Mission: Impossible - Ghost Protocol - பேய் வரைமுறை (2011)



Mission Impossible ஸ்பை(Spy) பட வரிசையில் நாலாவது பாகம். Mission Impossible படங்களின் பிரதான நோக்கம் Action ஆக்ஸன். Action பட பிரியர்களுக்கு அனைத்துமே விருந்தளிக்க கூடியவை. நாலாவது பாகமும் இவ்வகையில் நம்மை ஏமாற்ற வில்லை. படத்தின் கதை என்னமோ ஏவுகணையை தடுப்பது தான். ஆனால் பரபரப்பான ஆச்ஸனில் இறுதிவரை படத்தை ஆர்வமாக பார்க்க வைத்து விடுகிறார்கள்.

ரஷ்ய சிறையில் இருக்கும் படத்தின் கதாநாயகனான Ethan Huntஐ (டாம் க்ரூஸ்) சிறையிலிருந்து Carter(மேலே படத்தில் இருக்கும் அழகி) மற்றும் Dunn(மூன்றாம் நபர்) இருவரும் மீட்பதில் இருந்து Mission ஆரம்பிக்கிறது. பின் மூவரும் சேர்ந்து Cobalt என்னும் அடையாள பெயருடைய வில்லனை யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அதன் ஒரு கட்டமாக ரஷ்யாவில் உள்ள Kremlin என்னும் இடத்தில் உள்ள Cobalt பற்றிய கோப்புகளை திருட செல்கிறார்கள் . கோப்புகளை திருடும் போது அங்கே இடையே Cobalt புகுந்து அவர்களை ரஷ்யர்களுக்கு காட்டி கொடுத்து விடுகிறான். மேலும் அந்த இடத்தை குண்டு வைத்து தகர்த்து அதற்கு காரணம் டாம் க்ரூஸ் கூட்டணியே என நம்ப வைத்து விடுகிறான்.

இதனால் ரஷ்ய அமெரிக்கா இடையே அறிவிக்கப்படாத போர் ஆரம்பமாகிறது. வில்லனோ அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்ய ஏவுகணையை ஏவ முயற்சியில் இறங்குகிறான். டாம் க்ரூஸ் கூட்டணி வில்லனை பிடிக்க Ghost Protocol Missionக்கு தள்ளபடுகிறார்கள். அதாவது அமெரிக்கவிடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்காது. அவர்கள் எங்கே மாட்டினாலும் அமெரிக்கா உதவிக்கு வராது. அவர்களாவே வில்லனை தடுக்க வேண்டும். இதற்கிடையே ரஷ்ய போலீஸ் இவர்களை தேடுகிறது. இவர்களோடு Brandt என்னும்(படத்தில் நாலாவது) அதிகாரியும் சேர்ந்து கொள்கிறான். அனைத்தையும் சமாளித்து டாம் க்ரூஸ் நால்வர் கூட்டணி கடைசி வினாடியில் ஏவுகணையை தடுத்து வெற்றி பெறுவதே மீதி படம் ஆக்ஸனோடு…

படத்தில் 15 நிமிடங்கள் நமது அனில் கபூர் வருகிறார். ஆனால் காமெடியன் மாதிரி காட்டப்படுகிறார். இதற்கு ஏன் அவர் என்னை பட விளம்பரத்தில் காட்ட வில்லை என பில்டப் கொடுத்தார் என தெரியவில்லை. படத்தின் கிளைமாக்ஸ் மும்பையில் நடக்கிறது. மற்றொரு முக்கியமான விஷயம் வில்லன் ஏவுகணையை சன் நெட்வொர்க் அலுவலகம் மூலமாக ஏவுகிறான். படத்தில் நமது சன் மியூசிக் , K டிவி எல்லாம் வருகிறது. சன் நெட்வொர்க் தனது விளம்பரத்தை ஹாலிவுட் படம் வரை கொண்டு வந்து விட்டது.

படம் முழுக்க பரபரப்பான காட்சிகளுக்கு குறைவில்லை. ரஷ்ய கட்டிடத்தில் கோப்புகளை திருடும் கட்டம் காமெடி கலந்த பரபரப்பாக உள்ளது. mission impossible 2 படத்தில் ஆரம்பித்த உயரமான இடத்தில் ஏறுவது போன்ற காட்சிகள் இப்படத்திலும் தொடர்கிறது . துபாயில் உலகிலே உயரமான பல மாடிகள் உள்ள கட்டிடத்தில் டாம் க்ரூஸ் ஏறுகிறார். இது போல் செய்ய முடியுமா என நினைக்க தோன்றினாலும் படமாக்கிய விதம் பரபரப்பான ஆக்சன் ரசிக்க வைக்கிறது. துபாயில் மணல் புயலோடு நடக்கும் கார் துரத்தலும் குறிப்பிடத்தக்க ஒன்று. மொத்தத்தில் ஆக்சன் பட பிரியர்களுக்கு அட்டகாசமான படம்.

துபாயில் உலகிலே உயரமான கட்டிடத்தில் படமாக்கிய விதம்


படத்தின் ட்ரைலர்

Share:

6 comments:

  1. அற்புதமான படம்... IMDB யில் 8.1 ரேட்டிங்..அதுக்காக தான் படத்துக்கு போனேன்..
    சாதா தியேட்டர்ரை விட படத்தை IMAX யில் பார்த்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்...

    ReplyDelete
  2. அக்சன் காட்சிகளும் டாம் குரூசின் நடிப்பும் வியக்க வைத்தது. குறிப்பாக டுபாய் கட்டடக் காட்சிகள்.

    விமர்சனத்திற்கு நன்றி. அடியேனும் ஒரு விமர்சனம் இட்டுள்ளேன். முடிந்தால் வாசிக்கவும்.

    கோஸ்ட் புரடகோல் விமர்சனம்

    ReplyDelete
  3. ராஜ் மற்றும் Mayu Mayooresan ,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  4. இவ்வளவு நாள் உங்கள எப்படி மிஸ் பண்ணேன் என்று தெரியவில்லை.
    அருமையான விமர்சனம்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. Kumaran,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  6. SUper padam nanba. Unga pathivumthan!

    ReplyDelete