செல்லினம் - ஆன்ராய்டு மொபைல் தமிழ் எழுதி

நண்பர்களே,
         கணிணியில் தமிழில் எழுத பல மென்பொருள்கள் உள்ளன. உதாரணமாக Google Indic , NHM Writter என்ற சிறந்த மென்பொருள்கள் பலரால் தமிழில் எழுத பயன்படுகிறது. ஆனால் மொபைல்களுக்கு தமிழில் எழுத பல மென்பொருள்கள் இணையத்தில் கிடைத்தாலும் எந்த மென்பொருளும் சிறப்பாக இல்லை எனலாம். முக்கியமாக ஆன்ராய்டு மொபைல் தற்போது பலரால் பயன்படுத்தபட்டு வருகிறது. ஆன்ராய்டு மொபைல்களுக்கென சிறப்பான தமிழ் எழுதி இதுவரை இல்லை எனலாம். இந்த குறையை தீர்க்க வந்துள்ளது செல்லினம் என்ற இந்த மென்பொருள்.

ஏற்கனவே ஐபோன்களுக்கு மட்டுமே செயலாற்றிய இந்த மென்பொருள் தற்போது ஆன்ராய்டு மொபைல்களுக்கும் வந்துள்ளது. இதுவரை உள்ள தமிழ் எழுதிகளை விட சிறப்பாகவும் , எளிதாகவும் உள்ளது. மேலும் முக்கிய வசதியாக தமிழ் வார்த்தை  பரிந்துரைகளும் காட்டுகிறது.


இந்த மென்பொருள் தமிழில் எழுத இருவகையான விசைபலகை முறைகளை தருகிறது.

  1. தமிழ் 99
  2. முரசு அஞ்சல்
 முதலில் தமிழ் 99 மூலமாக எவ்வாறு எழுதுவது என பார்ப்போம். இதில் தமிழ் என எழுத த , ம+இ=மி , ழ+புள்ளி=ழ் என எழுத வேண்டும். மேலும் செல்லினம் என்பதை ச+எ=செ,ல+புள்ளி=ல்,ல+இ=லி,ன,ம+புள்ளி என எழுதவேண்டும். மேலும் விபரங்களுக்கு Tamil99 keyboard எனகூகுளில் தேடவும்.

இரண்டாவது முறையான முரசு அஞ்சல் மிகவும் எளிது. தங்கலிஷ் முறையில் டைப் செய்தால் போதும். உதாரணம் amma = அம்மா. சில எழுத்துகளை மட்டும் உதாரணமாக ன,ந எழுதும் போது மட்டும் எதுவென தேர்வு செய்ய வேண்டும்.

எனது ஆன்ராய்டு HTC மொபைலில் சிறப்பாக இயங்குகிறது இந்த மென்பொருள். எனது மொபைல் ஆன்ராய்டு வெர்சன் 2.3.எனது மொபைலில் சிறப்பாக இயங்குவதை கீழே வீடியோவில் காணலாம். இதன் மூலம் பேஸ்புக் பயன்படுத்துவது மிக எளிதாக உள்ளது.


இந்த மென்பொருள் பற்றி மேலும் அறிய இதன் அதிகாரபூர்வ இணையதளமான http://sellinam.com/ செல்லுங்கள். இதனை Google Play Store ன் மூலமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.Download Sellinam

Share:

8 comments:

  1. டவுண்லோட் பண்ணிக்கிட்டேன். நன்றி தல!

    ReplyDelete
  2. Galaxy Note ll ஜெல்லி பீன்" இலும் நன்றாக வேலை செய்கிறது. இச்செயலிக்கு கொடுத்திருக்கும் விளக்கங்களும் தெளிவாக உள்ளன.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Google Play'விலும் இதன் செயலியை நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

      Delete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  4. மொபைல் செயல்பாடுகளை வீடியோ எப்படி எடுத்தீர்கள் லிமட்... இதற்கென்று தனியான சாப்ட்வேர் உண்டா ?

    ReplyDelete
    Replies
    1. screencast என்ற மென்பொருளை பயன்படுத்தினேன் ரபிக். ஆனால் இதை பயன்படுத்த உங்கள் மொபலை root செய்திருக்க வேண்டும்

      Delete
    2. ரூட் செய்தால், வாரண்டி வாய்ட் ஆகி விடும் என்று கூறுவார்களே... அதற்கு பிறகும் செய்தீர்களா என்ன ?

      என்னுடைய கேலக்ஸி கிராண்டில் Apps ஐ மைச்ரோSD க்கு நகற்ற ரூட் செய்ய எண்ணி இருக்கிறேன். வாரண்டி போய் விடுமே என்று மனம் தடுக்கிறது.

      Delete
    3. ஆமாம் ரபிக் ரூட் செய்வதால் பல நன்மைகளும் உண்டு. எனது internal memeory 150mb மட்டுமே எனவே நிறைய apps நிறுவ ரூட் செய்து sd cardஐ internal memory போல் பாவித்து வருகிறேன். ரூட் செய்தால் மட்டுமே இது சாத்தியம்

      Delete