சினிமா உலகமே ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருடத்தின் மிக முக்கியமான் படம் The Dark Knight Rises. இந்தப்படத்தை ஏன் உலகமே எதிர்பார்த்தது என்பதை எல்லாம் நான் சொல்ல தேவையில்லை. படம் இப்போது ரீலிஸ் ஆகிவிட்ட நிலையில் , இந்த படத்திற்கு விமர்சனம் எழுதாத சினிமா வலைதளங்களோ ,செய்திதாள்களோ இல்லை எனலாம். இதுவரை வந்த விமர்சனங்கள் பாசிடிவ் மற்றும் நெகடிவ் கலந்தே உள்ளன.
தியேட்டரில் ரஜினிக்கு இணையான கைதட்டல்களையும் , விசில்களையும் பெறுகிறார் பேட்மேன். எந்தவொரு ஆங்கில பட கதாநாயகனும் நம்மூரில் இவ்வளவு கைதட்டல்களையும் , விசில்களையும் பெற்றதில்லை எனலாம். Bruce Wayne சாதாரணமாக கைத்தடியை ஊன்றி வரும் முதல் காட்சியிலேயே ரசிகர்களின் விசில் காதை பிளந்துவிட்டது. அடுத்து பேட்மேனாக வரும் முதல் காட்சிக்கு சொல்லவே வேணாம். என்ன தான் இரண்டரை மணி நேரம் படம் போரடிக்காமல் பரபரப்போடு சென்றாலும் , படம் பெரும் ஏமாற்றத்தையே எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தந்தது எனலாம். அதிலும் கிளைமாக்ஸ் பெரும் ஏமாற்றமே. ஓகே..ஓகே... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்...கீழே உள்ள நெகடிவ் மற்றும் பாசிடிவ் விமர்சனங்களை பாருங்கள்.
The Dark Knight Rises (2012) - English
Why is The Dark Knight Rises Nolan's worst yet?
The Dark Knight Rises (2012)- Mind Blowing
இணையத்தில் எங்கு சென்றாலும் The Dark Knight Rises விமர்சனமே எங்கும் நிறைந்திருக்கிறது. அதனால் நாம் இங்கே பார்க்க போவது பட விமர்சனம் அல்ல. ஏற்கனவே முந்தைய இந்த The Dark Knight Rises Fever பதிவில் பட ரிலிஸ்க்கு முன்னர் பரவிய The Dark Knight Rises ஜுரத்தை பார்த்தோம். படம் ரிலிஸ்க்கு பின்னர் இந்த ஜுரம் தணியும் என்றால் இல்லை. மேலும் பரவியே வருகிறது. இந்த ஜுரத்துக்கு இரண்டு காரணங்கள் ஒன்று பட விமர்சனங்கள் மற்றொன்று படத்தின் கிளைமாக்ஸ்.இதில் ஒரு காரணத்தை ஏற்கனவே பார்த்த நிலையில் இரண்டாவதை பார்ப்போம். படத்தின் கிளைமாக்ஸ் பற்றி பார்க்க போவதால் படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
கிளைமாக்ஸில் பேட்மேன் தனது BatPlaneல் பாமை தூக்கிக்கொண்டு கடலின் மேல் வெடிக்க செய்து அதனுடன் இறந்து விடுவதாக காட்டப்படும். அனைவரும் பேட்மேன் இறந்து விடுவதாக நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு அடுத்து வரும் காட்சியில் Bruce ஆறுமாதத்திற்கு முன்னரே BatPlaneல் AutoPilot வசதியை நிறுவியுள்ளதை Fox அறிகிறார்.இதனால் பேட்மேன் பாம் வெடிக்கும் முன் அதிலிருந்து வெளியேறி விட்டு AutoPilot மூலம் பாமை கொண்டு சென்று வெடிக்க விட்டதாக கூறலாம்.மேலும் அதற்கு அடுத்த காட்சியில் Blake பேட்மேனின் குகையை தான் வைத்திருக்கும் coordinates மூலம் கண்டுபிடிக்கிறான். இதை கொடுத்தது பேட்மேன் என கொள்வதன் மூலம் பேட்மேன் சாகவில்லை என்பது மேலும் உறுதியாகிறது.
உச்சகட்ட காட்சியாக Alfred இத்தாலியில் காபி ஷாப்பில் Bruceஐ CatWomanனுடன் பார்க்கிறார். இந்த காட்சியிலும் ரசிகர்கள் விசிலடித்து காதை கிழித்து விட்டார்கள். இந்த காட்சி பேட்மேன் சாகவில்லை என்பதை அடித்து சொல்கிறது. ஆனால் மற்றொரு தரப்பு இதை அடியோடு மறுக்கிறது. பேட்மேன் இறந்து விட்டார் எனவும், இங்கே தான் நோலன் ட்விஸ்ட் வைத்திருக்கிறார் என இவர்களும் அடித்து கூறுகின்றனர்.சரி இவர்கள் முடிவை பற்றி என்ன கூறுகிறார்கள் என பார்ப்போம்.
பேட்மேன் தனது BatPlaneல் பாமை தூக்கிக்கொண்டு செல்லும் போது பாம் வெடிக்க 5 செகண்ட்ஸ் என காட்டுகிறது. என்னதான் பேட்மேன் AutoPilot வசதி செய்திருந்தாலும் இந்த குறுகிய நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் வெளியேற முடியாது எனவும், கடைசியில் க்ளோஸப்பில் பேட்மேன் முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் சாவை நோக்கி செல்வது போலவே இருக்குமே அன்றி தப்பிப்பதை காட்டுவதாக இல்லை என்கிறார்கள். மேலும் இறப்பதற்கு முன்னரே Blakeக்கு குகையின் coordinatesஐ விட்டுவிட்டு போயிருக்கிறார் என்கின்றனர். அடுத்தது Alfred காபி ஷாப்பில் Bruceஐ காணும் காட்சி...
காபி ஷாப்பில் Bruceஐ காணும் Alfred முகத்தில் பேட்மேன் உயிரோடிருப்பதை கண்டு வியக்கும் மாற்றங்கள் எதுவும் இல்லை என்றும்,அந்த காட்சி படத்தின் தொடக்கத்தில் அவர் கூறுவது போல் அவரது கற்பனையில் வரும் காட்சியே என கூறுகின்றனர். இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம் , அப்படியென்றால் ஏன் அங்கே CatWoman இருக்கிறார்? CatWomanக்கும், பேட்மேனுக்கும் உள்ள நெருக்கம் Alfredக்கு தெரியவாய்ப்பில்லையே என்று.இதற்கு இவர்கள் கூறும் பதில் Alfred கற்பனையில் இருப்பது ஏதோ ஒரு பெண்.அதை நோலன் CatWomanஆக காட்டியுள்ளார் என்கின்றனர்.
Catwoman மற்றும் AutoPilot என இரண்டை விஷயங்களை வைத்து நோலன் நம்மை குழப்பி விட்டுள்ளார் என்கின்றனர் இவர்கள். ஆக இவர்கள் கூறுவது பேட்மேன் இறந்துவிட்டார் என்பதே.மேலும் சிலர் நோலன் முடிவை நம் கையிலேயே விட்டுவிட்டார் என்கின்றனர். யாருக்கு எது வேண்டுமோ அதை எடுத்து கொள்ளலாம் என்கின்றனர். இந்த முடிவு பற்றிய கருத்துக்களும், விவாதங்களும் The Dark Knight Rises உண்டாக்கிய ஜுரத்தை குறையவிடாமல் அப்படியே வைத்திருக்கிறது.படம் பார்த்த நண்பர்களே படத்தின் முடிவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படியே On the wayல இருக்கும் இன்னொரு சூப்பர்ஹீரோவை கீழே பார்த்து விடுங்கள்.இதன் கதையில் நோலனுக்கும் பங்குண்டு.