுத்து Eric D Snider என்ற Rotten Tomatos வின் பிரபல விமர்சகர் Rotten Tomatos வில் இதுவரை வந்த படங்களில் மோசமான படம் என்று குட்டி கமெண்ட் போட்டு விட்டு அதில் முழு பதிவை படிக்க தனது தளத்திற்கு வருமாறு சுட்டியை போட்டு விட்டார். அந்த சுட்டியை கிளிக் செய்து அவரது தளத்திற்கு சென்றால் நான் இன்னும் படமே பார்க்கவில்லை,நெகடிவ்வாக விமர்சனம் எழுதுபவர்களை படம் பாக்காமலே திட்டும் ரசிகர்களை ஏமாற்றவே இப்படி செய்தேன் என பதிவு இருக்க ரசிகர்கள் கொலைவெறி அதிகமாகி விட்டது. இவர் ஏற்கனவே இது போல் The Dark Knight  படம் ரிலீஸ் ஆகும் போதும் இப்படி செய்தாராம்.

இவரின் இச்செயலால் Rotten Tomatos தளம் இவரை தள விமர்சகர் அக்கவுண்டை தூக்கிவிட்டது.இதோடு பிரச்சனை முடியவில்லை யார் யார் நெகடிவ்வாக விமர்சனம் போடுகிறார்களோ அவர்கள் எல்லாம் ரசிகர்களின் கொலைவெறி கமெண்டுக்கு ஆளானார்கள். ஏன் பிரச்சனை என்று Rotten Tomatos தளம் படம் ரிலீஸ் ஆகும் வரை கமெண்ட்டோ , விமர்சனமோ போடுவதை தடை செய்து விட்டது. Rotten Tomatos இதற்கென தனி பதிவே இட்டு ஏன் தடை செய்யப்பட்டது என கூறியுள்ளார்.இதிலிருந்து ஜுரம் மேலும் அதிகமாகி விட்டது.

ஏற்கனவே முந்தைய பாகங்களை பார்த்தவர்களுக்கு தான் இந்த ஜுரம் பரவியிருக்கிறது என்றால் பார்க்காதவர்களையும்,சூப்பர்ஹீரோ படங்களை வெறுக்கும் ரசிகர்களையும் வலைத்தளங்களும்,வலைப்பூக்களும் படத்தை பற்றி எழுதி அவர்களுக்கும் பரவி விட்டது. எப்படியோ படம் வந்த பின் பல விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். இதோ ஜுரத்தில் நானும் ஒரு பதிவை போட்டு  விட்டேன். படத்திற்கு இன்னுமொரு எதிர்பார்ப்பு இந்த வருடம் ஏற்கனவே வெளியாகி வசூலை வாரி குவித்த Avengers படத்தின் வசூலை முறியடிக்குமா என்பது தான். இன்னும் The Dark Knight Rises ஜுரம் வராதவர்கள் கீழே உள்ள பதிவுகளின் மூலம் ஜுரத்தை வரவழைத்து கொள்ளலாம்.

கருந்தேளார் பதிவுகள்

கொழந்த பதிவு

ஹாலிவுட் ராஜ் பதிவுகள்

படத்தின் ட்ரைலர்
Share: