Fringe [2008-2013]


பல நாள் Draftல் அரைகுறையாக தூங்கி கொண்டிருந்த இந்த பதிவுக்கு போன வாரம் முடிந்த இந்த சீரீஸின் முடிவால் விடிவு வந்திருக்கிறது. Time Travel கதையை கொண்ட படம் என்றால் அது எப்படிப்பட்ட பிளாப் ஆன படமானாலும் தேடி பிடித்து பார்க்கிற ஆள் நான். இதற்கு காரணம் Back To The Future படம். பிளஸ்2 படிக்கும் போது எப்படிடா இப்படி எல்லாம் யோசிச்சு படம் எடுக்குறாங்கனு நினைக்க வச்ச படம். படத்தை பார்த்து விட்டு படத்தை பார்க்காதவர்களிடம் கதையை சொல்லுவதிலேயே ஒரு ஆனந்தம்,கெத்து இருந்தது அப்போது.இதற்கு பிறகு பல Time Travel படங்கள் பார்த்திருந்தாலும் இதனை போல் என்னை எதுவும் கவரவில்லை.

வேற எந்த Time Travel படமும் இனிமேல் இது போல் பிடிக்காது என நினைத்திருக்கும் போது நம்ம பாலா அறிமுகபடுத்திய ஆங்கில சீரீஸ் Lost  எனது வாயை பிளக்க வைத்தது. ஒவ்வொரு episode முடியும் போதும் அடுத்த எபிசோடை பார்த்தே தீர வேண்டும் என்ற வெறியை உண்டாக்கியது. Time travel மட்டுமில்லாமல் அதனை ஒட்டிய பல Sci-Fi சமாச்சாரங்களை வைத்து அதகளம் பண்ணியிருப்பார்கள்.இதை பற்றி பாலா எழுதிய பதிவை இங்கே காணலாம்.Sci-Fi ரசிகர்கள் தவற விட கூடாத நாடகம் இது. அடுத்து என்ன வரும்னு பொறுமை இல்லாமல் அவசர கதியில் பார்த்ததால் பல விஷயங்கள் புரியவில்லை .மீண்டும் முதலில் இருந்து பார்க்க எண்ணியுள்ளேன்.

சரி...Fringe சீரீஸ்க்கு வருவோம். Time travel சம்பந்தப்பட்ட அனைத்து Sci-Fi விஷயங்களை கொண்ட இன்னொரு நாடகம். Time Travel , Parallel Universe , Time Line,Time leak என சொல்லிக்கொண்டே போகலாம். Time இதில் முக்கியமானதாக இருந்தாலும் அது போக பல Sci-Fi விஷயங்களையும்,Scienceக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும்(அதாவது Fringe Science என இதில் சொல்வார்கள்)  கலந்தடிப்பார்கள்.  உதாரணமாக Shape Shifting,Mutation,Pattern இப்படி என்னென்னமோ சொல்வார்கள்.  அதற்காக ராவாக போகும் என நினைக்க வேண்டாம். விறுவிறுப்புக்கும்,திரிலிங்க்கும் பஞ்சமிருக்காது.

இந்த சீரீசை உருவாக்கியவர் Lost சீரீஸ் உருவாக்கியவர்களில் ஒருவரான , மேலும் MI-3 , Star Trek , Super 8 போன்ற படங்களின் டைரக்டர் J.J Abrams. Lost சீரீஸ் ஒன்றே போதும் இவரது திறமைக்கு. மேலும் வரப்போகும் Star Trek இரண்டாம் பாகம் மற்றும் Star Warsஇன் அடுத்த பாக டைரக்டரும் இவரே.

Walter ஒரு அறிவியல் ஆய்வாளர் விஞ்ஞானி. அவரின் ஏழு வயது மகன் Peter ஒரு அரிய நோயால் பாதிக்கபடுகிறான். பல வருடங்களுக்கு முன்னர் இருந்த இந்த நோயை அப்போது குணப்படுத்திய டாக்டர் 1936ல் இறந்து விடுகிறார். இதனால் டைம் டிராவல் செய்து 1936 க்கு முன்னர் சென்று அந்த டாக்டரை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்து தன் மகன் Peterஐ காப்பாற்ற நினைக்கிறார் Walter. ஆனால் அதற்காக கண்டுபிடிக்கும் கருவி அவர் நினைத்ததை போல் செயல்படாமல் வேறுவிதமாக செயல்படுகிறது. இதனால் தன் மகன் Peterஐ காப்பாற்றமுடியாமல் போகவே Peter இறந்துவிடுகிறான். இதனால் மிகவும் நொந்து போன Walter அடுத்து செய்யும் ஒரு காரியம் இரு உலகங்களை புரட்டி போட போகிறது என தெரியாமல் செய்து விடுகிறார். .இந்த நிகழ்வுகள் நடப்பது 1980களின் மத்தியில்.

பல வருடங்களுக்கு பின் தற்போதைய காலத்தில் 2008ல் ,  Scienceக்கும் அப்பாற்பட்ட அல்லது தற்போதைய Scienceஆல் விளக்கம் அளிக்க முடியாத பல விஷயங்களையும், நிகழ்வுகளையும் (இதனை Fringe Science என்கின்றனர்) கண்டறிய, ஆராய FBI ஆல் Fringe Division என்னும் பிரிவு உருவாக்கபடுகிறது. இதில் பணியாற்றுபவள் கதாநாயகி Olivia. தானாக Auto Pilot மூலமாக பாஸ்டன் நகரில் தரை இறங்குகிறது ஒரு விமானம். உள்ளே இருந்த 147 பயணிகள் அனைவரும் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்து  எலும்புகள் மட்டும் எஞ்சிய நிலையில் இறந்திருக்கிறார்கள். இதை போல் பல விளக்கமுடியாத  நிகழ்வுகள் நடக்க ஆரம்பிக்கின்றன. இதனை ஆராய ஆரம்பிக்கிறாள் Olivia.

இதற்கு உதவ மற்றும் ஆராய விஞ்ஞானி Walter ஐ அணுகுகிறாள். ஆனால் Walter இருப்பதோ மனநல மருத்துவமனையில், மேலும் பழைய நினைவுகள் பலவற்றை மறந்த நிலையிலும்,  நிலையான மனநிலை இல்லாதவராக இருக்கிறார். எனவே அவரை கட்டுக்குள் வைக்கவும், செயல் பட வைக்கவும் அவரது மகன் Peter ஐயும் உடன் சேர்த்து கொள்கிறாள். இந்த மூவர் குழு Fringe நிகழ்வுகளை ஆராய ஆரம்பிக்கிறது. Peter தான் சிறுவயதிலேயே இறந்து விட்டானே எப்படி வந்தான் என கேட்பவர்களுக்கு விடை , இரண்டாவது சீசனில் .

இப்படி Fringe நிகழ்வுகளை ஆராய்ந்து , நடக்க போகும் விபரீதங்களை தடுத்து கேஸை முடிப்பதாக The X Files சீரீஸ் போலவே செல்லும் முதல் சீசன் ஏழு ,எட்டு  எபிசொடுகளுக்கு பிறகு புது தடத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறது. மதில்களை வழியே  ஊடுருவி சென்று பல பேங்க் safe deposit boxகளை கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல். அந்த safe deposit boxகளிருந்து எடுக்கப்பட்ட பாகங்களை இணைத்து உருவாக்கப்படும் teleportation device மூலமாக யாரும் தப்பவே முடியாத ஜெர்மன் சிறையில் இருந்து teleportation மூலமாக தப்புகிறான் Jones என்பவன்.

இதிலிருந்து விறுவிறுவென சூடு பிடித்து ஓடும இந்த சீரீஸ் முதல் சீசன் முடிவிலிருந்து ஜெட் வேகத்தில் பயணிக்கிறது. காரில் சென்று கொண்டிருக்கும் Olivia திடீரென காணாமல் போக... Peter 1978-1985 என பொறிக்க பட்டிருக்கும் தன் மகன் Peter கல்லறைக்கு Walter சென்று அஞ்சலி செலுத்த... காணாமல் போன Olivia 9/11/2001 இல் தீவிரவாதிகளால் இடிக்கப்பட்ட World Trade Center இல் இருக்க...ஆனால் வருடம் 2008 ... என பல திருப்பங்களோடு முடியும் முதல் சீசன் இரண்டாவது சீசனை உடனே பார்க்க வைத்து விடும். முதல் சீசனின் ட்ரைலர் கீழே


முதல் சீசனின் முடிவு தான் இப்படி என்றால் இரண்டாவது சீசனின் ஆரம்பம்  அடுத்து வரும் 20 வினாடிகள் டைட்டிலை கூட பார்க்க பொறுக்காமல் ஓட்ட வைத்தது. திடீரென காரிலிருந்து காணாமல் போன Oliviaவை தேடி Walter மற்றும் Peter கார் இருக்கும் இடத்திருக்கு வர, Walter காரின் உள்ளே சென்று ஆராய அடுத்து நடப்பதை கீழே உள்ள லிங்கில் பாருங்கள்...

A New Day in the Old Town / FRINGE

 முதல் சீசன் முடிவு போலவே இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன் முடிவுகளும் உங்களை அடுத்த சீசனுக்காக காத்திருக்க முடியாமல் இருக்க வைக்கும். அதிலும் மூன்றாவது சீசனின் முடிவு இந்த சீரீஸின் பெஸ்ட் Finale. நாலாவது சீசன் பாதி வரை நன்றாக செல்லும் சீரீஸ் அதற்கடுத்து எல்லா சீரீஸ் போல கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை தான். நாலாவது சீசனோடு முடித்திருக்கலாம். ஐந்தாவதாக 13 எபிசோடு கொண்ட சீசன் என இழுத்து போன வாரம் தான் முடித்திருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை  Sci-Fi ரசிகர்களுக்கான சரியான தீனி இந்த சீரீஸ் . அனைத்து சீசன்களும் முடிந்து விட்டதால் மொத்தமாக டவுன்லோட் செய்து பார்த்து விடலாம்.

- லக்கி லிமட்
Share:

13 comments:

  1. அறிமுகத்திற்கு நன்றி தமிழ்
    நான் அதிகமாக இந்த நாடகங்கள் பார்த்தது கிடையாது.
    கொஞ்ச நாள் முன்பு நான் பார்த்த ஷெர்லாக் சீரிஸ் மிகவும் நன்றாக இருந்தது.
    இந்த தொடரையும் பார்த்துவிடுகிறேன்.
    அடுத்து லாஸ்டும் நான் பார்த்தது கிடையாது அதனையும் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி கிருஷ்ணா வ வெ. முக்கியமாக Lost பார்த்து விடுங்கள்

      Delete
  2. சுவாரசியமான பதிவு!!! நம்மூரில் ஏதாவது சானலில் வருகிறதா என்ன?!

    ReplyDelete
    Replies
    1. நம்ம சானல்களில் கிடையாது. டோரண்டில் டவுண்லோட் செய்ய கிடைக்கிறது.

      Delete
  3. ஓகே டவுன்லோட் போட்டுடுவோம். :)

    ReplyDelete
  4. இதுவும் கிட்டத்தட்ட X-Files போல அட்டகாசமான Paranormal கதைன்னு கேள்விப்பட்டிருக்கேன். முதல் சீசன் மட்டும் டவுன்லோட் செய்து வச்சிருக்கேன். இப்ப Dexter, Homeland, Two and a Half Men..etcனு வாட்ச்லிஸ்ட் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. Dexter முடிஞ்சதும் இதை ஆரம்பிச்சிடவேண்டியது தான்.:)

    ReplyDelete
    Replies
    1. தல இது paranormal கதை இல்ல. அப்படி தோன்றினாலும் அட்டகாசமான time scifi சீரீஸ்

      Delete
  5. Back to the Future மூன்று பாகம் கொண்டது. Steven Spielberg தயாரிப்பில் உருவானது.

    H.G.WELLS in டைம் மெசின் நாவல் கூட நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  6. @CHARANG
    Back to the Future மூன்று பாகமும பல தடவை பார்த்து விட்டேன் நண்பரே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  7. பர பர ரெவ்யு. பதிவு நன்றாக இருக்குது. டவுன்லோட் லிங்க் இருந்த கொடுங்க. X -Files எனக்கு மிகவும் பிடித்த தொடர். அதையும் டௌன்லோட வேண்டும்.

    ReplyDelete
  8. பள்ளி பருவத்தி B​ACK TO THE FUTURE பார்த்தேன் , பிரமித்தேன் .வாவ் .

    அறிமுகத்துக்கு நன்றி . l​ost, fringe ,x​ files பார்க்கவேண்டும் . x ​files

    சினிமா பார்த்தேன் நன்று

    ReplyDelete