செல்லினம் - ஆன்ராய்டு மொபைல் தமிழ் எழுதி

நண்பர்களே,
         கணிணியில் தமிழில் எழுத பல மென்பொருள்கள் உள்ளன. உதாரணமாக Google Indic , NHM Writter என்ற சிறந்த மென்பொருள்கள் பலரால் தமிழில் எழுத பயன்படுகிறது. ஆனால் மொபைல்களுக்கு தமிழில் எழுத பல மென்பொருள்கள் இணையத்தில் கிடைத்தாலும் எந்த மென்பொருளும் சிறப்பாக இல்லை எனலாம். முக்கியமாக ஆன்ராய்டு மொபைல் தற்போது பலரால் பயன்படுத்தபட்டு வருகிறது. ஆன்ராய்டு மொபைல்களுக்கென சிறப்பான தமிழ் எழுதி இதுவரை இல்லை எனலாம். இந்த குறையை தீர்க்க வந்துள்ளது செல்லினம் என்ற இந்த மென்பொருள்.

ஏற்கனவே ஐபோன்களுக்கு மட்டுமே செயலாற்றிய இந்த மென்பொருள் தற்போது ஆன்ராய்டு மொபைல்களுக்கும் வந்துள்ளது. இதுவரை உள்ள தமிழ் எழுதிகளை விட சிறப்பாகவும் , எளிதாகவும் உள்ளது. மேலும் முக்கிய வசதியாக தமிழ் வார்த்தை  பரிந்துரைகளும் காட்டுகிறது.


Share: